minnambalam.com - Mathi : “அடம் பிடிக்கலாம்.. இது ரொம்ப ஓவரா பிடிவாதமா இருக்கே”ன்னு சொல்றாங்க என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. ஏதோ தொகுதி பங்கீட்டு சிக்கலா?
ஆமாய்யா.. திமுக- காங்கிரஸ் விவகாரம்தான்.. டெல்லியில 10-ந் தேதியன்னைக்கு புதிய மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை ராகுல் காந்தி, கார்கே நடத்தியிருந்தாங்க இல்லையா? அன்னைக்கே திமுகவோட பேச்சுவார்த்தை நடத்துறதுக்கான ஐவர் குழுவும் ராகுல் காந்தி- கார்கேவுடன் ஆலோசனை நடத்துச்சு..
கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார்தான் அந்த ஐவர் குழு இல்லையா?
இந்த ஆலோசனைக்கு பிறகு டெல்லியில பிரஸ்ஸை பார்த்த செல்வப்பெருந்தகை, “பேச்சுவார்த்தை குழுவை திமுக அமைக்கலைங்கிறதுல்ல காங்கிரஸ் தலைமைக்கு வருத்தம்தான்.. சென்னைக்கு போய் முதல்வரை சந்திப்பேன்.. அப்ப எங்க தலைமை சொல்லியிருக்கிற விஷயங்களை முதல்வர்கிட்ட சொல்வேன்னு” பேட்டி கொடுத்தாரு..
ஆனா, அன்னைக்கு நைட்டே, பிப்ரவரி 22-ந் தேதி முதல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும்னு திமுக தலைமையும் அறிவிச்சிருச்சு..
இதுக்கு அடுத்துதான்., நேத்து இந்தியா டுடே மீட்டிங்குல பேசுன சிஎம் ஸ்டாலின், “கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது.. இது எங்களுக்கும் தெரியும்.. அவங்களுக்கும் (காங்கிரஸுக்கும்) தெரியும்”னு தெளிவுபடுத்தியிருந்தாரு..
அதாவது ஏற்கனவே கனிமொழி மூலமா ராகுல் காந்திகிட்ட, “கூட்டணி ஆட்சி சரியா வராதுன்னு”ன்னு சிஎம் சொல்லி இருந்தாரு.. ராகுல் காந்தியும் “கூட்டணி ஆட்சி டிமாண்டை வலியுறுத்தலை”ன்னு சொல்லி இருந்தாரு.. அதனால சிஎம் அப்படி பேசியிருந்தாரு…
சரிய்யா.. ஸ்மூத்தாதானே போகுது? யாரு பிடிவாதம் பிடிக்கிறது? என்ன பஞ்சாயத்தாம்?
பொறுய்யா.. பஞ்சாயத்துன்னு சொல்றதைவிட சிஎம்-க்கு வருத்தம் கலந்த கோபம் இருக்குதுன்னு சொல்லலாம்.
அதென்னய்யா ”வருத்தம் கலந்த கோபம்”.. என்னதான் நடந்துச்சாம்?
டெல்லியில ஐவர் குழு- ராகுல் காந்தி கிட்ட ஆலோசனை நடத்துச்சு இல்லையா.. அதுல பேசப்பட்ட, “39 சீட்+ 1 ராஜ்யசபா சீட் கண்டிப்பாக திமுக கொடுக்கனும்.. அதுவும் கேட்கிற தொகுதிகளை எல்லாம் கொடுக்கனும்”னுங்கிற டிமாண்ட் செல்வப்பெருந்தகை மூலமாக சிஎம்-கிட்ட சொல்லப்பட்டது..
அதுல இருந்துதான் சிஎம் வருத்தம் கலந்த கோபத்துல இருக்கிறாரு… இதுக்கு பிறகு உடன் இருந்தவங்ககிட்ட, “39 தொகுதிகளுக்கு குறைய முடியாது.. கேட்கிற தொகுதிகளை எல்லாம் கொடுக்கனும்னு உறுதியா கேட்குறாங்க.. எப்படி கொடுக்கிறதாம்? ஏன் காங்கிரஸ் இல்லாமலேயே நாம எலக்ஷனை சந்திச்சா என்னவாம்?”னு சீரியசான டிஸ்கஷனும் செஞ்சிருக்காரு சிஎம்.
இதை பத்தி திமுக சீனியர்ஸ்கிட்ட பேசுனப்ப, “ஹிஸ்டரி ரிப்பீட்டுன்னு சொல்லுவாங்களே சார்.. அதுமாதிரிதான் நடக்கிறது எல்லாமே இருக்குது. தலைவர் கலைஞர் கூடவே இருந்து கடந்த காலத்துல என்ன நடந்துச்சுன்னு பார்த்தவரு சிஎம்..
2011-ல் நடந்தது போலவே இப்பவும் நடக்குது சார்.. அன்னைக்கு காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளை கேட்டது.. இதே மாதிரி கேட்கிற தொகுதிகளையெல்லாம் கொடுங்கன்னு மிரட்டுச்சு.. 2ஜி கேஸை காரணமா வெச்சு அப்படி மிரட்டனது காங்கிரஸ்..
தலைவர் கலைஞர் கொஞ்சம் கூட அதுக்கு ஒத்துக்கவே இல்லை.. அப்ப தலைவர் கலைஞர் ரொம்ப கோபத்துல இருந்தாரு.. காங்கிரஸ் கூட்டணியே வேண்டாம்னுகூட தலைவர் நினைச்சாரு.. ஆனாலும் டெல்லி ஓவரா பிரஷ்ஷர் கொடுத்துச்சு… அப்பதான் தயாளு அம்மாளை விசாரணைக்கு கூப்பிட்ட சம்பவமும் கூட நடந்துச்சு..
வேறவழியே இல்லாம தலைவரும் அன்னைக்கு 63 சீட்டை கொடுக்க வேண்டியதாகிடுச்சு.. அதுவும் அந்த எலக்ஷன்ல கரூர் தொகுதிக்கு ரொம்பவே காங்கிரஸ் சண்டை போட்டுச்சு..
கரூர் சீட்டை கேசி பழனிசாமிக்கு கொடுக்கனும்னு தலைவர் முடிவு செஞ்சிருந்தாரு.. ஆனா இப்ப எம்.பி.யா இருக்காங்களே ஜோதிமணிக்காக அன்னைக்கு அடம்பிடிச்சு கரூர் தொகுதியை காங்கிரஸ் வாங்குச்சு..
ஆனா அந்த எலக்ஷன்ல என்ன நடந்துச்சு? காங்கிரஸ் வெறும் 8 சீட்தான் ஜெயிச்சுது.. அன்னைக்கு காங்கிரஸ் கட்சிக்கு பலமே இல்லைன்னு தெரிஞ்சும் அவங்க 63 சீட் கேட்டு அடம்பிடிச்சு வாங்கினாங்க..
அப்புறமா 2016-ல் 41 சீட் வாங்குனாங்க.. அந்த 2016 எலக்ஷனில்லயும் 5 சீட்தான் காங்கிரஸ் ஜெயிச்சது..
அதனால போன 2021 தேர்தல்ல காங்கிரஸுக்கு 25 தொகுதிகளை மட்டும் கொடுத்தோம்.. அவங்களும் 18 சீட் ஜெயிச்சாங்க.. நல்ல ரிசல்ட்தானே..
இப்பவும் நாம என்ன சொல்றோம்னா.. நம்பர்ஸ் எத்தனைன்னு பார்க்காதீங்க.. வின்னிங் நம்பர்ஸ் எத்தனை வரும்னு பாருங்க.. கேட்கிறதை விட குறைச்சலா இருந்தாலும் ஜெயிக்கிற தொகுதியாக வாங்கலாமேன்னு சொல்றோம்..
ஆனா, அன்னைக்கு எப்படி 2ஜியை காரணமா வெச்சு தலைவர் கலைஞரை கார்னர் பண்ணி 63 சீட் வாங்குச்சே அதே மாதிரி இன்னைக்கு விஜய்யை காரணமா வெச்சு தளபதிகிட்ட 39 சீட் வாங்கிடலாம்னு நினைக்குது காங்கிரஸ்.. அதனாலதான் சிஎம் வருத்தமும் படுறாரு.. கோபமும்படுறாரு.. தலைவர் மாதிரியே தளபதியும் ”காங்கிரஸ் இல்லாமலே நின்னா என்னான்னு?, தன் கூட இருப்பவங்ககிட்ட டிஸ்கஷன் செஞ்சாரு” என்றனர்.
இருந்தாலும் “சார்.. சீட் ஷேர்ங்னாலே இப்படித்தான் இருக்கும்.. எல்லாம் உட்கார்ந்து பேசும் போது சரியாகிடும்.. பேச்சுவார்த்தைன்னா அவங்க கொஞ்சம் ஏறுவாங்க.. நாங்க கொஞ்சம் கூட்டுவோம்.. அப்புறமா பிரஸ்கிட்ட வந்து “சுமூகமான” பேச்சுவார்த்தைன்னு ‘முடிவை’ அறிவிச்சுட்டு எலக்ஷன் வேலைக்கு போயிடுவோம்.. அது மாதிரிதான் இப்பவும் நடக்கும் சார்.. எல்லாமே சீக்கிரமா நல்லபடியா முடிஞ்சுடும்”னும் நம்மிடம் பேசிய திமுக சீனியர்ஸ் சொல்வதாக டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக