திங்கள், 17 டிசம்பர், 2018

ஸ்டாலினின் சாடிஸ்ட் பாசிஸ்ட் நாசிஸ்ட் குண்டுகளால் அதிர்ந்த டெல்லி அரசியல் .. தேசிய தளபதி ?

tamil.oneindia.com - shyamsundar : சென்னை: காங்கிரஸ்
என்ன சொன்னார் தலைவர் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் தேசிய அரசியலில் முக்கிய நபராக மாறியுள்ளார்.
பாஜக அதிர்ச்சி
நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று கருணாநிதி காலத்து திமுக சொன்னது போல, தற்போது ஸ்டாலின் காலத்து திமுக ராகுல் காந்தியை பிரதமராக பதவி ஏற்க அழைப்பு விடுத்து இருக்கிறது. ஆனால் இந்திரா காலத்தில் திமுகவின் குரல் எவ்வளவு வைரல் ஆனதோ தெரியாது, நேற்று ஸ்டாலின் பேசியதுதான் இன்று தேசிய அரசியலின் ஹாட் நியூஸ்.
 நேற்று திமுக முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் சிலை திறப்பு விழா பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ''ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன். நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும்.ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். ராகுல் காந்தியே வருக, நாட்டிற்கு நல்லாட்சி தருக.'' என்று கூறினார்.
 ஏன் முக்கியத்துவம் ?
 ஸ்டாலினின் இந்த பேச்சு சில விஷயங்களால் முக்கியத்துவம் பெறுகிறது. முதலாவது, 90 சதவிகித எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி வைக்க பேசி வருகிறது. இந்த கூட்டணியும் இப்போதுதான் கொஞ்சம் உருவம் பெற்று இருக்கிறது. ஆனால் இதன் பிரதமர் வேட்பாளர் ராகுலா, மமதாவா, மயாவதியா என்று தெரியவில்லை.
இந்த குழப்பம் நீடித்து வரும் நிலையில்தான் ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று பெரிய வழியை திறந்துவிட்டுள்ளார் ஸ்டாலின்.

இரண்டாவதாக, ஸ்டாலின் இப்படி பேசியிருப்பது ராகுலை இன்னும் சில கட்சியினர் ஆதரிக்க வழிவகுக்கும். ஏற்கனவே ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் விஸ்வரூபத்தை பார்த்து அனைத்து கட்சிகளும் திணறிப்போய் இருக்கிறது. அப்படிப்பட்ட சமயத்தில் ராகுலை ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி இருப்பது அவருக்கு இன்னும் பலத்தை கொடுத்து இருக்கிறது .

 பாஜக அதிர்ச்சி !   ஸ்டாலினின் இந்த கருத்திற்கு இதுவரை கூட்டணியில் இடம்பெற போகும் எந்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் பாஜகதான் இதை நேற்று இரவில் இருந்து கிண்டல் செய்து வருகிறது. பாஜக ஸ்டாலினின் இந்த அறிவிப்பை கண்டு அச்சமடைந்து இருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது
. எதிர்க்கட்சிகளின் கூட்டணி முழு வடிவம் பெற்றுவிடுமோ என்று பாஜக அஞ்சுவதாக பாஜகவிற்கு நெருக்கமானவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

ததமிழக அரசியல் தளபதி என்று அழைக்கப்பட்டு வந்த ஸ்டாலின் தற்போது தளபதியில் இருந்து திமுகவின் தலைவர் என்று நிலைக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் தற்போது ஸ்டாலின், இனி தேசிய அரசியலின் தளபதி என்று திமுகவினர் உட்பட பலர் கூற தொடங்கி இருக்கிறார்கள். தேசிய அரசியலில் தமிழகம் மீண்டும் கோலோச்சும் நேரம் தொடங்கிவிட்டது என்றும் கூறுகிறார்கள்

கருத்துகள் இல்லை: