சனி, 22 டிசம்பர், 2018

33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.. சினிமா டிக்கெட் உட்பட வரி குறைப்பு

தினதந்தி ;உச்சபட்ச 28 சதவீத ஜி.எஸ்.டி. பிரிவில் 34 சொகுசு பொருட்களே உள்ளன என கூறினார்.
 புதுடெல்லி, ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு  சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன், வணிகவரித் துறை தலைமைச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். சரக்கு மற்றும் சேவை வரியினால் 2017 ஜூலை மாதத்திலிருந்து 2018 செப்டம்பர் மாதம் வரை தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொகையான மூன்றாயிரத்து 230 கோடி ரூபாயினை மத்திய அரசு அளிக்க வேண்டும்.
ஐந்தாயிரத்து 454 கோடி ரூபாய் நிலுவைத் தொகையினை உடனடியாக மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக வர்த்தகர்கள் முன்வைத்துள்ள சில வரி குறைப்பு கோரிக்கைகளும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில் 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது என இதற்கான கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் 7 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 2 சதவீதத்தில்  இருந்து 18 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்துள்ளது.  மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 12  சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.;
கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-;
* இன்றைய கூட்டத்தில் 33  பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டு உள்ளது. 28 சதவீத உச்சபட்ச  ஜி.எஸ்.டி.  பிரிவில் 34 சொகுசு பொருட்களே உள்ளன.
* டிவி உள்ளிட்ட மின்னணு பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டு உள்ளது.

*  மானிட்டர்கள் மற்றும் தொலைக்காட்சி திரைகள், டயர்கள், லித்தியம்-அயன் பேட்டரிகளின் ஜி.எஸ்.டி.  28 சதவீதத்தில் இருந்து  18 சதவீதமாக  குறைக்கப்பட்டுள்ளன.
* கட்டுமான துறைக்கு உதவும் வகையில் சிமெண்ட் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டு உள்ளது.
*  ரூ.100க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில்  இருந்து 18 சதவீதமாக ஆக குறைக்கப்பட்டு உள்ளது. ரூ.100க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜி.எஸ்.டி. 18 சதவீதத்தில்  இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

கருத்துகள் இல்லை: