வெள்ளி, 10 மே, 2019

நீட் மாணவி உயிரிழப்பு: ஆட்சியரிடம் மனு!

மின்னம்பலம் : நீட் மாணவி உயிரிழப்பு: ஆட்சியரிடம் மனு!ராமநாதபுரம் மாவட்டம், பாப்பானம் பகுதியைச் சேர்ந்த முனியசாமியின் மகள் சந்தியா. மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 5ஆம் தேதியன்று நீட் தேர்வில் பங்கேற்பதற்காகத் தன் தந்தையுடன் மதுரைக்குச் சென்றார். திருப்பாலை ஜெயின் வித்யாலயாவில் தேர்வு எழுதிவிட்டு, வெளியே வரும்போது சோர்வாக வந்தார். மாலையில், அவர் ராமநாதபுரம் செல்லும் பேருந்தில் ஏறினார்.
செல்லும் வழியில், திருபுவனம் அருகே சந்தியா திடீரென மயங்கிக் கீழே சரிந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கோடை வெயிலில் மதிய நேரத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சந்தியாவின் மரணம் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனது மகள் உயிரிழப்புக்குத் தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு மற்றும் மனைவிக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென்று கோரி, முனியசாமி தனது உறவினர்களுடன் சென்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: