![]() |
ஒபாமா போட்டோவில் திலுமுல்லு செய்த மோடி |

கடிதங்கள் முற்றிலும் புனையப்பட்டவை என்று கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் இருக்கும் சுதா பரத்வாஜ் பதிலளித்துள்ளார். e>தன்னுடைய வழக்கறிஞர் எல்டர் குரோவர் மூலம் தன்னுடைய பதிலை கடிதமாக அவர் வழங்கியுள்ளார்.
எல்கார் பரிஷத் வழக்கை புலனாய்வு செய்கின்ற மகாராஸ்டிரா காவல்துறை வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுதா பரத்வாஜ், மிலின்ட் டெல்ட்பே, ரோனா வில்சன் ஆகியோரின் சில கடிதங்களை வாசித்து காட்டியது.
திட்டமிடுதல், பணம் சேகரித்தல், நிதி மற்றும் ஆயுதம் திரட்டுதல் பற்றிய இந்த கடிதங்கள் நக்சல்களுடையது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வழக்கறிஞரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ் டெல்லி தேசிய கல்லூரியில் கௌரவ பேராசிரியராக உள்ளார். தொழிலாளர் நலன்களுக்காக அடிக்கடி வாதாடி வருபவரும் கூட. புனே காவல்துறை செய்தியாளர்களிடம் வழங்கியுள்ள கடிதம் என்னையும், பிற மனித உரிமைகள் வழக்கறிஞர் செயற்பாட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் வகையில் முற்றிலும் புனைப்பட்டது.
02. குற்றம் காண முடியாத மற்றும் வெளிப்படையாக கிடைக்கக்கூடிய உண்மைகளின் கலவையும், அடிப்படை ஆதாரமற்றதாய் இது புனையப்பட்டுள்ளது. கூட்டங்கள், கருத்தரங்குகள், போராட்டங்கள் போன்ற பல்வேறுபட்ட சட்டபூர்வ மற்றும் ஜனநாயக செயல்பாடுகளை மாவோஸ்ட்டுகளால் நிதி ஆதரவு அளிக்கப்பட்டவை என குற்றஞ்சாட்டுவதன் மூலம் சட்டபூர்வமற்றதாக்க காட்டுவதற்கான முயற்சி நடைபெற்றுள்ளது,
03. மனித உரிமை வழக்கறிஞர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது முத்திரை குத்தப்பட வேண்டுமென்றும், அவர்களின் பணிகளை தடுக்கவும், அவர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டவும் வேண்டுமென்றும் திட்டமிட்டு பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
05. மோகாவில் எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு நான் ஒருபோதும் ரூபாய் 50 ஆயிரம் கொடுக்கவில்லை என்பதை உறுதிபட தெரிவித்து கொள்கிறேன். மகாராஸ்டிராவில் இருந்து அன்கிட் அல்லது காஷ்மீர் பிரிவினைவாதிகளோடு தொடர்பிலுள்ள காம் அன்கிட் என யாரையும் எனக்கு தெரியாது.
06. மனித உரிமை செயற்பாட்டாளரான மூத்த மற்றும் மதிப்புக்குரிய கவுதம் நவ்லகாவை எனக்கு தெரியும். அவரை குற்றவாளியாக்கும் வகையிலும், அவருக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையிலும் அவரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
08. பியுசிஎல்-யில் செயல்படும் ஒரு தலித் மனித உரிமை செயற்பாட்டாளரான வழக்கறிஞர் பட்டம் பெற்று, மனித உரிமை சட்ட வலைபின்னலோடு செயல்படும் பிரசாத் சௌகானை எனக்கு தெரியும். அவருக்கு எதிராக அடிப்படை ஆதரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
ஜூலை மாதம் 4ம் தேதி ரிபப்பிளிக் டிவியில் வெளியானதை நான் மறுத்திருந்ததைபோல, இதுவொரு புனையப்பட்ட கடிதம் என்பதை மீணடும் தெரிவித்து கொள்கிறேன். என்னை புனேக்கு திடீரென கொண்டு செல்வதற்கு முன்னால் புனே நீதிமன்றத்திலோ, சிஐஎம் ஃபரிதாபாத்திலோ இந்த கடிதம் கொண்டுவரப்படவில்லை.
இந்த கருத்துகளை தன்னுடைய கடித்தில் குறிப்பிட்டு தனது வழக்கறிஞர் மூலம் சுதா பரத்வாஜ் பதிலளித்துள்ளார்.
புனே உள்பட டெல்லி நாக்பூர் உள்ளிட்ட 6 இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. காணொளிகளை சோதிப்பது நடைபெற்று கொண்டிருக்கிறது.
மாவோஸ்ட் நிறுவனங்கள் பெரும் கூட்டு சதியில் ஈடுபட்டு்ளளதாக புலனாய்வில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. புலனாய்வில் தெரிய வந்த புதிய பெயர்களின பேரில் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக