செவ்வாய், 7 மே, 2019

தமிழக அதிரை இன்னொரு காத்தான் குடியாகிறதா ????

Safeena Salam : ISIS சஹ்ரானின் விஷப்பேச்சுக்கள் குர் ஆனிற்கு எதிரானது எனத் தெரிந்தும் அதைப் பற்றி கண்டனமோ, அதை தடுக்கவோ எந்த முயற்சியும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்ற இயக்கங்கள் இன்று அவனுக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை என அலறுவது எதனால் ? ஏன்? நம்மையும் முடக்கிவிட்டால் துட்டுக்கு என்ன பண்றது என்ற பயமா ? அல்லது உங்களுள் உறங்கிய மிருகம் அவனிடம் சுதந்திரமாய் உலவியதை ரசித்ததாலா ? 
இன்னொரு காத்தான்குடியாகிறதா தமிழக அதிரை ??
ஒரு மாதம் முன் இலங்கை காத்தான்குடி ஹாஜியார் ரெஸ்ட்டாரெண்டுக்கு புர்காவுடன் உணவருந்தபோன பெண்களை ஒரு கலாச்சார காவலர் படம் எடுத்துபோட்டு மார்க்க கடமையாற்றிய அதே ஸ்டைலில் அதிரை தமீம் என்ற தாதாவும் டிக் டாக்கில் ஏதோ இஸ்லாமியப் பெண்கள் பாட்டும், டான்சும் செய்வதை பார்த்து மார்க்கத்தின் கண்ணியமே போச்சு என கொதித்தெழுந்து பெண்கள் சமூகத்துக்கே எச்சரிக்கை விடுத்ததைப் பார்த்து என்னடா நடக்குது ? அப்படி என்னதான் ஆடுச்சுங்கனு ? அந்தப் பக்கம் போய் பார்த்தால் ? அடக் கடவுளே..!
இந்த மூதேவிங்க சொல்றதுபோல் எவளும் அவுத்துப் போட்டு ஆடவில்லை.. எல்லாம் புர்கா போட்டும், ஹிஜாபுடனும்தான் லூசுத் தனமா டப்மாஷ் பண்ணிட்டு வெட்டி வசனமும், பாட்டும் பாடிட்டு இருக்குங்க....அதுல பாருங்க அங்க கூட “அஸ்ஸலாமு அலைக்கும்” என சொல்லிட்டுதான் அடுத்த பேச்சுக்கே போகுதுங்க தீன்குல கண்மணிகள்...[ஙே..!]


இதைப் பார்த்து கொதித்த கலாச்சார போலீஸ் நம்ம தமீம் நாரவாயன் இருக்கானே? அவன்தான் விதவிதமா கூலரும், டி.சர்ட்டும் மாறி மாறி போட்டுகிட்டு வீடியோ கட் பண்ணி எடிட் பண்ணி ஷோ காட்டிட்டு இருக்கான்.. அதுவும் கண்றாவி வெற்றுடம்பில் சிக்ஸ்பேக் காட்டிக்கிட்டு அதை சப்ஸ்க்ரைப் வேற செய்ய சொல்லிட்டு இருக்கான்..! யோக்கிய மூதேவி நட்பில் தொடரும் அத்தனை பேரும் பெண்கள்...இதெப்படி இருக்கு ?
[பி.ஜேத்தனமா இல்ல?]
அதுல அவன் முக்கியமாய் “ ஜும் ஆவிற்கு போகும் கேப்பில் தேங்கா, மாங்கா விக்கிறவனை தெருவுக்குள்ள விடாதே பால்காரனை வீட்டுப் பக்கம் வரவிடாதே.” என அவன் பேசும்போது ஷாக்கிங்கா இருக்கு..!
அப்ப 24 மணிநேரமும் பெண்களை வாட்ச் பண்ணிக்கிட்டே இருந்தால்தான் ஓழுங்கா இருப்பார்கள் எனவும் இல்லாவிட்டால் ஜும் ஆ கேப்பில் கூட எவங்கூடவாவது ஓடிபோய்விடுவாள் என்பது சைக்கோத்தனமான மெண்டாலிட்டி அல்லவா ? அப்ப இந்த மாதிரி பசங்களுக்கு படிப்பு, வேலை ,சம்பாத்தியம் என ஒன்றுமில்லைதானே ? திண்ணை தேய்க்கும் இவர்களை விட தேங்கா, மாங்கா விற்பவர்கள் குறைவாய் போய் விட்டார்களா ?
என்ன மாதிரியான வளர்ப்பு இது ? நாளை இவனுக்கு கல்யாணம் என ஒன்று நடந்தால் அந்தப் பெண்ணின் நிலை ? இதில் இன்னொரு கொடுமை அவன் மற்ற பெண்களை மிரட்டல் விடுக்கும் போது “தம்பி நல்ல வேலை செய்கிறீர்கள்...உங்கள் சீர்திருத்தப் பணிக்கு அல்லாஹ் தகுந்த வெகுமதி அளிப்பார்” என கூறுவதும் 40, 50 வயதைக் கடக்கும் ஆண்கள்.. கொடுமையே..!
மிஞ்சி மிஞ்சிப் போனால் அந்த பச்சாக்கு ஒரு 24 வயதுதான் இருக்கும்...20 வயது பையன் 40 வயது பெண்களை மிரட்டுகிறான் எனில் அதற்கு அடிப்படையாய் இருப்பது எது ?
எனக்கு 10 வயதேயானாலும் நான் ஆம்பள எதுவேணாலும் செய்வேன்..50 வயதேயானாலும் பொம்பள நீ எனக்கு அடங்கி ஒடுங்கிதான் இருக்கணும் என சொல்வதற்கு பெயர் என்ன ?

கருத்துகள் இல்லை: