திங்கள், 29 ஜூன், 2020

இந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் பார்த்தால் மட்டுமே நிரந்தர தீர்வை நோக்கி பயணிக்க முடியும்

சுமதி விஜயகுமார் : சென்ற வருடம் தெலுங்கானாவில் பிரியங்கா ை யார் கொடுத்தார்கள் என்ற கேள்வி அப்படியே இருக்கிறது.
மரணத்தில் குற்றவாளிகள் என்று நிரூபிக்க படாதா நபர்களை போலீஸ் என்கவுண்டர் செய்தது. அதை வரவேற்றது பெருவாரியான மக்கள் சமூகம். இப்போது வந்து போலீஸ்க்கு ஒருவரை கொள்ளும் அதிகாரம் யார் கொடுத்தது என்று கேட்பவர்களும் அவர்களே. சரி, பிரியங்கா கொலை வழக்கில் குற்றவாளிகள் தான் என்கவுண்டர் செய்யப்பட்டர்கள் ஆனால் சாத்தான்குளம் கொலை வழக்கில் இரண்டு அப்பாவிகள் கொலை செய்யப்பட்டார்கள் என்று வாதிட்டாலும், இரண்டு சம்பவங்களிலும் காவல்துறைக்கு அந்த அதிகாரத்த
சாத்தான்குள கொலை வழக்கை அமெரிக்கா George Floyd கொலையுடன் இணைத்து பார்ப்பது என்பது மிக பொருத்தம். ஆனால் சாத்தான்குள கொலைகளை உண்மையில் Floyd கொலையுடன் சரியாக பொறுத்துகிறோமா என்றால் இல்லை. Floyd கொலையை வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்கள் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை அடிப்படையாக வைத்துதான் Black lives matter என்று உலகம் முழுவதும் போராடுகிறார்கள். அமெரிக்காவில் நிற வெறி என்றால் இந்தியாவில் ஜாதி வெறி.

வர்க்க வேறுபாடு உலகெங்கிலும் ஒன்று தான். வறுமையினால் திருடுபவனுக்கு தண்டனையுடன் சேர்ந்து அடிஉதை கிடைக்கும். திருடும் பணம் அதிகமாக அதிகமாக தண்டனைகள் குறையும். திருடிய பணத்திற்கு எத்தனை சைபர் போட வேண்டும் என்று நமக்கு தெரியாத குற்றங்களில் திருடர்கள் குறைந்தபட்சம் கைது கூட செய்யப்படுவதில்லை என்பதே உண்மை. இது உலகிற்கு பொதுவானது.
ஆனால் இந்தியாவில் வர்க்க நிலையை தாண்டி சாதியம் முக்கிய பங்காற்றுகிறது என்பதை ஒவ்வொரு சமயத்திலும் நாம் சிந்திக்க மறுப்பது ஒடுக்கப்பட்டோர் மேல் நிகழும் குற்றங்களுக்கு ஒரு விதத்தில் நாமும் துணை போகிறோம் என்பதே உண்மை.
சாத்தான்குள கொலைகளில் இறந்த அந்த இரண்டு பேரும் எந்த அளவிற்கு சித்ரவதைக்கு உள்ளாக்க பட்டுள்ளார்கள் என்பது ஓரளவிற்கு நமக்கு தெரிய வருகிறது. அதில் தண்டிக்கப்பட்டதாக சொல்லப்படும் இரண்டு அதிகாரிகளுக்கு மட்டும் தான் பங்கு இருக்கிறது என்று சொல்வது அபத்தம். ஒரு வலை பின்னல் மாதிரி கூடுதலான நபர்களின் உதவியுடன் நடந்திருக்கிறது என்றால் இது வெறும் தனிப்பட்ட பிரச்சனை மட்டும் இல்லை, இதனுடன் சாதியமும் சேர்ந்துள்ளாகவே பார்க்க வேண்டும்.
பலர் சொல்லி கேட்பதுண்டு, பார்ப்பனர்களின் எத்தனை ஏழை பார்ப்பனர்கள் உள்ளார்கள் தெரியுமா என்று? பார்ப்பனர்களில் மட்டும் இல்லை, எல்லா சாதிகளில் ஏழைகள், அறிவாளிகள், முட்டாள்கள், நல்லவர்கள், கெட்டவர்கள் என்று அனைவரும் உள்ளடக்கம். இப்போது கேள்வி என்னவென்றால் ஜெயராஜ், பென்னிஸ் போன்ற எத்தனை பேர் உயர் சாதிகளில் கொடுமையாக கொல்லப்பட்டார்கள், அதில் குற்றம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்து என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டும். அப்போது தெரியும் பெரியாரும் அம்பேத்கரும் ஏன் சாதியை அழிக்க நினைத்தார்கள் என்று.
சாத்தான்குள கொலை வழக்கு உலக அளவிற்கு பரப்புவதற்கு பாடகி சுசித்ராவின் முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால் Floyd கு Black lives matter என்பது போல் ஜெயராஜ், பென்னிஸ்கு Dalits and minoritiy lives matters என்று சொல்ல ஏன் தவறுகிறோம்.
இந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் பார்த்தால் மட்டுமே நிரந்தர தீர்வை நோக்கி பயணிக்க முடியும்

கருத்துகள் இல்லை: