திங்கள், 17 டிசம்பர், 2018

மைத்திரிபால சிரிசேனா :போர்க்குற்றங்கள் .. படையினரை மட்டுமா தண்டிக்கவேண்டும் ? புலி குற்றவாளிகளையும் தண்டிக்கவேண்டும் ...


Ajeevan Veer : இன்றைய சிரிசேனவின் பேச்சில் தமிழர் கருத்தில் கொள்ள
வேண்டிய பகுதிகள் ....
போர் கால குற்றங்களில் ஈடுபட்ட படையினரை கைது செய்ய வேண்டாம் என்றேன். ஆனால் நான் சொன்னதை ரணில் தரப்பினர் காது கொடுத்துக் கேட்கவில்லை. அவர்களை கைது செய்து தண்டித்தீர்கள். சிறையில் அடைத்துள்ளீர்கள். அதை செய்த நீங்கள் சர்வதேச நாடுகளில் வாழும் புலிக் குற்றவாளிகளையும் கைது செய்து கொண்டு வந்து தண்டிக்க அல்லது சிறையிலடைக்க முயன்றிருக்க வேண்டும். அதுவே நியாயம். அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். போரடிய படை வீரர்கள் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இதில் என்ன நியாயம்?
யுத்த காலத்தில் பிடிபட்டபுலிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க முயல்கிறீர்கள். அது நியாயம் என்றால் அக் காலத்தில் குற்றம் செய்த படையினரையும் விடுவிக்க வேண்டும். அதுவே நியாயமானதாகும். அதுவே சமமான ஒரு செயலாகும். அதை அங்கீகரிக்க ரணில் தரப்பினரான நீங்கள் தயாராக இல்லை.

பெளத்த விகாரைகளில் பிடித்து வைத்துள்ள யானைகளை விடுவிக்கச் சொன்னேன். ஆனால் நீங்கள் அந்த பௌத்த மத குருமாரையும் கைது செய்து சிறையில் அடைத்தீர்கள். அதனால் பௌத்த சமூகத்திடம் கடும் எதிர்வலைகள் உருவாகின.
2007ம் ஆண்டு தொடக்கம் பணமுறி (வங்கி கொள்ளை) நடந்து வந்துள்ளது. அதற்கான நடைமுறைகள் குறித்து ஆராயப்படவில்லை. (அதாவது மகிந்த காலத்திலிருந்து)
225 பேர் கையெழுத்திட்டாலும் ரணிலை பிரதமராக்க மாட்டேன் என்றேன். அது எனது தனிப்பட்ட கருத்து.
சுயாதீன கமிசன்களை நியமித்தீர்கள். அதனால் எனக்கு தேவையான விதத்தில் சீனியர் அடிப்படையிலான நீதிபதிகளையோ அல்லது போலீசின் உயர் அதிகாரிகளையோ நியமிக்க முடியவில்லை. இது ஏற்புடையதல்ல.
JR ஊரடங்கு சட்டத்தை போட்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டார். அதற்கு எதிராக நான் வீதியில் படுத்து எதிர்ப்பு தெரிவித்தேன்.
நான் JVP இல்லை. ஆனால் JVP என கைது செய்து மட்டக்களப்பு சிறையில் அடைத்தார்கள்.
ரணில் செய்த பல விடயங்களில் உடன்பாடில்லை. ஆனால் விட்டுக் கொடுத்தேன். எனக்கு அவரது போக்கு உடன்பாடானதல்ல. நான் எண்ணும் தேசியவாதம் ரணில் அரசிடம் இல்லை.

கருத்துகள் இல்லை: