இந்துபோர்ட் ராசரத்தினம் |
சேர் பொன்.ராமநாதன் |
கலாச்சாரம், சமுகவியைல் என்பது
எல்லாம் ஒரு குறிப்பிட்ட வகைய சார்ந்தது என கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படிஅல்ல!
வடமாகாண மக்களின் கலாச்சாரம் அரசியல் சார்ந்த சிந்தனையும் கிழக்குமாகாண மக்களின் நிலையும் சில வேறுபாடுகளை கொண்டிருக்கிறது.
சேர் பொன்அருணாசலம் |
மணி அய்யர் |
கிழக்குமாகாணம் ஓரளவு பல்லின மக்கள் வாழும் இடமாக இருப்பதுவும்,
வடக்கு மாகாணம் பெருமளவு தமிழர்கள் மட்டுமே வாழும் இடமாக இருப்பதுவும் கவனத்தில் கொள்ளவேண்டிய
விடயமாகும்.
மலையக மக்கள் வடக்கு மக்களோடு தொடர்புகள் அற்ற நிலையில் இருப்பது வெறுமனே ஒரு பூகோள ரீதியான விடயம் மட்டும் அல்ல.
இங்கேதான் வடமாகாண மக்களின் ஜாதீய மதவாத சிந்தனையின் பரிணாமம் பற்றி கவனத்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது .
இதன் பின்னணியில் நடந்து முடிந்த போராட்டத்தின் பல தன்மைகளை உற்று நோக்கவேண்டி உள்ளது.
விடுதலை போராட்டத்தை பாசிச சக்திகள் ஹைஜாக் பண்ணி முழுக்க முழுக்க ஒரு பாசிச வெறியாட்டமாக ஆடி முடித்த வரலாறு ஒரு பெரிய பாடத்தை உலகுக்கு வழங்கி இருக்கிறது
ஜாதி மத பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உள்ளகத்தே ஒழித்து மறைத்து கொண்டு எழும் குறுந்தேசிய வாதம் எப்படி இருக்கும் என்பதை இது காட்டுகிறது.
இந்த பாசிச சக்திகளின் உருவாக்கம் வளர்ச்சியானது வடமாகாண தமிழர்களின் வாழ்வியலின் ஒரு அரசியல் பரிணாம வளர்சியாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.
மலையக மக்களை மட்டுமல்ல எந்த மக்களையும் சக மனிதர்களாக பார்ப்பதை ..அவர்களின் வைதீக பார்ப்பனீய சைவ சமய கோட்பாடுகள் அனுமதிப்பதில்லை.
வீரகேசரி வாசு அய்யர் |
தனிப்பட்ட ரீதியில் மிகவும் நல்லவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருக்கும் மனிதர்கள் கூட யாழ்மையவாதத்தின் அடாவடி நோயால் பாதிப்புற்று சக மனிதர்களை நேசிக்க மறந்து போயினர்.
முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா மன்னார் மூதூர் திருகோணமலை மட்டகளப்பு அம்பாறை மாவட்டங்களில் குடியமர்ந்த மலையக மக்களின் முழு சக்தியையும் இந்த பாசிச சக்திகள் பயன்படுத்தின.
அதனால் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் மூச்சு காட்டாமலேயே மௌனமாகி போனார்கள்.
அவர்களின் உறவினர்களும் அயலவர்களும் மலையகத்தில் சிங்களவர்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்
இந்நிலையில் தங்களின் போராட்ட பங்களிப்புக்களினால் மலையகத்தில்
ஈழநாடு ஹரன் அய்யர் |
அவர்களின் ஆழமான மௌனம் இன்றுவரை தொடர்கிறது.
உரத்து குரல் எழுப்பாது மௌனமாக கண்ணீர் வடிக்கும் மலையக குடும்பங்கள் எத்தனை என்று எந்த புலம் பெயர்ந்தவராவது மெழுகுதிரி ஏற்றி இருப்பாரா?
இந்த யாழ்ப்பாண சைவசித்தாந்தம் கட்டமைத்த வைதீக வெறி கொஞ்சம்கொஞ்சமாக அங்குள்ள எல்லா ஜாதிகளுக்குள்ளும் எல்லா மதங்களுக்குள்ளும் ஊடுருவி உள்ளது என்பதுதான் இன்றாய நிலை
ஏனைய கிறிஸ்தவர்களை யாழ்மையவாத கிறிஸ்தவர்கள் தங்களை கொஞ்சம் புனிதர்களாக கருதுகிறார்கள் . யாழ் சைவர்கள் எனைய இந்துக்களை விட தாங்கள் மேலோர் என்று கருதுவதை போல..
இந்த யாழ் மையவாதகோட்பாடுகள் வெறுமனே ஒரு ஜாதிக்கு மட்டும்தான் உரியது என்பது அல்ல . ஒரு காலத்தில் அப்படி இருந்திருக்கலாம் . ஆனால் இன்று எல்லா ஜாதிக்குள்ளும் அந்த யாழ் மையவாத வியாதி பரவிவிட்டது.
அதாவது சக மனிதரை சக மனிதராக கருத முடியாமை!
சுததந்திரன் ஷர்மா |
சுமார் நூறு ஆண்டுக்களுக்கு முன்பு வரை அங்குள்ள கோயில்களில் அந்தந்த ஊர் பூசாரிகளே பூசைகளை செய்துவந்தனர் .. கோயில்களும் அவர்களுக்கே உடமையாகவும் இருந்தன.
தமிழ்நாட்டு மடங்களுக்கும், தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்புகளால் இந்த நிலை மாறத்தொடங்கியது.
தமிழ்நாட்டில் இருந்து மனுதர்ம வைதீக கோட்பாடுகளை பெருமளவில் இறக்குமதி செய்தவர் ஆறுமுக நாவலர் . சேர் பொன்னம்பலம் ராமநாதன் . இந்து போர்ட் ராஜரத்தினம் போன்றோர்
1923 டிசம்பர் 1 இல் சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி போன்றோரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பெற்ற சைவ வித்தியாபிவிருத்திச் சங்கத்தின் (இந்துபோர்ட்) வளர்ச்சியிலே முக்கிய பங்காற்றினார்.
சைவ வித்தியா விருத்திச்சங்கத்துடன் ஒன்றித்தார். இதனால் "இந்து போர்ட்' என்றால் சு.இராசரத்தினத்தையே குறிப்பதாக அமைந்தது.
யாழ்ப்பாணக் குடாநாடு, முல்லைத்தீவு, பதுளை, நாவலப்பிட்டி, புத்தளம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, ஊர்காவற்றுறை உட்பட நெடுந்தீவு முதலான இடங்களில் 174 சைவப் பாடசாலைகள், 7 ஆங்கிலப் பாடசாலைகள், 16 பன்னவேலைப் பாடசாலைகள், தற்காலிக அங்கீகாரத்துடனான மேலும் 63 பாடசாலைகள், 2 அநாதை இல்லங்கள், ஓர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை என்பவற்றை சைவவித்தியா விருத்திச் சங்க நிர்வாகத்தின் மூலம் உருவாக்கி இயங்கச் செய்தார்.
1928 அக்டோபரில் திருநெல்வேலியில் சைவாசிரியர் பயிற்சி நிறுவனம் இவரது முயற்சியால் உருவானது.
இப்படியாக இவர்கள் ஆரம்பித்த கல்வி முயற்சிகள் எல்லாமே சைவசமயத்தை முதன்மை படுத்தியே ஆரம்பித்தனர்
இவர்களின் பள்ளிகூடங்களில் பெரும்பாலும் ஆறுமுக நாவலர் எழுதி பதிப்பித்த நூல்களே இருந்தன .
அவை சின்னசிறு சிறார்களின் மனதில் எல்லாம் ஜாதிய விசத்தையும் மதவெறியையும் தவறாமல் போதித்தன.
தேடி எடுத்த நாயன்மார்களின் கதைகள் இவற்றில் மிகவும் பிரபலமனவையாகும். அத்தனை நாயன்மார்களின் வரலாறுகளும் ஆரம்பிக்கும் தொடக்க வரிகளாக "
இவர் உயர் குடி வேளாளர் மரபில் உதித்தவராகும் அல்லது இவர் உயர்குடி அந்தணர் மரபில் உதித்தவராகும் என்று இருக்கும்
சாதிப்பாகுபாடு என்பது மிகவும் சாதரணமான விடயம் , அது தவறே இல்லை . மேலும் அதை படைத்தது எல்லாம் வல்ல முருகப்பெருமான் என்பது போல கற்பிதம் செய்தனர்.
அடுத்தபடியாக பத்திரிகைகள் இந்த ஜாதீய வைதிக மத வியாதிகளை பரப்பின.
தமிழ்நாட்டில் இருந்து வந்த மூன்று பார்ப்பனர்கள் சுமார் முப்பது ஆண்டுகள் இந்த கைங்காரியத்தை செய்தார்கள்
வீரகேசரி - ஆசிரியர் ஸ்ரீ நிவாசன் அய்யங்கார் (இந்து பத்திரிகையின் கஸ்தூரி ரங்கன் குடும்ப சம்பந்தி),
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் அய்யர் .இவர் திருவையாறு வைதீக பார்ப்பனராகும்
மகேஸ்வர சர்மா,- சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர் ..
இந்த மூன்று பார்ப்பன பத்திரிகையாளர்கள் கற்றுகொடுத்த வழியிலேயே பின்வந்த இலங்கை தமழ் பத்திரகை ஆசிரியர்களும் பணியாற்றினார்கள்
தாங்களும் பார்ப்பனீய வழியில் எழுதி எழுதிய ஒரு fake பார்பனர்களாகவாவது மாறிவிடலாம் என்று முயற்சி செய்தார்கள்.
இத்தனையும் போதாதென்று கல்கி ஆனந்தவிகடன் குமுதம் கலைமகள் போன்றவையும் தம் பங்கிற்கு பார்பனீயத்தை இலங்கையில் வளர்த்தன.
இதே காலப்பகுதியில் நல்லூரில் இருந்த சிவசுபிரமணிய அய்யர் என்பவர் நல்ல கதாபிரசங்கியாக இருந்தார் .( CSS மணி பாகவதர் அல்லது மணி அய்யர் ) கந்த புராணம் அறுபது மூன்று நாயன்மார்கள் புராணம் மகாபாரதம் ராமயாணம் போன்றவற்றை இலங்கை முழுவதும் குறிப்பாக யாழ்ப்பான கோயில்களில் திருவிழாக்களில் இவரது புராணங்கள் இடம்பெறும் .. தமிழகத்து கிருபானந்த வாரியார் பாணியில் அவரை விட கொஞ்சம் அதிகமாக ஜன ரஞ்சகமாக பாட்டுபாடி புராண புனை கதைகளை பரப்பினார்.
இவர் பின்னாளில் நல்லூரில் ஒரு ஆதீனத்தை நிறுவினார்.
தற்போது உள்ள புதிய மடாதிபதியிடம் இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் தலைவர்கள் வந்து ஆசீர்வாதம் வாங்குவது ஒரு மரபாகிவிட்டது . காஞ்சி சங்கராச்சாரி பாணியில்..
பார்பனீயம் கட்டமைத்த சமுகம் ஒரு இருட்டில்தான் இருக்கும் என்பதற்கு உத்தர பிரதேசத்தை விட சரியான உதரணமாக இலங்கை வடக்கு மாகாணத்தை கொள்ளலாம்
ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இலங்கையில் ஆட்சி செய்த பெரும்பான்மயின மக்கள் பௌத்த மதத்தை சார்ந்தவர்கள்.
பௌத்தம் கல்விக்கு முக்கியத்துவம கொடுத்தது,
எல்லா மக்களுக்கும் இலவச கல்வியை கொடுத்தது.
ஜாதி மத வித்தியாசங்களை புறந்தள்ளியது .
இன்று இலங்கை வடமாகாண மக்கள் கல்வியில் பின் தங்காமைக்கு காரணம் பௌத்தம் கட்டமைத்த அரசியல் சாசனம்தான்
கல்வியில் உயர்ந்திருந்த இலங்கை வடக்கு மாகாண மக்களின் அரசியல் தோல்வி அடைந்தமைக்கு காரணம் :
பார்ப்பனீயம் கட்டமைத்த சைவசித்தாந்தமும் அதன் கோட்பாடாகிய
நான் வேறு நீ வேறு ..
நான் இந்த ஜாதி நீ அந்த ஜாதி ..
நான் உசத்தி நீ தாழ்த்தி
என்ற கருத்தியல் கோட்பாடுதான்.
இந்த பார்ப்பனீய கோட்பாடானது பொருளாதார ரீதியான ஒற்றுமையையும் தாண்டி மனிதர்களை பிரிக்கும்
அப்படி பிரித்து வைப்பதுதான் பார்பனீயம்
இதை உணராதவரையில் மீட்சி இல்லை .
3 கருத்துகள்:
அடிப்படையில் யாழ்ப்பாண சாதிய முறைமை மற்றும் அதன் கொடுமையான நடைமுறைகள் என்பன நிலமானிய சமுதாய அமைப்பை அடியொற்றி வளர்ந்தது. இந்த கட்டுரையில் குறிப்பிடப்படும் மூவரின் வருகைக்கு முன்பே மிக நீண்டகாலமாக இருந்து வருவது. அதுமட்டுமல்ல இலங்கையில் சிங்கள மக்களிடமுள்ள சாதியமைப்பை போன்று நிலஉடைமையாளர்களை சாதிப்படிநிலையின் உச்சத்தில் வைத்திருப்பது. இந்த சமுதாய அமைப்பில் பார்ப்பனர்களுக்கு அதிகாரம் எதுவும் இல்லை. அவர்கள் வெள்ளாளர்களின் கைப்பொம்மைகளாகவே இயங்கவேண்டிய நிலைமை இருந்தது. இந்த உண்மைகளை இந்த கட்டுரை குறிப்பிடத்தவறிவிட்டது. பாரம்பரிய சமய வழிபாடுமிக்க கோவில்கள் பார்ப்பனிய முறைப்படி வணங்கப்படும் கோவில்களாக மாற்றபப்டும் நடைமுறைகள் ஆறுமுக நாவலரின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன. இந்த மாற்றங்கள் ஏற்படாத இடத்திலும்கூட யாழ்ப்பாண சாதிமுறைமை இதுபோலவே கொடுமையானதாக இருந்திருக்கும் என்பதுதான் உண்மை. கே. டானியல், தெணியான் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்களும் இந்த செய்தியைத்தான் சொல்கின்றன.
தமிழகத்திலும் ஏனைய தென் இந்திய மாநிலங்களில் இருந்தது போலவே ஜாதி யாழ்ப்பாணத்தில் இருந்ததது உண்மைதான் ஆனால் அது முழு மூச்சாக நிறுவனப்படுத்த பட்டதும் . ஜாதி என்பது கடவுள் படைத்த புனித சமுக கட்டமைப்பு என்று போதிக்கப்பட்டு சமுக சமரசத்துக்கு ஆப்பு அடித்தது ஆறுமுகநாவலரும் அவரின் பள்ளிகூட நூலகளும் சைவத்தமிழ் பள்ளி கூட்டங்களும்தான் .. மேலே அடியேன் எழுதிய கருத்துக்கள் அத்தனையும் சரியான தரவுகள் என்றே கருதுகிறேன் .. மேலும் இது பற்றி இதுவரை ஒருவரும் சரியான ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை .. இனியாவது இது பற்றி ஆய்வுகள் மேற்கொண்டு மறைக்க பட்ட வரலாறுகள் வெளியே கொண்டு வரப்படவேண்டும் நன்றி
மேற்கூறிய தரவுகள் தவறென்று சொல்வதற்கில்லை. தவறென்பது ஏதோ ஆறுமுக நாவலராலும் தமிழ் நாட்டிலிருந்து வந்த பார்பனராலும்தான் யாழ்ப்பாணத்தில் சாதீயம் வேரூன்றியது என்று சொல்வதே. யாழ்ப்பாண சாதிய சமூகத்தின் குடிமை என்ற நடைமுறை நீண்ட காலமாக இருந்துவருவது. நிலவுடைமையாளரான வெள்ளாளர் தமது கட்டுப்பாட்டின்கீழ் பஞ்சமர் என்று சொல்லப்படும் மக்களை ஏறக்குறைய அடிமை நிலையிலேயே வைத்திருந்தனர். இவர்கள் குடிமக்கள் என்ற பதத்துக்குள் அடங்குவர். அவர்கள் குடியிருக்கும் நிலம் கூட அவர்களுக்கு சொந்தமாக இருக்கவில்லை. அவர்கள் எங்கே குடியிருக்க வேண்டும் , எவ்வகையான தொழில்களை செய்ய வேண்டும் போன்ற விடயங்கள் உட்பட அவர்களின் தனிப்பட்ட விடயங்களான அவர்கள் யாரைத்திருமணம் செய்ய வேண்டும் என்பது கூட இந்த வெள்ளாளர்களால் தான் கட்டுப்படுத்தப்பட்டு வந்தன. இந்த மக்களை கட்டுண்ட சாதிகள் எனவே பாரம்பரியமாக அழைத்தும் வந்தார்கள். சாதிப்படிநிலைகள் சரியான முறையில் பேணப்படுவதையும் இந்த வெள்ளாளர்கள்தான் உறுதி செய்துவந்தனர். அந்த படிநிலை உடைவது வெள்ளாளரின் இருப்புக்கு ஆபத்துவிளைவிக்கக்கூடியவை என்பதனையும் அவர்கள் நன்கு அறிந்து வைந்த்திருந்தனர். ஆறுமுக நாவலரின் பிறப்புக்கு முன்பே இவை நீண்டகாலமாக இருந்துவந்த நடைமுறைகள். வைதீக மதத்தின் அடிப்படையில் இந்த வெள்ளாளர்கள் எல்லோரும் கடைநிலை வர்ணமாகிய நாலாம் வர்ணத்து சூத்திரர்கள். இதனை இலங்கை வெள்ளாளர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. அவர்களின் பார்வையில் பார்ப்பனர்கள் "நாங்கள் கட்டிய கோவில்களில் பூசை செய்வதனால் ஐயர்மாரும் எங்களுடைய குடிமக்களில் ஒருவர்தான்" என்பதே. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலமானியமுறைமை சிதைவடைய ஆரம்பித்தது. கிறிஸ்தவமதத்தின் தாக்கம் அதிகம் நிலவியது. இதனை தடுக்கத்தான் ஆறுமுக நாவலர் வைதிக மதத்தை கையிலெடுத்தார். இந்த குடிமை நடைமுறை இருபதாம் நூற்றாண்டில்கூட தொடர்ந்தது. இலங்கை சுதந்திரமடைந்த பின்பு இடது சாரி கருத்துக்கள் மற்றும் அதனையொட்டி நடந்த போராட்டங்களின் பின்பே இந்த குடிமை முறை பெரும்பாலும் இல்லாமல் போனது.
கருத்துரையிடுக