Vasu Sumathi : படித்த முட்டாள்களா? இல்லை திட்டமிட்ட கொள்ளையா? 2500 கோடி ரூபாய் 'Alliance Orchid springs' ஊழல் - ஒரு பகீர் சம்பவம்
சென்னை கொரட்டூரில் 2500 கோடி ரூபாய் முதலீட்டில் 2036 வீடுகள்.. இன்று அதன் மதிப்பு இன்று வெறும் 'பூஜ்ஜியம்'!
மெத்தப் படித்தவர்கள் கூட எப்படி இவ்வளவு பெரிய மோசடியில் சிக்கினார்கள் என்பதுதான் புரியவில்லை. 2018-லிருந்து வழக்கு நடப்பதே தெரியாமல் வீடுகளை வாங்கியது எவ்வளவு பெரிய அபத்தம்?
இந்த அவலத்திற்குப் பின்னால் 2011-2016 அதிமுக ஆட்சியின் நிழல் ஆழமாகப் படிந்துள்ளது.
இந்த ஊழலின் வேர்கள் நாம் நினைப்பதை விட மிக ஆழமானவை. தீர்ப்பு நகல்களின் படி, 2005-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியிலேயே இந்த நில விவகாரம் வித்திடப்பட்டுள்ளது. அப்போதுதான் 'அலையன்ஸ்' நிறுவனம் தனது "ஆர்க்கிட் ஸ்பிரிங்ஸ்" திட்டத்திற்காக முதற்கட்டமாக 95 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளது.
அதன்பின் வந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில், இந்தத் திட்டத்திற்கான வரைபட அனுமதிகள், நில வகைப்பாடு மாற்றங்கள் மற்றும் இதர ஆரம்பக்கட்டப் பணிகள் மட்டுமே நடந்துள்ளன.
மீண்டும் 2011-2016 அதிமுக ஆட்சியில், 2014-ஆம் ஆண்டு விதிகளை மீறி கோவில் நிலத்தைப் பத்திரப் பதிவு செய்வது வரை இந்த முறைகேடு உச்சத்தை எட்டியது. கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் மற்றும் ஆதிமோட்டையம்மன் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலத்தை, 2014-இல் விதிகளுக்குப் புறம்பாகத் தனியாருக்குத் தாரை வார்த்தது அப்போதைய அதிமுக அரசு.
இதற்காகவே HR&CE அமைச்சர்கள் மாற்றப்பட்ட வழக்கமான அதிமுக கூத்துகளும் அரங்கேறின. 2014-இல் இந்த நிலம் கைமாறிய போது அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் பின்னாளில் இலாகா இல்லாத அமைச்சராக மாற்றப்பட்டது வரை எல்லாமே 'பக்கா ஜெயா பிளானிங்'.
இதில் வேடிக்கை என்னவென்றால், கோடிக்கணக்கில் கடன் கொடுத்த வங்கிகளின் லீகல் டீம் இந்த பிராடு வேலைக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள். கோவில் நிலம் என்று தெரிந்தும், வில்லங்கத்தை மறைத்துப் பத்திரம் பதிவு செய்த பதிவுத்துறையும், பில்டரும், வங்கியும் இங்கே சமமான குற்றவாளிகளே!
இன்று நீதிமன்றத் தீர்ப்பால் அந்த வீடுகளின் சட்டப்பூர்வ மதிப்பு பூஜ்ஜியமாகிவிட்டது. ஆனால், வீட்டை இழந்த இந்த படித்த முட்டாள்களின் கவலையோ ஜிம் வேலை செய்யவில்லை, ஏசி ஓடவில்லை என்று ஒப்பாரி வைக்கும் இவர்களை நினைத்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
தற்போது டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவன நிர்வாகிகள் மீது மோசடி வழக்குகள் பாயத் தொடங்கியுள்ளன.
கோவில் நிலத்தை ஆட்டையப்போட்ட பில்டர்கள் ஒருபுறம், அதற்குத் துணை நின்ற அரசியல் சக்திகள் மறுபுறம்.. நடுவில் சிக்கித் தவிப்பது நடுத்தர வர்க்கத்தின் வாழ்நாள் சேமிப்பு!
இனிமேலாவது 'Clear Title' பார்க்காமல் வீடுகளை வாங்கி ஏமாறாதீர்கள்..
அதே போல் 'Clear Intention' பார்க்காமல் ஒரு ஆட்சியை பதவியில் அமர வைத்தால் என்னவாகும் என்று தெரிந்து வாக்காளியுங்கள்
1 கருத்து:
வாங்க எல்லோரும் தாசி குடும்பத்தை சேர்ந்த சுடலை குட்டிகளை பதவியில் வைத்து அழகு பாப்போம்
கருத்துரையிடுக