வியாழன், 2 ஜூலை, 2020

ஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வேண்டும், காவலர் ரேவதிக்கும், மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும் பாதுகாப்புத் தர வேண்டும்.. வீடியோ


News18 Tamil : சாத்தான்குளம் வழக்கில் ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டித் தப்பிவிட நினைக்கக் கூடாது என்று தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
ஜெயராஜ் பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கில், பல்முனை அழுத்தத்தால் சட்டப் பொறியில் தமிழக அரசு சிக்கிக் கொண்டதாகவும், இரட்டைக் கொலைக்குக் காரணமான அனைவரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாளே முதலமைச்சர் விடுத்த அறிக்கையில், குற்றச் சம்பவத்தைத் திரையிட்டு மறைத்து தன்னிச்சையாக இறுதித் தீர்ப்பு எழுதினார் எனவும் அவர் சாடியுள்ளார். அதிமுக ஆட்சியில் அப்பாவி மக்கள் மட்டுமின்றி, மாஜிஸ்திரேட்டுக்கே உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெட்டவெளிச்சமானதை நாடே பார்த்ததாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வையும், மக்களும், அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், வணிகர்களும் பார்த்துக்கொண்டு இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளா

ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டித் தப்பிவிட நினைக்கக் கூடாது - ஸ்டாலின் வலியுறுத்தல் சாத்தான்குளம் வழக்கில் ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டித் தப்பிவிட நினைக்கக் கூடாது என்று தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டித் தப்பிவிட நினைக்கக் கூடாது - ஸ்டாலின் வலியுறுத்தல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். ஜெயராஜ் பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கில், பல்முனை அழுத்தத்தால் சட்டப் பொறியில் தமிழக அரசு சிக்கிக் கொண்டதாகவும், இரட்டைக் கொலைக்குக் காரணமான அனைவரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாளே முதலமைச்சர் விடுத்த அறிக்கையில், குற்றச் சம்பவத்தைத் திரையிட்டு மறைத்து தன்னிச்சையாக இறுதித் தீர்ப்பு எழுதினார் எனவும் அவர் சாடியுள்ளார். அதிமுக ஆட்சியில் அப்பாவி மக்கள் மட்டுமின்றி, மாஜிஸ்திரேட்டுக்கே உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெட்டவெளிச்சமானதை நாடே பார்த்ததாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வையும், மக்களும், அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், வணிகர்களும் பார்த்துக்கொண்டு இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். Also see: இதில் நெருக்கமான தொடர்பு இருப்பதாக கூறப்படும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசைச் சேர்ந்த சிலரையும் விசாரிக்க வேண்டும் எனவும் தலைமைக் காவலர் ரேவதிக்கும், மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும் உரிய பாதுகாப்புத் தர வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: