
ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் கொள்ளை போவதாது தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, காவல்துறையினர் பட்டறவாக்கம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும் வகையில் வந்த ஒருவரை மடக்கி விசாரித்த பொழுது அவன் வந்த வாகனத்துக்கு எந்த ஆவணங்களும் இல்லை, மேலும் அவனது பதில் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது.
இதனால் அவனை விசாரிக்க முற்பட்ட போலீசார் அவனது மொபைலை வாங்கி பரிசோதனை செய்தனர். அதில் ஏராளமான பெண்களுடன் பிடிபட்ட அவன் பலாத்காரம் செய்த வீடியோக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ந்த போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர்.
அந்த மொபைலில் உள்ள அனைத்து வீடியோவிலும் அவன் இருந்ததால் அந்த வீடியோக்கள் அனைத்தும் அவனே எடுத்துள்ளான். மேலும் பெண்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளான் என்று போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து அவனை சிறப்பு கவனிப்புடன் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில் அவன் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பது தெரியவந்தது. பெங்களூருவில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்த அவன் ஓசூரில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அங்கிருந்து சென்னைக்கு தப்பி வந்தான்.
கடந்த 2010ஆம் ஆண்டு வேளச்சேரி, கிண்டி,
சைதாப்பேட்டை பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை, சுமார் 50
பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தான். அதோடு மட்டுமல்லாமல் அவர்களை
மிரட்டி பணம், நகை ஆகியவற்றையும் பறித்துள்ளான். ஆனால் பணம் நகை
திருடப்பட்ட விவகாரத்தில் மட்டுமே அவன் கைது செய்யப்பட்டிருந்தான். அப்படி
நகை, பணம் திருட்டு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்ட அவன் மீது திருட்டு
வழக்குகள் இருந்ததே தவிர பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் யாரும் புகார்
கொடுக்க முன்வராததால் தப்பித்து வந்தான். இந்நிலையில் பெண் ஒருவர்
துணிச்சலாக புகார் கொடுத்தும் சைதாப்பேட்டை போலீசார் அந்த புகாரின் மீதான
விசாரணையை திறம்பட நடத்தாததால் மூன்று மாதங்களுக்கு முன்பு அறிவழகன்
ஜாமீனில் வெளியே வந்துள்ளான்.

குடும்ப மானம் போய்விடும் என கருதி
பெரும்பாலான பெண்கள் இது பற்றி புகார் அளிக்காமல் இருந்து வந்துள்ளனர். இது
அவன் தப்பிப்பதற்கு ஒரு பெரிய சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு
இருந்தான் எனகூறுகின்றனர் காவல்துறையினர். கடந்த 3 மாதத்தில் மட்டும்
சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்ததுடன் நகைகளையும்
எடுத்து சென்றுள்ளான். கடந்த மாதம் அடுத்த மூன்று தினங்களில் சாப்ட்வேர்
நிறுவனங்களில் பணிபுரியும் 2 பெண்கள் உட்பட 3 பேர் இவரிடம் சிக்கியுள்ளனர்.
அவர்கள் மட்டுமே தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்துறையினரிடம்
புகார் அளித்தனர். இதனை அடுத்து சம்பத்தப்பட்ட தெருக்களில் சிசிடிவி கேமரா
பொருத்தினர். அந்த வகையில் ஆவடி, காமராஜ் நகரில் அறிவழகன் கைலி கட்டிக்
கொண்டு ஒரு வீட்டிற்குள் ஏறி குதித்து உள்ளே செல்லும் காட்சிகள்
பதிவாகியுள்ளது. ஒரு வீட்டில் மட்டுமல்ல பல வீடுகளில் இது போல் தொடர்
சம்பவங்களை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடும் சிசிடிவி காட்சி பதிவுகளும்
கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக