சனி, 11 மே, 2019

பிட்ரோடா மன்னிப்பு : ராகுல் உத்தரவு

பிட்ரோடா, கருத்துக்கு, ராகுல், கண்டனம்தினமலர் : புதுடில்லி: சீக்கிய கலவரம் குறித்து சாம் பிட்ரோடா கருத்திற்கு காங். தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பிட்ரோடாவுக்கு ராகுல் உத்தரவிட்டுள்ளார்.
1984-ல் சீக்கிய கலவரததில் சீக்கியர்களை கொலை செய்ய பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பா.ஜ. குற்றம்சாட்டியது.
பிட்ரோடாவின் கருத்து காங்.கின் குணத்தையும், மனநிலையையும் காட்டுகிறது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு காங். கட்சியைச் சேர்ந்த சாம் பிட்ரோடா கூறுகையில், பா.ஜ.வின் மிகப்பெரிய பொய் இது . 1984-ல் நடந்தது குறித்து பா.ஜ.வுக்கு இப்போது என்ன கவலை. கலவரம் நடந்தது நடந்து விட்டது. முடிந்து போன விஷயம் என கூறினார்.பிட்ரோடாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், பிட்ரோடாவிற்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து காங். தலைவர் ராகுல் கூறியது, 1984 சீக்கிய கலவரம் மனதில் தீராத வலியை ஏற்படுத்திய சோகம் நடந்துள்ளது.
சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக ஏற்கனவே மூத்த தலைவர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோர் மன்னிப்பு கேட்டுள்ளனர். இருப்பினும் பிட்ரோடா கருத்து காங். கருத்து அல்ல. இப்படி ஒரு கருத்தினை வெளியிட்டதற்காக பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை நேடியாக தொடர்பு கொண்டுமன்னிப்பு கேட்க சொல்வேன் என்றார்.

கருத்துகள் இல்லை: