வெள்ளி, 21 டிசம்பர், 2018

மலேசியாவில் தவித்த 49 பேரை காப்பாற்றிய கனிமொழி

49 குடும்பங்களைக் காப்பாற்றிய கனிமொழிமின்னம்பலம் : திமுக மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்பி கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நெல்லை சென்றிருந்தார். அப்போது திமுக நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபனுடன் வாசுதேவ நல்லூர் ஒன்றியம் தலவன் கோட்டையைச் சேர்ந்த பெண்கள் கனிமொழியை சந்தித்து ஒரு கோரிக்கையை முன் வைத்தார்கள்.
“எங்க ஊர்லேந்து 49 பேர் மலேசியாவுல மின்சார டவர் போடும் பணிக்காக போனாங்க. ஆனா கொஞ்ச நாளா அவங்களப் பத்தி எந்தத் தகவலும் இல்ல. இப்ப சில நாள் முன்னாடி ரொம்ப கஷ்டப்படுறதாவும், யாரோ பிடிச்சு வச்சிருக்கிறதாகவும் வீடியோவுல பேசி எங்களுக்கு அனுப்பினாங்க. நாங்க பல அதிகாரிகளைப் பாத்து சொல்லியும் எதுவும் நடக்கல. நீங்களாவது எங்க ஊர்க்காரங்களை காப்பாத்துங்க” என்று வேண்டுகோள் வைத்தார்கள்/
இந்நிலையில் கனிமொழி இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் பேசியிருக்கிறார். அப்போதுதான் அந்த 49 பேரும் விசா பிரச்னையில் வழக்குத் தொடுக்கப்பட்டு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து மலேசிய இந்திய தூதகரக அதிகாரிகளிடமும் கனிமொழி தரப்பில் அழுத்மாக வலியுறுத்தப்பட்டது. அதன் பின்னர், “அந்த 49 பேரும் மலேசியாவில் இந்திய தூதகரத்தில் கண்காணிப்பில் இருக்கிறார்கள் எனவும் வரும் ஜனவரி 19 ஆம் தேதி வழக்கின் இறுதி அமர்வு முடிந்ததும் இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தத் தகவலை கனிமொழி திமுக நெல்லை மாவட்ட நிர்வாகிகள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஜனவரி 19 ஆம் தேதி தங்களின் குடும்பத்தினரது வருகையை எதிர்பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்து கனிமொழிக்கு நன்றி சொன்னார்கள் தலவன் கோட்டையைச் சேர்ந்த பெண்கள்

கருத்துகள் இல்லை: