தேர்வில் கேள்வி கேட்டால்,
துபாய்- பாலைவனத்தில் இயற்கை வளத்தை எடுத்து விற்றதால் சோலைவனம் ஆன இடம்.
காவிரிப் படுகை –சோலைவனத்தில் இயற்கை வளத்தை எடுத்து விற்றதால் பாலைவனமான இடம் என்று எழுதப்படலாம்.
பேராசிரியர் ஜெயராமன் எழுதிய மீத்தேன் அகதிகள் புத்தகத்தை வாசித்தப்பின்
அப்படிதான் எழுதத் தோன்றுகிறது. தஞ்சை திருவாரூர் போன்ற காவிரிப் படுகை
பகுதிகளில் இந்திய அரசு மீத்தேன் திட்டத்தை நிறுவி அதைத் தொடர்ந்து
விரிவுபடுத்தி வருகிறது. அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது
காவேரி டெல்டாவை வாழ்வாதரமாகக் கொண்ட பல லட்சம் பேர் விவசாயத்தைக்
கைவிட்டு, அவர்கள் அகதிகளாக தங்கள் வாழ்விடங்களைவிட்டு வெளியேறும்
சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்பதைத் தகுந்த தரவுகளோடு ஆணித்தரமாக
நிறுவும் நூல்.
மேற்கு உலகநாடுகள் கைவிட்ட சர்ச்சைக்கு நீரியல் விரிசயல் போன்ற அபாயகரமான முறைகளைக் கையாண்டு நீராதாரத்தை முற்றிலுமாக அழிப்பது. தமிழகத்துக்கு முறையாக வரவேண்டிய காவேரி நீரை விவசாயத்துக்கு தர மறுப்பது. இராசயான, கதிர்வீச்சுப் பொருட்களைப் பயன்படுத்தி சூழலைக் கெடுத்து விவசாய பூமியை மலாடாக்குவது போன்ற பல செயல்களால் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படும் காவேரிப்படுகை விவகாரம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று என்பதையும் சொல்கிறது.
இதனால் காவேரிப்படுகையில் இருந்து ஏதிலிகளாக வெளியேறும் தமிழர்கள் மற்ற மாநிலங்களாலும், வெளிநாடுகளாலும் புறக்கணிக்கப்பட்டு விரட்டபடுவார்கள் என்பதையும் உலகவரலாற்றை எடுத்து ஒப்புமை படுத்துகிறார். நூலின் தலைப்பு 'மீத்தேன் அகதிகள்' என்றாலும் ஆசிரியர் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுவதைச் சுட்டிக்காட்டி தமிழர்கள் சுணக்கம் காட்டாமல் உடனடியாக விழித்தெழவேண்டியதன் அவசியத்தை ஆதாரபூர்வமாக சொல்லும் நூல் இது.
நூல்: மீத்தேன் அகதிகள்
ஆசிரியர்: பேராசிரியர் த.செயராமன்.
வெளியீடு : மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு - தமிழ்நாடு. 19/2, சேந்தங்குடி வடக்குத் தெரு, ஆனதாண்டவபுரம் சாலை,
மயிலாடுதுறை-609001
அன்போடு புத்தகத்தைப் பரிசளித்த தோழர் த.ரெ.தமிழ் மணிக்கு நன்றி!< # மீத்தேன்_அகதிகள்</

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக