ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

தமிழகத்தில் ( 1500 ) எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு?

தமிழகத்தில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு?மின்னம்பலம் :அடுத்த ஆண்டு முதல், தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் 1,550 இடங்கள் புதிதாகச் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் சார்பில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவும், கூடுதல் இடங்களுக்கு அனுமதி கோரியும் அகில இந்திய மருத்துவக் கவுன்சிலில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
கரூரில் புதிதாகத் தொடங்கவுள்ள மருத்துவக் கல்லூரியில் 150 இடங்கள் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளன. மதுரையைச் சேர்ந்த சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கும், கோவையைச் சேர்ந்த கோவை மெடிக்கல் சென்டருக்கும் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இரு சுயநிதிக் கல்லூரிகளிலும், தலா 150 இடங்கள் அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. இதேபோன்று பனிமலர் மருத்துவக் கல்லூரிக்கும், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கும் தலா 150 இடங்களை அதிகரிக்குமாறு, மருத்துவக் கல்வி இயக்குனரகம் பரிந்துரைத்துள்ளது. இது தவிர, 3 மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களை அதிகப்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கு அடுத்த ஆண்டு முதல் 1,550 இடங்கள் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, தமிழகத்தில் இருக்கும் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 447 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

கருத்துகள் இல்லை: