

இதனைப் பயன்படுத்திக்கொண்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர், நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் உள்ளதால், எங்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கூறி, உச்ச நீதிமன்றத்தை நாடினர். இதில், எம்.எல்.ஏ பிரபு மட்டும், அ.தி.மு.க-வுக்கு ஆதரவு நிலையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால்தான், அவர் அ.தி.மு.க-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை என்கிறார்கள். மேலும், டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து பிரபுவுக்கு அழைப்புவிடுத்தும் பயனில்லை.
இந்நிலையில், மற்ற இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அதன்படி, 3 எம்.எல்.ஏ-க்களுக்கும் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு தடைவிதித்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார். வெறும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே இந்த விசாரணை நடந்தது. அதற்குள் நீதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், இது தொடர்பாக சபாநாயகர் தனபால் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக