வியாழன், 9 மே, 2019

தயாரிப்பாளர்கள் சங்கத்தை வழிநடத்த பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு அறிவிப்பு:

bharathi rajaதினமணி :சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை வழிநடத்த இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர் கொண்ட 'அட்  ஹாக்' குழுவை நியமித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  தமிழக அரசு நடவடிக்கை   சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை வழிநடத்த இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர் கொண்ட 'அட்  ஹாக்' குழுவை நியமித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து சங்கத்தை நி" நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து சங்கத்தை நிர்வகிக்க சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. இந்த நியமத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்தார்.

அதேசமயம் மே 1-ஆம் தேதியன்று நடைபெறுவதாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட  சிறப்பு அதிகாரி சேகர் தெரிவித் தார்.
தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகிகளால் புதனன்று நடைபெறுவதாக திட்டமிடப்பட்ட பொதுக்குழு கூட்டமானது நடைபெற வாய்ப்பில்லை என்பது தொடர்பான  அறிவிப்பு, அவரது அறிவுறுத்தலின் பேரில்  தயாரிப்பாளர் சங்க அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை வழிநடத்த இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர் கொண்ட 'அட்  ஹாக்' குழுவை நியமித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக அரசு சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அட் ஹாக் கமிட்டி பொறுப்பாளர்கள் விபரம் பின்வருமாறு:
இயக்குநர் பாரதிராஜா
தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்
நடிகர் SVசேகர்
தயாரிப்பாளர் JSK.சதிஷ்குமார்.
நடிகர் K.ராஜன்
தயாரிப்பாளர் T.சிவா
தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன்.
தயாரிப்பாளர் துரைராஜ்
தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்.

இனி இவர்களின் கீழ் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இயங்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: