செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

நடிகர் சிவாஜியின் நிழல் மனைவி ரத்னமாலா ... ஊருக்கு தெரியாத இன்னொரு மனைவி குழந்தை குடும்பம் ..

ரத்னமாலா .சிவாஜியின் நிழல் மனைவி 
ரத்னமாலா .. பிரபல நாடக நடிகை .. ஏராளமான திரை பாடல்களை பாடியும்
இருக்கிறார். சிவாஜி ரத்னமாலா தம்பதிகளுக்கு குழந்தைகளும் உண்டு . மிகவும் பெரிய இசை அமைப்பாளர்களின் இசையில் இவர் பாடியும் இருக்கிறார்.
  கே. வி. மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, எஸ். எம். சுப்பையா நாயுடு, சி. ஆர். சுப்புராமன், சி. என். பாண்டுரங்கன், எஸ். வி. வெங்கட்ராமன், ஆர். சுதர்சனம், டி. ஆர். பாப்பா, ஜி. கோவிந்தராஜுலு நாயுடு, டி. ஜி. லிங்கப்பா, எம். எஸ். விஸ்வநாதன், எஸ். தட்சணாமூர்த்தி, கே. என். தண்டாயுதபாணி பிள்ளை, எஸ். ராஜேஸ்வரராவ், எஸ். அனுமந்தராவ், டி. ஆர். ராமநாதன், ஆர். கோவர்த்தனம், வேதா, ஹெச். ஆர். பத்மநாப சாஸ்திரி, பெண்டியாலா நாகேஸ்வரராவ், கண்டசாலா, எம். எஸ். ஞானமணி போன்ற பல இசையமைப்பாளர்கள் அமைத்த பாடல்களை இவர் பாடியுள்ளார்.
vikatandiary.blogspot.com/: சிவாஜியின்_மனைவி_ரத்னமாலா
சிவாஜியின் மனைவி கமலாம்மா
சிவாஜி கமலா குடும்பம்
என்றுதான் நம் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் சிவாஜிக்கு இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் என்பது தெரியுமா?
அந்தப் பெண்மணியின்
பெயர்தான் ரத்னமாலா .சென்னை தியாகராய நகரில்தான் வசித்து வந்திருக்கிறார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்மணி . அவர் வீட்டு வாசலில் ‘ரத்னமாலா கணேசன்’ என்று பெயர்ப் பலகை இருந்துள்ளது.
அந்த கணேசன் ஜெமினி
கணேசனாக இருக்குமோ என்று பலர் குழம்பியிருக்கிறார்கள். இல்லை, அது சிவாஜி கணேசனைக் குறிப்பதுதான்.
ரத்னமாலா ஒரு நாடக நடிகை.
‘என் தங்கை’ படத்தில் எம். ஜி. ஆரின் தங்கையாக நடித்தவர் ஈ. வி. சரோஜா. அது படமாவதற்கு முன்பு நாடகமாக நடத்தப்பட்டது. அதில் எம். ஜி. ஆரின் தங்கையாக நடித்தவர் ரத்னமாலாதான்.
‘என் தங்கை’ நாடக ஒத்திகை

எங்கே, எப்போ நடந்தாலும் தம்பி கணேசன் தவறாமல் வந்துடுவார் என்று எம். ஜி. ஆர். குறும்புப் புன்னகையோடு கமெண்ட் அடிப்பது வழக்கமாம்.
விஷயம் தெரியாதவர்களுக்கு இது சாதாரணமாகப்படும். சிவாஜி ரத்னமாலாவை நேசித்தார் என்று தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதன் உள்ளர்த்தம் புரியும்.
‘இன்பக் கனவு’ நாடகத்தில்
எம். ஜி. ஆரின் ஜோடியாக நடித்தார் ரத்னமாலா. ‘பராசக்தி’ திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு முன்பு பலமுறை நாடகமாக நடிக்கப்பட்டது. அதில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் ரத்னமாலாதான்.
அதேபோல ‘வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்திலும் சிவாஜிக்கு ஜோடியாக ஜக்கம்மாவாக (திரைப்படத்தில் இந்த கேரக்டரைச் செய்தவர் எஸ். வரலட்சுமி) நடித்திருக்கிறார் ரத்னமாலா.

சிலர் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம். ஜி. ஆருடன் ஜோடியாக ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ என்று பாடி ஆடிய நடிகைதான் ரத்னமாலா என்று தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அல்ல; அவர் வெறும் ‘ரத்னா’ .
ரத்னமாலா திரைப்படங்களில் நடித்திருப்பதாகத் தெரியவில்லை.
ரத்னமாலா ஒரு நடிகை மட்டுமல்ல,
நல்ல பாடகியும்கூட. படு ஹிட்டான பாடல் ஒன்றைச் சொன்னால் ‘அட அவரா' என்பீர்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ‘போகாதே போகாதே என் கணவா...’ பாடலைப்பாடியது ரத்னமாலாதான். ‘குமார ராஜா’ என்கிற படத்தில் ஜே. பி. சந்திரபாபு பாடிய ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே’ பாடல் நமக்குத் தெரியும்.
அதே படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து, ‘உன் திருமுகத்தை ஒருமுகமா திருப்பு’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார் ரத்னமாலா.
‘அன்னை என்றொரு படம்,
பி. பானுமதி நடித்தது. அதில் சந்திரபாபுவுடன் இணைந்து ‘தந்தனா பாட்டுப் பாடணும், துந்தனா தாளம் போடணும்’ என்று பாடுபவர் ரத்னமாலாதான்.
அதேபோல ‘குலேபகாவலி’ படத்தில் ‘குல்லா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு’ பாடலைப் பாடியதும் ரத்னமாலாதான். வாழ்க்கை, ராணி சம்யுக்தா என இப்படி அவர் சுமார் 100 படங்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.
சிவாஜி ரத்னமாலாவை
ஊரறியத் திருமணம் செய்து கொள்ள முயன்றபோது அவரைத் தடுத்து, ‘வேண்டாம்! உங்களிடம் மிகச் சிறந்த நடிப்புத் திறன் இருக்கிறது. நீங்கள் மேலும் மேலும் உயரங்களுக்குப் போக வேண்டியவர்.
உங்கள் இமேஜ் பாழாகிவிடக் கூடாது. ஊரறிய நம் திருமணம் நடக்கவில்லை என்றாலும், நான் உங்கள் மனைவிதான் . அதில் சந்தேகம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடருங்கள். அதில் குறுக்கே வர நான் விரும்பவில்லை " என்று தீர்மானமாக மறுத்து ஒதுங்கிவிட்டார் ரத்னமாலா.
சிவாஜியின் மனைவி கமலாவுக்கும் இந்த விஷயம் தெரியும் என்றும், அவர் ரத்னமாலாவை தன் மனதில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றினார் என்றும் சொல்கிறார்கள்.
சிவாஜி எந்த ஒரு புதுப் படத்தில் ஒப்பந்தம் ஆனாலும், எந்த ஒரு நல்ல செய்தி கிடைத்தாலும், முதலில் ரத்னமாலா வீட்டுக்குப் போய் அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வார் என்கிறார்கள்.
சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும்
பிறந்த பெண் குழந்தையின் பெயர் லைலா. லைலாவின் கணவர் பெயர் தன்ராஜ். இவர் ஒரு நாடக நடிகர். விஷயம் தெரிந்தவர்கள் தன்ராஜை ‘சிவாஜியின் மருமகன்’ என்றே அழைப்பார்களாம்.
கடைசி காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட ரத்னமாலா 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதியன்றுதான் இறைவனடி சேர்ந்தார். சாகும்போது அவருக்கு வயது 76 .
அவர் தம் கண்களை தானமாக எழுதி வைத்திருந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சரத்குமார், மனோரமா, மஞ்சுளா உள்ளிட்ட பலர் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
கோவலனை மட்டுமே மனதில்
நிறுத்தி கற்பு நெறியிலிருந்து பிறழாமல் வாழ்ந்ததால், சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சமமான இடம் மாதவிக்கும் உண்டு.
அதேபோல, எந்தவொரு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னை நேசித்த சிவாஜியின் நலனையும் உயர்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு,
அவரின் உண்மையான மனைவியாக வாழ்ந்து மறைந்த ரத்னமாலா அநேகரின் மனதில் ரத்தின மாலையாகவே ஜொலிக்கிறார்.


 rprajanayahem.blogspot.com :சிவாஜியின் சொந்த வாழ்க்கை பற்றி அவர் என்ன தான் பல நடிகைகளோடு நடித்தாலும் குடும்ப வாழ்க்கை யை சிறப்பாக அமைத்து கொண்டவர் என்பதாக ஒரு பிம்பம் உண்டு . எம்ஜியார் , ஜெமினி,எஸ் எஸ் ஆர் இந்த கடமையிலிருந்து வழுவியவர்கள் என்ற அபிப்பராயத்தை ஊர்ஜிதப்படுத்த இதை சொல்வார்கள் . நடிகைக்கு திருமண அந்தஸ்து கொடுத்து குடும்ப வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்ளாதவர் சிவாஜி என்ற அர்த்தத்தில் .

உண்மை வேறு . இந்த ரத்தினமாலாவுக்கு சிவாஜி மூலம் குழந்தைகள் உண்டு . தான் சிவாஜி கணேசனின் மனைவி தான் என்பதில் இவருக்கு மிகுந்த பிடிவாதம் இருந்தது .சென்னையில் ரத்னமாலா வீட்டில் நேம் போர்டு " ரத்னமாலா கணேசன் " என்று தான் போடப்பட்டிருந்தது .

'அழைத்தால் வருவேன் 'படத்தில் என்னோடு நடித்த ஸ்ரீராஜ் என்பவர் நடிகர் அசோகன் நாடகக்குழுவில் கதாநாயகனாக நடித்தவர் . இந்த ஸ்ரீராஜ் கூட பிறந்த மூத்த சகோதரர் தன் ராஜ் பழைய நடிகர் . அறுபதுகளில் பல படங்களில் டாக்டர் , இன்ஸ்பெக்டர் ஆகிய ரோல்கள் செய்திருக்கிறார் . இந்த தன்ராஜ் தான் ரத்னமாலா கணேசனின் மகளை திருமணம் செய்தவர் . பலரும் இவரை பற்றி குறிப்பிடும் போது ' சிவாஜி சார் மருமகன் ' என்றே சொல்வார்கள் .
சமீபத்தில் இந்த ரத்தின மாலா இறந்து விட்டார் என கேள்விப்பட்டேன் .உண்மை தானா ?
Read;

/tamil.filmibeat.com:;எம்.ஜிஆர், சிவாஜி படங்களில் நடித்தவரான பழம்பெரும் நடிகை ரத்னமாலா மரணமடைந்தார். இன்பக்கனவு என்ற படத்தில் எம்.ஜி.ஆருடனும், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தவர் நடிகை ரத்னமாலா. பராசக்தி படத்திலும் சிவாஜியுடன் இணைந்து நடித்தவர்.

 டி.ஆர். மகாலிங்கத்தின் ஓர் இரவு உள்ளிட்ட பல நாடகங்களிலும் நடித்துள்ளார். பல நடிகையருக்கு பின்னணியும் பாடியுள்ளார். நல்ல பாடகியான ரத்னமாலா, வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் பாடிய போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்ற பாடல் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமானது. அதேபோல குல்லா போட்ட நவாப்பு, தந்தனா பாட்டு பாடுங்க, தந்தனா தாளம் கேளுங்க போன்ற பாடல்களும் வெகு பிரசித்தம்.
 76 வயதான ரத்னமாலா சென்னை தியாகராய நகரில் வசித்து வந்தார். அவருக்கு லைலா என்ற மகள் மட்டும் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரத்னமாலா வீட்டிலிருந்தபடி சிகிச்சை எடுத்து வந்தார். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ரத்னமாலா இறந்தார். இறந்த பின் கண்தானம் செய்யவேண்டும் என அவர் கூறியிருந்தார். அதன்படி அவருடைய கண்கள் தானமாக வழங்கப்பட்டன. ரத்னமாலா உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், சங்கத் தலைவர் சரத்குமார், விஜயகுமார், நடிகைகள் மனோரமா, மஞ்சுளா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மலரஞ்சலி செலுத்தினர்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சிவாஜி தன்"குழந்தைகளுக்கு உதவி செய்தாரா....தகவல் புதிதாக இருக்கிறது...அவா் வாழ்கின்ற காலத்தில் வரவில்லை.ரத்தினமாலா சிவாஜியின் உயா்வுக்கும் தங்கள் காதலுக்கும் மதிப்பு கொடுத்து அன்பு செய்திருக்கிறாா்.உயா்ந்த உள்ளம.அவா் பாடிய பாடல்கள் அனைத்தும் இனிமையானவை.