ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

கோயம்பேடு ...சுத்தமான தண்ணீர் இலவசம் ,, 20 வருடங்களுக்கு முன்பே 2 லட்சம் லிட்டர் RO தண்ணீர் கலைஞரின் மற்றொரு சாதனை.

Sundaram Kannan : நாம் அனைவரும் அறிந்தது கோயம்பேடு பேருந்து நிலையம்
ஆசியாவின் மிகப் பெரிய பேருந்து நிலையம்.....
அறியாதது அங்கு 2 லட்சம் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட RO (Reverse Osmosis) plant நிறுவப்பட்டு இலவசமாக அனைவருக்கும் RO தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது...இதை கொண்டு வந்தவர் கலைஞர்.
இது போன்ற திட்டம் வேறு எங்கும் நடைமுறையில் உள்ளதாக தெரியவில்லை...
ரயில் நிலையங்களில் இன்றும் RO தண்ணீர் விலைக்கு தான் விற்கப்படுகிறது அது ஒரு பெரும் சாதனையாகவும் சொல்லப்படுகிறது....
ஆனால் 20 வருடம் முன்னதாகவே RO தண்ணீரை இலவசமாக கொடுத்ததால் அதன் பயனை அறியத் தவறிவிட்டோமா....
அம்மா குடிநீர் என்று 10 ரூபாய்க்கு விற்ற குடிநீர் அறிமுகம் / பிரபலம் ஆன அளவிற்கு இது ஆகவில்லை...என்பது வருத்திற்குரியது...
பெரிதுபடுத்தப்படாதற்கு காரணம் கலைஞர் என்பதாலா

கருத்துகள் இல்லை: