திங்கள், 17 டிசம்பர், 2018

நான் சாக வேண்டும் என்று நினைக்கிறார்களா" - பத்மா.

நான் சாக வேண்டும் என்று நினைக்கிறார்களா" - பத்மா.
பத்மாவின் கணவர் விவேக்:
''கடந்த பத்து வருடமாகவே பத்மாவுக்கு நெஞ்சுவலி இருக்கிறது. தலைமறைவாக இருந்துகொண்டு, சிகிச்சையைத் தொடரமுடியாத காரணத்தால்தான், நீதிமன்றத்தில் சரணடைந்தார். வெளியே இருந்தபோது, நெஞ்சுவலிக்கு எடுத்துக்கொண்ட மருந்துகளை, சிறைக்குள்ளும் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. ஆனால், போலீஸார் பத்மாவுக்கு நெஞ்சுவலி இருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. முறையான மருத்துவ சான்றும் எங்களிடம் இல்லை. தற்போது, பத்மா சிறைக்குச் சென்றபிறகு அவரது உடல்நிலை இன்னும் மோசமாகிவிட்டது. சரியான உணவும் மருந்தும் அவருக்குக் கிடைக்கவில்லை. மருந்துகள் இருந்தாலும், அவற்றை மெயின் கேட்டில் இருந்துதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குள் வலி தீவிரமாகிவிடும். இந்நிலையில் தான், பத்மா ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதித்தபிறகு தான் எங்களுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். பத்மாவைப் பார்க்க எங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. சிறையில் சென்று அனுமதிக்கடிதம் வாங்கிவந்து பார்த்தோம். அதுவும் ஐந்து நிமிடங்களே அனுமதி கொடுத்தனர். பத்மாவிற்கு நெஞ்சு வலி ஏற்படும் போது, அவரது இதயத்துடிப்பு நிமிடத்துக்கு இருநூற்றைத்தாண்டும். அப்போது அவர் கூடவே யாராவது இருக்கவேண்டும். அதற்கும் போலீஸ் தரப்பு மறுப்புத் தெரிவித்திருக்கிறது.மருத்துவமனையில் பத்மாவை சந்தித்துப் பேசினேன். அவரது உடல்நிலை மோசமாக இருக்கிறது. இதய மருத்துவ துறையில் பத்மாவை அனுமதிக்கவில்லை. சாதாரண வார்டில் தான் அனுமதித்திருந்தனர். மருத்துவமனையில் மூச்சுவிடவே சிரமப்பட்ட அவருக்கு, ஃபேன் வசதி கூட இல்லை. இதை மருத்துவமனை நிர்வாகத்திடம் சொன்னபோது, பத்மாவை சிறைக் கைதிகள் வைத்திருக்கும் வார்டுக்கு மாற்றிவிட்டனர். அங்கு நிலைமை இன்னும் மோசம். மருத்துவமனையில் கொடுக்கப்படும் பாலும் கொடுப்பதில்லை. காலை உணவு 11 மணிக்குத்தான் கொடுக்கிறார்கள். மருத்துவமனையில் மனம் தளர்ந்துவிட்டார்.
'நான் சாக வேண்டும் என நினைக்கிறார்களா..' என்று பத்மா கேட்டது இன்னும் என் காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கிறது'
விகடன்.காம்
#Save_Comrade_Padma

கருத்துகள் இல்லை: