savukku சவுக்கு : ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக
வளர்ச்சியைக் காட்டும் அறிக்கை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க
அமைச்சகத்தின் வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பயன்படுத்திய அளவுகோலை 2004-05 என்பதிலிருந்து 2010-2011 என
மாற்றியது. மாற்றப்பட்ட அடிப்படை ஆண்டுக் கணக்கீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கான மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி அறிக்கை அமைச்சகத்தின் வலைதளத்தில் ஜூலை 25இல் வெளியிடப்பட்டது; அதில் இந்தியா இதே அடிப்படை அளவுகோலாக பயன்படுத்தப்பட்டால், 2006-07இல் (மன்மோகன் சிங் பிரதமராக இருந்த சமயத்தில்) 10.8 சதவிகிதம் வளர்ந்தது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை வெற்றி பெற்றது என முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் கடந்த வாரம் கூறியிருந்தார். “இந்தப் புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டின்படி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த 2004-2014ஆம் ஆண்டுகளில்தான் பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்கியது என நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.
மோடியின் அரசு தனது ஐந்தாவது ஆண்டில் நன்றாகச் செயல்பட வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த அரசால் எப்போதுமே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-II அரசுக்கு இணையாக வர முடியாது, ஆனால் இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-II க்கு இணையாக வர வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைவிட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறிக்கொள்வதன் அடித்தளத்தை ஆட்டம் காண வைக்கும் வகையில், அந்த அறிக்கையில் தகவல்கள் உள்ளதால், பா.ஜ.க. ஆத்திரம் கொண்டது. இதனால், இது அரசியல் சொற்போரைத் தூண்டிவிட்டது.
ஞாயிற்றுக்கிழமை வெளியான ஒரு வலைப்பதிவில், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இந்தியா 2003 – 2008ஆம் ஆண்டில் உயர் விகிதத்தில் வளச்சி அடைந்தது, இதற்கு அப்போது ஆட்சியிலிருந்து வெளியேறிய வாஜ்பேய் அரசின் பணிகளுக்குத்தான் நன்றி கூற வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். 1991 முதல் 2004 வரையிலான தொடர்ச்சியான கூடுதல் சீர்திருத்தங்கள், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் உகந்த உலகளாவிய சாதக நிலை தொடர்ந்தது.
ஆனால், இந்த ஹனிமூன் முடிந்தபோது, வளர்ச்சி சரியத் தொடங்கிற்று. வளர்ச்சி தக்கவைக்கப்படுவதை உறுதி செய்துகொள்ள, இரண்டு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று ஜேட்லி கூறினார். “முதலில், நிதிக் கட்டுப்பாட்டில் சமரசம் செய்துகொள்ளப்பட்டது. மேலும், இறுதியில் வங்கிகளை ஆபத்தில் கொண்டுவிடும் என்ற உண்மை தெரிந்தாலும்கூட பொறுப்பற்ற முறையில் கடன் வழங்குமாறு வங்கி அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அப்படியும் 2014இல், ஐ.மு.கூ. ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேறும்போது, வளர்ச்சி என்ற வகையில் பார்த்தாலும், கடைசி மூன்றாண்டுப் பதிவின்படி சாதாரணமானது என்பதைவிடக் குறைவாக இருந்தது” என்றார் அருண் ஜேட்லி.
அரசு ஆதரவுடன் பொருளாதார நிபுணர், சுதீப்தோ முட்டேல் தலைமையில் நடைபெற்ற மன்றத்தில், வெளியிடப்பட்ட இந்த அறிக்கை மோடி அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.
இந்த அறிக்கை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது கட்சியினருக்கு எதிராக எதிர்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தின் பகுதியாக மாறும் என்று அரசு கருதுகிறது. இந்நிலையில் அறிக்கை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டது.
ராகுல் ஸ்ரீவஸ்தவா
நன்றி: இந்தியா டுடே
https://www.indiatoday.in/india/story/report-gdp-growth-upa-nda-1319909-2018-08-21

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக