வியாழன், 30 ஆகஸ்ட், 2018

அழகிரி மீதான சொல்லம்புகள் .... நாகாக்க ... காவாக்கால் ...

தமிழர்களுக்கு எப்பொழுதும் ஒரு soft Target கிடைத்துவிட்டால் தங்கள் முழு
வீராவேசத்தையும் காட்டுவார்கள் .
இது ஒரு அடிமை மனோநிலை . தங்களை பற்றி மிகவும் தாழ்வாக எண்ணி கொள்பவர்கள் தங்கள் இயலாமையை மறைக்க வாய்ப்பு கிடைத்துவிட்டால் கும்பல் தாக்குதலில் ஈடுபடுவார்கள்.
தெருச்சண்டைகளில் இது போன்ற காட்சிகளை காணலாம்.
அடிமை மனோநிலை உள்ளவர்கள் ஏதாவது ஒரு பலம் வாய்ந்த பக்கத்தில் நின்று கொண்டு பலமில்லாத பக்கத்தை மூர்க்க தனமாக தாக்குவார்கள்.
இவர்களின் இந்த soft target மீதான தாக்குதல் உண்மையில் இவர்களுக்கு பெரிதும் நன்மை பயப்பதில்லை.
இவர்கள் சார்ந்து நிற்கும் தரப்புக்கு இவர்களின் பலவீனம் வெளிச்சமாகிவிடும் . இவர்கள் சார்ந்து நிற்கும் தரப்பின் பிடி இவர்கள் மீது இன்னும் அதிகரிக்கும்,
இவர்களின் பலவீனத்தை இவர்களே வெளிச்சம் போட்டு காட்டி இருப்பார்கள்.
இது ஒரு மோசமான போக்கு , ஜனநாயக விழுமியங்கள் மேலோங்கி இருக்கும் நாடுகளில் இந்த போக்கு கொஞ்சம் குறைவு என்றுதான் கூறவேண்டும்.
அதிலும் இப்படி மென்மையான இலக்கை வைத்து தாக்கும் தமிழர்களுக்கு மிகவும் பிடித்த சொல் துரோகி என்பதாகும் . ஒருவரை மிகவும் மோசாமாக சித்தரிக்க இந்த சொல்தான் அதிகமாக பயன்படுத்த படுகிறது.
இது போன்ற கீழ்த்தரமான அடிமை மனோபாவம் சில தற்காலிக இலாபங்களை தரக்கூடும் .
ஆனால் நீண்ட கால பயன்பாட்டில் இவர்களின் நம்ப தன்மையை இல்லாமல் செய்துவிடும்.
இன்று அழகிரியை நோக்கி வீசப்படும் கேலியும் கிண்டலும் கலந்த பல விமர்சனங்கள் இந்த ரகம்தான் .


அழகிரியின் அரசியல் பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது. அவர் கடந்த சில வருடங்களாகவே அரசியலில் ஈடுபடவும் இல்லை .
நீட் தேர்வு , எட்டுவழிசாலை . ஸ்டெர்லைட் போன்ற எத்தனையோ விடயங்களில் அவர் தனது கருத்தை கூறவும் இல்லை .. அரசியல் செயல்பாட்டில் களம் இறங்கவும் .
எனவே அவரை பற்றி அரசியல் ரீதியாக கருத்து கூறுவதற்கு ஒன்றுமே இல்லை..
அவரின் முந்தைய அரசியலானது .,
கலைஞரின் மகன் என்ற அளவில் மட்டுமல்லாது திமுகவுக்காக அவர் உழைத்து கலைஞரிடமே நல்ல பெயரும் வாங்கி இருக்கிறார்.
திமுகவை உள்ளடி வேலை பார்த்து தோற்கடித்தும் இருக்கிறார்.
இன்று அரசியலில் அவர் out of touch என்று தான் எண்ணுகிறேன் .ஆனாலும் அவரை கேவலப்படுத்த வேண்டாமே?
திமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் அழகிரி மீது வீசும் சொல்லம்புகள் அவரை அளவுக்கு மீறி அவரை உசுப்பேற்றி விடக்கூடாது.
அதுவே அவரது மீள்வரவுக்கு காரணமாக அமைந்து விடும். திமுக ஆதரவானவர்கள் எல்லோரும் பெரிய ஹார்ட் கோர் ஆதரவாளர்கள் என்றெண்ணி விடக்கூடாது . அப்படிப்பட்டவர்களின் மனதில் அழகிரி மீதானா கேவலமான விமர்சனம் அவருக்கு ஒரு அனுதாபத்தை தந்துவிடும் என்பதை மறக்கவேண்டாம்..
ஜவஹர்லால் நேருவின் ஒற்றைவரி இங்கிலாந்தில் பேசாமல் இருந்த முகம்மதலி ஜின்னாவை மீண்டும் இந்தியாவுக்கு வர செய்தது. அதுவே பின்னாளில் அவர் பாகிஸ்தானை உருவாக்கும் அளவுக்கு சென்றது.. :
திருக்குறள் (128):ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
விளக்கம் : ஒருவன் பேசும் சொற்களில் மறைமுகமாகவுங்கூட ஏதாவது ஒரு சொல் தீமை பயக்கும் பொருட்பயனை உண்டாக்குமானால் அவன் இதுவரை செய்துவந்த பிற அறங்கள் யாவும் பயன்படாமல் போகும். காத்தவராயர்

கருத்துகள் இல்லை: