புதன், 29 ஆகஸ்ட், 2018

என் டி ராமராவ் மகன் ஹரிகிருஷ்ணா வாகன விபத்தில் உயிரழப்பு

இறந்ததாக அறிவிப்பு tamiloneindia : ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமாராவ் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா ஹைதராபாத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
என்டி ராமாராவின் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவராக இருந்தார். இவர் தனது ரசிகரின் திருமணத்துக்காக நெல்லூர் மாவட்டம் காவாலிக்கு காரில் நேற்று சென்று கொண்டிருந்தார்.
அப்போது நல்கொண்டா மாவட்டத்தில் நார்கெட்பள்ளி- அட்டங்கி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியனில் அவரது கார் மோதி விபத்துக்குள்ளானது.


இறந்ததாக அறிவிப்பு

இதையடுத்து அவர் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டார். தலையில் ரத்த காயத்துடன் மயக்கமான நிலையில் சாலையில் கிடந்தார். ரத்தம் சொட்ட சொட்ட அவரை காமினேனி மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து இன்று காலை 7.30 மணிக்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு முன்

4 ஆண்டுகளுக்கு முன்

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஹரிகிருஷ்ணாவின் மகன் ஜானகிராமும் இதேபோலத்தான் ஒரு சாலை விபத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பலியானார்.

கருத்துகள் இல்லை: