ஞாயிறு, 16 டிசம்பர், 2018

ராகுல் காந்தி : நானும் சந்திரபாபு நாயுடுவும் கலைஞரின் வீடு மிக பெரிதாக இருக்கும் என்று எண்ணியிருந்தோம்


THE HINDU TAMIL: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் சிலைத் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது, இதில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா, தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசிய போது, “நான் கலைஞர் அவர்களை இரண்டாவது முறையாக சந்தித்ததை நினைவுகூறுகிறேன்.  அதற்கு முன்னதாக அவருடைய வீட்டிற்கு சென்றது கிடையாது. அவருடைய வீடு மிகவும் பெரியதாக இருக்கும் என்று நினைத்தேன். அங்கு அதிகமான பொருட்கள் இருக்கும் என்று நினைத்தேன்...” என்று கூறி அந்தச் சந்திப்பைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசினார்.
“ஒவ்வொரு அரசியல் தலைவர்களுக்கும் இரண்டு பக்கம் உள்ளது. மக்களின் குரலை மற்றும் தன் குரலை மக்களுக்காக பிரதிபலிப்பது.  தலைவர் கலைஞர்   தமிழக மக்களின் குரலாகவே வாழ்ந்தவர். மக்களுக்காக வாழ்ந்தார். தமிழக மக்களின் மகிழ்ச்சியையும், வலிமையையும் தன்னுடையதாக கருதியவர். முழுவாழ்க்கையையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர்.

நீங்கள் கலைஞரை நினைவில் கொண்டிருப்பீர்கள்,   நான் கலைஞரை  இரண்டாவது முறையாக சந்தித்ததை நினைவுகூறுகிறேன்.  அதற்கு முன்னதாக அவருடைய வீட்டிற்கு சென்றது கிடையாது. அவருடைய வீடு மிகவும் பெரியதாக இருக்கும் என்று நினைத்தேன். அங்கு அதிகமான பொருட்கள் இருக்கும் என்று நினைத்தேன். பல ஆண்டுகள் அரசியலில் இருக்கும் தலைவரின் வீடு மிகப்பெரியதாக இருக்கும் என்று சந்திரபாபு நாயுடுவை போன்று நானும் நினைத்தேன். ஆனால் அவருடைய வீட்டிற்கு நான் சென்றபோது மிகவும் ஆச்சர்யம் அடைந்தேன். அவருடைய எளிமை, நேர்மையை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன்.  பல ஆண்டு முதல்வராக இருந்த அவரின் எளிமை மற்றும் அகங்காரம் இல்லாத தன்மையை பார்த்து மிகவும் பெருமையடைந்தேன். 

ஒரு இளம் தலைவராக அவரை சந்தித்த போது எனக்கு உந்துந்தலாகவும், வழிகாட்டுதலாகவும் இருந்தது.  தலைமைக்கான வழியை காட்டியதையும் பார்க்கிறேன். அவர் மக்களின் குரலை பாதுகாப்பவர்.  அரசியல் சட்டங்களை பாதுகாப்பவர்.  இப்போது உள்ள அரசோ தமிழர்களின் கலாசாரங்களை அழித்து வருவதை பார்கிறேன்.  இப்போது ஆட்சியில் உள்ள அரசு  கோடான கோடி மக்களின் மனநிலையை மதிக்க வேண்டியது இல்லை என்று நினைக்கிறது.  இந்நாட்டில் உள்ள மொழிகள், கலாச்சாரம், பண்பாட்டை மதிக்கவேண்டியதில்லை என்று நினைக்கிறது. கருணாநிதியை நினைவில் கொண்டு மக்களை ஒற்றுமையை படுத்தி பா.ஜனதாவை அடக்குவோம் என்ற மனநிலை எல்லோரிடமும் உள்ளது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டை அழிப்பதை ஏற்கப்போவது கிடையாது.  ரிசர்வ் வங்கி, சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களை அழிப்பதை ஏற்கப்போவது கிடையாது. நாம் ஒன்றுப்படபோகிறோம், நாட்டிற்காக  பா.ஜனதாவை ஆட்சிலிருந்து நீக்கும் பணியை செய்வோம்.இங்கு வந்தது பெருமைக்குரிய விஷயம், கவுரமாக நினைக்கிறேன்.  ஒவ்வொரு தமிழர்களின் பெருமையை கண்டு பெருமையடைகிறேன். நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை பலப்படுத்த வேண்டும்”  இவ்வாறு பேசினார் ராகுல் காந்தி

கருத்துகள் இல்லை: