கெலும் பண்டார- தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
:
வடக்கில் இருந்து ஒரு குற்றவியல் கும்பலான ஆவா குழு என்றழைக்கப்படும்
குழு ஒன்று சில குறிப்பிட்ட இடங்களில் பேரழிவினை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய
விபரங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பல செய்தி அறிக்கைகள், சில தீவிரவாத
சக்திகளால் விடுதலைப் புலிகளின் புத்துயிர்ப்பினுக்காக வேண்டி மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள், என்று தெரியப் படுத்துகின்றன. அது மட்டுமன்றி இவை வடக்கிற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்ற இரண்டு விடயங்களாகும்.
ஆவா குழுவினரின் குற்றவியல் நடவடிக்கைகளால் இயல்பு வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு ஆளானால் எல்.ரீ.ரீ.ஈ அதன் தலையை உயர்த்தும், அரசியல் ரீதியாக அது அரசாங்கத்துக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தும். அதன்படி எதிர்க்கட்சியினர் இதைப் பயன்படுத்தி தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வெற்றி பெறுவதற்கு இது அவர்களுக்கு போதுமான அரசியல் தீவனத்தை வழங்கும்
எனவே ஆவா குழவினரது நிகழ்ச்சிகள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ இனது புத்துயிர்ப்பினுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்பன அரசியல் அர்த்தத்தில் சூடான தலைப்புக்களாக உள்ளன. ஆவா ஒரு குற்றவியல் கும்பல் அது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக நவீன செயல்முறைகளைப் பயன்படுத்துவதுடன் அவர்களின் பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையடிக்கவும் செய்கின்றது. இந்தச் சம்பவத்தில் சில இளைஞர்கள் வாள் போன்ற கூரிய கத்திகளை ஏந்திக்கொண்டு வீதிகளில் உந்துருளிகளில் பறக்கிறார்கள் மற்றும் வீடுகளைக் கொள்ளையடிப்பது போன்ற குற்றச்செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.
தங்களுக்கு இட்ட கட்டளைப்படி குற்றச் செயல்களை நடத்தியபிறகு, பிடிபடுவதை அல்லது சட்ட அமலாக்கல் அதிகாரிகளினால் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக அந்தக் காட்சியில் இருந்து உடனடியாக ஓடிவிடுகிறார்கள். கும்பலினால் அச்சம் அடைந்த உதவியற்ற பாதிக்கப் பட்டவர்கள் அதைப் பார்த்துக்கொண்டு வெறுமே நிற்கிறார்கள்.
நிலமையைப் பயன்படுத்துதல்
அரசியல் தாக்கங்கள் பற்றி அறிந்திருப்பதுடன் வடக்கில் இயல்புநிலை குழப்பப்படுகிறது, அரசாங்க அரசியல்வாதிகள் நிலமையை சமாளிக்க முற்படும் அதேவேளை எதிர்கட்சியில் உள்ளவர்கள் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக அதைப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அரசாங்கம் நிலமையை குறைத்துக்காட்டுவதற்கு முயற்சிக்கிறது, ஆனால் எதிர்க்கட்சியோ அதை வைத்து அரசியல் விளையாட்டு நடத்த முயற்சிக்கிறது. சமீப காலத்தில் அங்கு ஒருமுறை விஜயம் மேற்கொண்டிருந்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இவை சில மோசமான இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் குற்றவியல் நடவடிக்கை. வன்முறையான தமிழ் திரைபடங்களைப் பார்த்ததின் விளைவாக வன்முறைச் செயல்களை செய்துகாட்ட முயற்சிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
வடக்கில் மக்கள் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளை பொழுதுபோக்கிற்காகப் பார்க்கிறார்கள். இந்த இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவது, தமிழ் வெள்ளித்திரையில் காண்பிக்கப்படும் காட்சிகளைப் பின்பற்றி அப்படியே நடக்கிறார்கள் என்று பரவலாக நம்பப்படுகிறது, தமிழ் திரைப்படங்களில் உந்துருளிக் கும்பல்கள் குற்றங்களை நாடகபாணியில் நடத்துவது அதிகம் காண்பிக்கப்படுகிறது.
எல்லாவற்றையும் விட, ஆவா குழுவினரின் குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக நடப்பதில்லை. சில சந்தர்ப்பங்களில் அது முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது மற்றும் அந்தச் சம்பவங்கள் பத்திரிகைகளிலும் வெளிவந்து விடுகின்றன. அதன்பின் இந்தக் குழு சிறிது காலம் செயலற்றிருக்கும். ஆகா! நிலமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும்போது அது திரும்பவும் தனது குற்றச் செய்கையை வெளிப்படுத்தும்.
வடபகுதி அரசியல்வாதிகள் இது தொடர்பாக நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு ஏற்ற தெளிவான நிச்சயமான திட்டங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதால் அவர்கள் இழப்பினைச் சந்திக்க நேரிடும். அவர்கள் ஒருவருக்கொருவர் மாறிமாறி குற்றம் சுமத்திவருவது, இந்த நிகழ்வை ஏற்படுத்திய சூழ்நிலைக்கு பல்வேறு விளக்கங்களை தர முயல்கிறது.
குற்றங்களைத் தடுப்பதற்கு போதுமான காவல்துறை அதிகாரம் இல்லை என விக்கி புலம்புகிறார் இது தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தீவிரமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார். உண்மையில், மக்கள் மத்தியில் இந்த குற்றவியல் குழுக்;களுக்கும் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் ஒரு உறவு இருப்பதாக, பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது என்று அவர் சொல்கிறார். “போதை மருந்துக் கடத்தலில் ஈடுபடும் நபர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு காவல்துறை அல்லது படைகளின் ஆதரவு இருக்கவேண்டும். இது மக்களின் பொதுவான கருத்து. இருந்தும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் என்னிடம் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
பொதுமக்களின் இந்தக் கருத்துக்கு நம்பிக்கை தரும் வகையில் அவர் சொன்னது, பெரிய எண்ணிக்கையில் காவல்துறை மற்றும் இராணுவம் இங்கு பிரசன்னமாகி இருக்கும்போது இந்த விடயங்கள் நடைபெறுகின்றன என்று. அத்தோடு இந்த விடயத்தை முற்றிலுமாக இல்லாதொழிப்பதற்கு மாகாணசபைக்கு காவல்துறை அதிகாரம் பற்றாக்குறையாக இருப்பதே காரணம் என அவர் புலம்புகிறார். இந்த இளைஞர்கள் தமிழ் படங்களில் காண்பிக்கப்படும் வன்முறைக் காட்சிகளால் தூண்டப்பட்டுள்ளார்களா என அவரிடம் வினாவியபோது அவர் அதற்கு ஒரு சுவராஸ்யமான பதிலைச் சொன்னார்.
“மக்கள் இந்தச் செயல்களைச் செய்வதற்காக படங்களைப் பார்க்கப் போகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. இவை சமூகத்தில் நடைபெறுகின்றன. இங்கு நடப்பனவற்றைத்தான் படங்கள் சித்தரிக்கின்றன” என்று அவர் சொன்னார்.
வட மாகாண டி.ஐ.ஜி ரோஷான் பெர்ணாண்டோவின் கூற்றுப்படி குற்றவியல் செயற்பாடுகளில் எழுச்சி இல்லை. மாறாக அவரைப் பொறுத்தவரை, வட மாகாணம் சட்டம் மற்றும் ஒழுங்கு இல்லாத ஒரு இடத்தைப்போல இருக்கிறது என்கிற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக பத்திரிகைகளில் ஒரு சில சம்பவங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.
வலுவான சட்ட அமைப்புக்கு தவராஜா அழைப்பு விடுக்கிறார்
வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராஜா அவர்களும் ஆவா குழுவைப் பற்றி அத்தனை தீவிரமாகக் கருதவில்லை. அவரும்கூட இது குழப்பக்கார இளைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்வு எனக் குறிப்பிட்டார். வேறு சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் வடக்கில் நடக்கும் குற்றவியல் விகிதம் புறக்கணிக்கத் தக்கது, இந்தப் போக்கை நிறுத்துவதற்காக சட்டத்தை முறையாக நடைமுறைப் படுத்தவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
“கடுமையான தண்டனை வழங்கும் சட்ட அமைப்பு ஒன்று எங்களிடம் இருக்கவேண்டும். ஒன்றில் அவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும் அல்லது அவர்கள் சிறு பராயத்தினராக இருப்பதால் அவர்களை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்ப வேண்டும்” என்று அவர் சொன்னார். அவரது நுட்பமான ஆய்வின்படி அவர் தெரிவிப்பது, வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அனுப்பும் இலகுவான பணம் இங்கு வழிந்தோடுவதுதான் இந்த நிலமைக்கு வழிவகுத்துள்ளது என்று.
“இந்தப் பையன்கள் பணத்துக்காக அவர்களது பெற்றோரை நச்சரிக்கிறார்கள். பணம் கிடைத்ததும் அவர்கள் உந்துருளிகளை கொள்வனவு செய்கிறார்கள். பின்னர் வாழ்வதற்காக அவர்கள் குற்றச் செயல்களை மேற்கொள்கிறார்கள்” என்று அவர் சொன்னார். பல்கலைக்கழகத் தலைவர்கள் வேலையில்லாப் பிரச்சினைதான் இதற்கு காரணம் என்கிறார்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான் பேராசிரியர் பி. பாலசுந்தரம்பிள்ளை, வடக்கில் தனது வடபகுதி கல்வி வாழ்க்கையின் மூலம் முன்னோடியாகத் திகழ்பவர் தெரிவிப்பது, மக்கள் யுத்தத்துக்கு பின்னான சூழலை பொருட்களிலும், சேவைகளிலும் மற்றும் பயணங்களிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அனுபவித்து மகிழ்ந்தாலும் வேலையில்லாப் பிரச்சினை மிகவும் தீவிரமான ஒரு பிரச்சினையாக உள்ளது, அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
“யாழ்ப்பாணத்தில் மட்டும் 12,000 பட்டதாரிகள் வேலையற்று இருக்கிறார்கள். இது ஒரு பிரதான பிரச்சினை. மற்றையது சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள். இங்கு குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அவை சிறிய அல்லது அற்ப குற்றங்கள். அரசாங்கம் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டும். இது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சமமான கருத்து” என்று அவர் தெரிவித்தார்.
ஆவா குழுவினரால் உருவாக்கப்படும் குற்றங்கள் எவ்வளவு தீவிரமானவை என்று கேட்டதுக்கு அவர் சொன்னது, “ அதைப்பற்றி எனக்குத் தெரியாது. இருந்தும் பத்திரிகைகளில் இங்கும் அங்குமாக நான் குற்றங்களைப் பற்றி வாசித்துள்ளேன். குற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. அதனால்தான் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சிலதைச் சொல்லி பிரச்சினையை வரவழைத்துக் கொண்டார்” என்று.குற்ற அலைகளுக்கான காரணங்கள் பற்றிய அவரது சமூகவியல் ஆய்வில் அவர் கண்டது, வேலையில்லாப் பிரச்சினையெ பிரதான காரணம் என்று. முந்தைய அரசாங்கத்தின் காலத்தில் வடக்கின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்கு ஏராளமான முக்கியத்துவம் வழங்கப்பட்டது என அவர் சொன்னார்.
“அந்த அரசாங்கம் ஏ-9 வீதியை மீளக்கட்டியது மற்றும் ரயில் பாதைகளை மீண்டும் அமைத்தது. அவர்கள் மின்சாரத்தை மீண்டும் வழங்கினார்கள்”. அது அப்படி இருக்கலாம், ஆனால் மனித அபிவிருத்தி இடம் பெறவில்லை என அவர் சொன்னார்.
“ தொழிலாளர்கள் போன்ற வெற்றிடங்களுக்குக் கூட குளியாப்பிட்டி போன்ற இடங்களில் இருந்து வேலை செய்வதற்கு ஆட்கள் அனுப்பப் படுகிறார்கள். இது நியாயமானதா? மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் நியமிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம். அவர்கள் வரட்டும்” என்றார் அவர்.தமிழர்களின் பிரதான ஆதரவுடன் நிறுவப்பட்ட தற்போதைய அரசாங்கத்தின் செயல்திறன் பற்றி வினவப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, அபிவிருத்தி விடயத்தில் அது மிகவும் மோசமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
“அடிப்படை வசதிகளின் அபிவிருத்தியில் முந்தைய அரசாங்கம் நன்கு பணியாற்றியது, ஆனால் தற்போதைய அரசாங்கம் மக்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தோல்வியடைந்துள்ளது. ஆதுதான் எனது கவலை” என்றார் அவர்.
தமிழர்களின் வாக்களிக்கும் பாணி பற்றிய ஆய்வின்படி, தமிழ் மக்கள் அவர்களது பொருளாதார பிரச்சினைகளுடன் ஒப்பிடுகையில் அவர்களது அரசியல் உரிமைகள் பற்றியே அதிகம் கவலைப்படுகிறார்கள். இதைக் குறிப்பிடும்போது பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தது, ”தமிழ் மக்கள் தெளிவாகத் தெரிவித்திருப்பது ஒரு ஐக்கிய இலங்கையையே. மாகாணசபைகளுக்கு இன்னும் சிறிது அதிகாரத்தைப் பரவலாக்குவதில் உள்ள பிரச்சினைதான் என்ன?”
வடக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தில் வன்முறைகள் தோன்றுவதை வித்தியாசமான முன்னோக்குடன் பார்க்க வேண்டும். உண்மையில் 1970 களின் முற்பகுதியில் கடத்தலின் வடிவத்தில் குற்றங்கள் வடக்கில் இடம் பெற்றது எல்.ரீ.ரீ.ஈ யின் வருகையுடனேயே. இன்னும் ஆவாவுமும் குற்றவியல் நோக்கம் கொண்ட ஒரு குழு. காவல்துறையினரின் கருத்துப்படி இந்த நேரத்தில் அதற்குப் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் எதுவும் இல்லை.
பொதுவாக வடபகுதி சமூகம் எந்த விலை கொடுத்தும் எல்.ரீ.ரீ.ஈ இற்குப் புத்துயிரளிப்பதற்கு விருப்பமற்றவர்களாக உள்ளார்கள், ஏனென்றால் அவர்கள் மனங்களில் கொடூரமான யுத்தகால நினைவுகள் இன்னமும் உள்ளன. இருப்பினும் காவல்துறை வட்டாரங்களின் கூற்றுப்படி அரசியல் நோக்கமுள்ள வன்முறைக் குழுக்களை உருவாக்க சில சக்திகள் முயற்சிப்பதை முற்றாக அலட்சியப்படுத்திவிடவும் முடியாது.
தனது ஆத்திரமூட்டும் மோசமான வார்த்தைகளுக்கு பெயர்பெற்ற வட மகாணசபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம், ஒரு முழமையான அமைப்பாக எல்.ரீ.ரீ.ஈ இனை புத்துயிர்ப்பதற்கு உள்ள சாத்தியங்களை நிராகரித்தார். எனினும் அரசாங்கம் அவர்களது மனக்குறைகளுக்கு தீர்வு காணாவிட்டால், எதிர்காலத்தில் அவ்வப்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களால் இயல்பு வாழ்க்கை சீரழிந்துபோகும்படியான ஒரு நிலமை உருவாகலாம் என அவர் தெரிவித்தார்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
thenee.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக