செவ்வாய், 18 டிசம்பர், 2018

மலையாள நடிகை அஸ்வதி பாபு கைது ..வீட்டில் போதை பொருள் ,,எக்ஸ்டசி ...

ரெய்டு Oneindia Tamil ": போதைப்பொருள் வைத்திருந்த பிரபல டிவி நடிகை கைது.. வீடியோ கொச்சி: போதைப் பொருள் வைத்திருந்த மலையாள நடிகை அஸ்வதி பாபு மற்றும் அவரின் கார் டிரைவர் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அஸ்வதி பாபு(22). படங்களில் துணை நடிகையாகவும், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். அவர் கொச்சியில் உள்ள த்ரிக்காக்காரா பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அஸ்வதியிடம் எக்ஸ்டசி போதைப் பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் நேற்று அஸ்வதியின் வீட்டில் திடீர் என்று சோதனை நடத்தினர். அப்பொழுது பல லட்சம் மதிப்புள்ள எக்ஸ்டசி போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அஸ்வதியும், அவரின் கார் டிரைவர் பினாய் ஆபிரகாமும் வாடிக்கையாளரிடம் போதைப் பொருளை விற்பனை செய்ய காத்திருந்தபோது போலீசாரிடம் சிக்கினார்கள்.

அஸ்வதி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் நள்ளிரவு பார்ட்டிகளில் பயன்படுத்தப்படுவது ஆகும். போலீசார் அஸ்வதி மற்றும் பினாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பினாய் தான் பெங்களூரில் இருந்து அந்த போதைப் பொருளை வாங்கி வந்து அஸ்வதியிடம் கொடுத்துள்ளார். கண்காணிப்பு ரகசிய தகவல் கிடைத்த பிறகு போலீசார் அஸ்வதியை சில வாரங்களாக கண்காணித்துள்ளனர். அதன் பிறகே நேற்று அஸ்வதியும், பினாயும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

இந்த போதைப் பொருள் நெட்வொர்க் பெரியதாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

 கடந்த செப்டம்பர் மாதம் எர்ணாகுளத்தில் மட்டும் ரூ. 200 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அஸ்வதியிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மல்லுவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: