இந்த ஆண்டு தொடக்கத்தில்
மஹாராஷ்டிராவின் மேற்கு பகுதியில்
நடைபெற்ற சாதி அடிப்படையிலான வன்முறை தொடர்பாக 5 பிரபல இந்திய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லாகா, வரவர ராவ், அருண் ஃபெரைரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை தொடர்பான விசாரணையில், பிற இடது சாரி வழக்கறிஞர்கள் மற்றும் அறிஞர்களின் வீடுகளில் காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணை தொடர்பாக ஜூன் மாதம் மாவோயிஸ்டுகளோடு தொடர்புடையதாகக் குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நடைபெற்ற மிக பெரியதொரு பேரணியில் இந்த செயற்பாட்டளர்கள் தலித்துகளை தூண்டிவிட்டதால் நடைபெற்ற வன்முறையால் ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பீமா கோரகான் சண்டையின் 200வது ஆண்டை நினைவுகூர்வதற்கு புனே நகரில் தலித் குழுக்கள் கூடியிருந்தன. சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான முதல் சண்டையாக பிரிட்டிஷ் காலனியாதிக்க படைப்பிரிவுகேளோடு சேர்ந்து உயர் சாதி ஆட்சியாளருக்கு எதிராக தலித்துக்கள் சண்டையிட்டதுதான் கோரகான் மோதல். >எல்கார் பரிஷெத் வழக்கு தொடர்பாக மும்பையிலுள்ள செயற்பாட்டளர்கள் வெர்னன் கொன்சாலஸ் மற்றும் அருண் ஃபெரிரா வீடுகளில் புனே காவல்துறையினர் இன்று தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.
சோதனைக்கு பின்னர், அவர்களை காவல்துறையினர் புனேவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பிபிசியிடம் பேசிய கொன்சாலஸின் மகன் சுனில் கொன்சாலஸ், "காவல்துறையினர் எங்கள் வீட்டுக்கு காலை 6 மணிக்கு வந்தனர். பிற்பகல் 1.30 மணி வரை வீட்டில் இருந்தனர். வீடு முழுவதும் சோதனையிட்ட அவர்கள், புத்தகங்களை சோதனையிட்டதோடு,கணினியின் டிஸ்க் மற்றும் செல்பேசிகளை கொண்டு சென்றனர். எங்கள் பென் டிரைவ்களையும் பரிசோதனை செய்தனர். எல்லா இடங்களில் கிடைக்கின்ற இலக்கியங்களையும் அவர்கள் எங்கள் வீடுகளில் இருந்து எடுத்து சென்றுள்ளனர். என்னுடைய வரலாற்று புத்தகமான "போல்ஷிவிக் புரட்சி" புத்தகத்தை கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலைமையில் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
செயற்பாட்டாளர் அருண் ஃபெரீராவும் தானேயிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று மதியம் புனேவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஹைதராபாத், டெல்லி, மும்பை, மும்பை, ராஞ்சி போன்ற பல்வேறு இடங்களில் தேடுதல் நடைபெற்று வருவதை இந்த புலனாய்வின் ஒரு பகுதியாக இருக்கின்ற புனே மூத்த காவல்துறை அதிகாரி உறுதி செய்துள்ளார்.
காவல்துறையால் தேடுதல் வேட்டை நடத்தப்படுகின்ற வீடுகள் மற்றும் அலுவலகங்களில், டெல்லியிலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளரும், பத்திரிரகையாளருமான கௌதம் நவ்லாகா, ஹைதராபாத்திலுள்ள எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான வரவர ராவ், மும்பையிலுள்ள செயற்பாட்டாளர் வெர்னன் கொன்சால்வஸ் மற்றும் அருண் ஃபெரீரா, டெல்லியிலுள்ள சிவில் உரிமைகள் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் மற்றும் ராஞ்சியிலுள்ள ஸ்டான் சுவாமி ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களும் அடங்குகின்றன.
இந்த கைதுகளுக்கு எதிராக பல்வேறு தரப்பிலும் இருந்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக