tamil.oneindia.com -veerakumaran. "சென்னை: கலைஞர் நினைவஞ்சலி கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்பது தேசிய அளவில் இப்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பாதுகாப்பு
அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்லது தமிழகத்தைச்
சேர்ந்தவரான மத்திய இணை
அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை கூட நிகழ்ச்சிக்கு பாஜக தலைமை அனுப்பி இருக்க
முடியும். ஆனால், அமித்ஷாவே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருவது, பலரது
புருவங்களை உயர்த்தியுள்ளது.
கலைஞர் அஞ்சலி நிகழ்வில் அமித்ஷா
பங்கேற்றால் அது பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வழிவகுக்கும். தேர்தலுக்குப்
பிந்தைய திமுக மற்றும் பாஜக கூட்டணி வாய்ப்பை புறந்தள்ள முடியாது என்பதும்
இதில் ஒன்று.
பாஜகவிற்கு லாபம்<
பாஜகவுக்கு
எதிராக தென்னிந்திய மக்கள் மனநிலை உள்ளது போன்ற தோற்றம் உள்ள இந்த
காலகட்டத்தில், திமுக போன்ற ஒரு திராவிட சித்தாந்த கட்சி பாஜக தலைவரை,
தங்கள் நிகழ்ச்சிக்கு அழைத்து இருப்பது, அமித்ஷாவுக்கு மட்டுமல்ல, பிரதமர்
நரேந்திர மோடிக்குமே, மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கும்.
திமுக தலைவர்
மறைந்த கலைஞருக்கு , மெரினாவில் நினைவிடம் அமைக்க, தமிழக அரசு இடம்
தராமல் இழுத்தடித்த பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இருப்பதாக பரவிய
கருத்துக்கு பதில் தரும் விதமாக அமித்ஷா வருகை அமைந்துள்ளது. இது பாஜக மீது
விழுந்த கரையை துடைக்க உதவும்.
போராளி
இந்தி
எதிர்ப்பு போராளியான கலைஞருக்கு , அமித்ஷா வந்து மரியாதை செய்வது
என்பது, பாரதிய ஜனதா கட்சி, இந்தி மற்றும் இந்துத்துவா ஆகியவற்றுக்கு
மட்டுமேயான கட்சி என்பது போன்று உருவாகியுள்ள தோற்றத்தை உடைப்பதற்கு
பயன்படும். இது அக்கட்சிக்கு மற்றொரு லாபம். அதிலும் பொதுத் தேர்தல்
நெருங்கும் நேரத்தில் லாபமோ, லாபம்.
ஸ்டாலினுக்கு லாபம்
திமுக
செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கம் காட்டுவது
என்பது சில வகைகளில் அரசியல் லாபத்தை ஏற்படுத்தி தரும் என்ற நோக்கம்
இருப்பதாக கூறப்படுகிறது. கலகம் செய்து வரும் அழகிரிக்கு, பாஜக ஆதரவு
அளித்து, அவருக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டுவிடுவதை தவிர்க்க இந்த
உறவு உதவும் என்பது ஸ்டாலின் ஆதரவாளர்கள் கருத்து.
காங்கிரசை பணிய வைக்க
காங்கிரஸ்
தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடு திமுக தலைமைக்கு நெருடலை
ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில், நடிகர் கமல்ஹாசன், விடுதலை
சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல சிறிய கட்சி தலைவர்களை
வரிசையாக ராகுல் காந்தி சந்தித்து ஆலோசித்தார். இயக்குநர்.
பா.ரஞ்சித்தையும் ராகுல் காந்தி விட்டுவிடவில்லை. திமுக சீட் ஒதுக்கீடு
விஷயத்தில், முரண்டுபிடித்தால், டிடிவி தினகரன் கட்சியுடன் கூட்டணி
வைத்துக் கொள்ளலாமா என்று ராகுல்காந்தி யோசித்து வருவதாக ஒரு தகவல்
வெளியாகி உள்ளது. எனவே, திமுக, பாஜகவுடன் நெருக்கம் காட்டுவது போன்ற ஒரு
தோற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை இருப்பதாகவும்
கூறப்படுகிறது.
அரசியல் இல்லாவிட்டால் எப்படி
ஆனால்
இதில் வேறு ஒரு கோணமும் உள்ளது. திமுகவுடன், பாஜக வேண்டுமென்று நெருக்கம்
காட்டி, காங்கிரஸ்-திமுக கூட்டணியை உடைத்து விட்டு திமுகவையும்,
காங்கிரசையும், தேர்தல் நேரத்தில் பலவீனப்படுத்தும் நோக்கம் அமித்ஷாவிற்கு
இருக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். பல்வேறு
அரசியல் கணக்குகளுடனும், வருங்கால திட்டங்களுடனும்தான் நடைபெறப்போகிறது
கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சி. அரசியல் சாணக்கியர், என்று
அழைக்கப்படும் கலைஞரின் நினைவேந்தலில், இப்படி கூட ஒரு அரசியல்
இல்லாவிட்டால் அது பொருத்தமாக இருக்காது அல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக