திங்கள், 6 மே, 2019

சகோதர துரோகங்களில் பலியான மாவீரர்கள் . ஸ்ரீசபாரத்தினம் ... 33வது நினைவேந்தல் நிகழ்வு 05.05.2019

Devi Somasundaram :தமிழ் ஈழம் விடுதலை அமைப்பு ( Telo ) தலைவர் திரு சபாரத்தினம் தன் சொந்த சகோதரனால் சுட்டு கொல்ல பட்ட தினம் இன்று .
1983 வெளிகடை ஜெயில் கொலையில் குட்டிமணியும் தங்கதுரையும் கொல்ல பட டெலோ அமைப்பின் தலைவரானர் சபாரத்தினம் .
85 ஜாஃப்னா ராணுவ முகாம் கேம்ப் கைப்பற்றுவதில் the big five என்றழைக்க பட்ட அமைப்பில் சபாரத்தினத்தின் டெலோ , உமா மகேஸ்வரன் ப்ளாட் ( plote ) , பத்மனாபாவின் இபி ஆர் எல் எப் ( eprlf) , பாலகுமாரின் இரோஸ் ( eros) மற்றும் பிரபாகரனின் எல் டி டி யிஆகிய 5 ஈழ விடுதலை குழுகளும் இணைந்து கைப்பற்றபட்டது ..

எல் டி டி யி எப்பொழுதும் hit and run போர் முறையே பின் பற்றினர்.ராணுவ முகாமை தாக்கி விட்டு ஓடுவது ..ஆனால் ஜாப்னா கேம்ப் மீண்டும் புனரமைக்க பட முடியாமல் அழித்தொழிக்க பட்டதில் சபாரத்தினத்தின் போர் முறையே பின் பற்றபட்டது ..
அதன் பின் எல் டி டி யி மற்ற இடங்களில் இதே வழி முறை கடை பிடித்தது ..
மீண்டும் 1987 வரை ஜாப்னா கேம்ப் புனரமைக்க பட இயவில்லை ..
அரசு வஙகி பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யபட்டு தண்டனை பெற்றவர் சபாரத்தினம் .
ஜாப்னா கேம்ப் அழிப்பில் ஈடு பட்ட மற்ற 4 தலைமைகளும் தன் சகோதரர்களால் அழித்தொழிக்கபட்டது தான் அரசியல் அனியாயம் . தான் மட்டுமே தலைவன் என்ற சர்வாதிகார மன போக்கில் மற்றவர்களை கொன்றழித்தார்கள் .

1986 சபாரத்தினத்தை கொல்ல கிட்டுவுக்கு உத்தரவு தர பட்டது .. வீடு வீடாக தேட பட்டார் சபா ரத்தினம் . இறுதியில் ஒரு புகையிலை தோட்டத்தில் தப்பி விடாமல் இருக்க முதலில் காலில் சுட பட்டார் சபா .. சகோதரர்களுக்குள் அடித்து கொண்டு செத்தால் அது சிங்கள அரசுக்கு தான் லாபம் ..நாம் ஒற்றுமையா இருந்தா அது எதிரிக்கு பலம், என்னை கொன்னு எதிரிய பலப்படுத்தாதன்னு சபா கேட்டும் விடாமல் கிட்டு அவரை சுட்டு கொன்றார் ..இந்த சில்லரைக்கு தான் மாவீரன் கிட்டுன்னு பேர் வைத்தார்கள் .
தன் மக்களின் விடுதலைக்கு போராடிய மாபெரும் தலைவன் தன் சொந்த சகோதரனால் அழிக்க பட்ட துரோக வரலாறுகளால் நிரம்பியது ஈழப்போர்..
கலைஞர் அவர் கதை வசனம் எழுதிய பாலைவன ரோஜாக்கள் படத்தில் ஹீரோவுக்கு சபாரத்தினம் என்று பேர் வைத்தார் ..ஆதிக்கத்துக்கு எதிரா போராடி சாகும் ஒரு போராளி பத்திரிக்கையாளராக சபா ரத்தினம் என்ற கேரக்டரின் நடித்தவர் சத்தியராஜ் ..
இளைஞர்களிடம் தமிழ் விடுதலை வீரர்களின் வரலாற்றை கொண்டு சேர்த்தவர் கலைஞர் ...மருது சகோதரர்களை, சபாரத்தினம்களை, ஜீவாகளை தன் கதையின் நாயகர்களா மக்களை அடைய கிடைத்த எல்லா வாய்ப்பையும் பயன்படுத்தினார் கலைஞர் ..

hariprakash.hari.: ஈழப் போராட்டத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும், திமுக என்ன நிலை எடுத்தது என்பதை சில பிழைப்புவாத போராளிகளுக்கு
அறிவுருத்த வேண்டியது நம் கடமையாகவுள்ளது..
1987 இல் இந்திய அமைதிப்படை அங்கு சென்றபிறகு இங்கு பல கட்சிகளின் நிலை மாறிவிட்டது. ஆனால், திமுக ஈழப் போராட்டத்தையும், போராளிகள் அமைப்பையும் தொடர்ந்து ஆதரித்தது. 1987 நவம்பரில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தி, ஈழ விடுதலையை ஆதரித்த இயக்கம் திமுக தான். முதன்முதலாக, ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உயிர்த் தியாகம் செய்த ஸ்ரீமுஷ்ணம் என்னும் ஊரைச் சேர்ந்த உதயசூரியன் என்னும் இளைஞன் திமுக உறுப்பினன். ஈழத்திற்கு ஆதரவாகப் பொய்ச் செய்திகளை பரப்பிய அரசுத் தொலைக்காட்சியை எதிர்த்து, பொது இடங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைக்கும் போராட்டம் தலைவர் கலைஞர் தலைமையில் நடந்தது.
1991இல் ராஜிவ் கொலைக்குப் பிறகு நிலைமைகள் மாறின. திமுக ஆட்சி இழந்தது, திமுக தொண்டர்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் தாக்கப்பட்டனர்.,சொத்துக்கள் சூரையாடப்பட்டன என்பது வேறுவிடயம், தமிழ் தேசியவாதிகள் சுகமாக இருந்த தனர் அன்று என்பது நிதர்சனம் அதன்பிறகும் திமுக புலிகளை எதிர்க்கவில்லை ஆனால் புலிகள் திமுகவை நாடவில்லை (அதான் தேவை முடிஞ்சதே)
1987 ஜூலை வரையில் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளை ஆதரித்தார். பெரிய நிதியுதவியும் செய்தார். அமைதிப்படை ஈழம் சென்றபிறகு தன் ஆதரவு நிலையை அவர் வெளிப்படுத்தவில்லை என்பதுடன், அதனை நியாயப்படுத்திச் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்திலும் அவர் ராஜிவ் காந்தியுடன் சேர்ந்து கலந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின், ஜெயலலிதா, புலிகள் அமைப்பை மிகக் கடுமையாக எதிர்த்தார். அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்பதில் பெரும் முனைப்பு காட்டினார். தேசியத் தலைவர் பிரபாகரனை இங்கு அழைத்துவந்து தூக்கில் போட வேண்டும் என்று சொல்லும் அளவிற்குச் சென்றார்.
எனினும் இங்குள்ள சில குழுவினர், ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. தேர்தலில் ஆதரிக்கவும் செய்தனர். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றும் கூறினர்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இன அழிப்பை ஆட்சியில் இருந்த திமுக தடுத்து நிறுத்தவில்லை என்னும் குற்றச்சாற்று இங்கு வைக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள திமுக, சர்வதேசச் சிக்கலாகிவிட்ட ஈழப்போரை ஒருநாளும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நன்கு அறிந்தே இந்தக் குற்றச்சாற்றை வைத்தனர். இன்றும் வைக்கின்றனர் என்பதனாலயே இவர்களை பிழைப்புவாதிகள் என்கிறோம்..

கலைஞர் எப்படி சொத்து சேர்த்தார் என்று மாறி மாறி கேட்கும் ஈனப் போராளிகள் என்றாவது ஈழ அரசியல் பேசும் இவர்களின் தலைவர்களுக்கு சொத்து,சுகம்,உணவு எப்படி கிடைக்குதுனும் அதற்கு ஆதாயம் எப்படி வருதுனும் கேட்டு இருக்கீங்களாடா!? பிராபா எப்படி தமிழர்களை இழிச்சவாயன்கள் ஆக்கினாரோ அப்படியே இங்கு இருக்கும் தமிழ் தேசிய #பிழைப்புவாத இயக்க அரசியல் தலைவர்களும் .
பெரியார் நேசன்

கருத்துகள் இல்லை: