வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

முல்லைவேந்தன், கருப்பசாமி பாண்டியன் மீண்டும் திமுகவில் இணைந்தனர்

முல்லைவேந்தன், கருப்பசாமி பாண்டியன் மீண்டும் திமுகவில் இணைந்தனர்dailythanthi.com : தி.மு.கவின் தர்மபுரி மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமாக இருந்தவர் முல்லை வேந்தன். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியின் வெற்றிக்குத் துணை நிற்காமல் துரோகம் செய்துவிட்டதாகவும், தி.மு.க வெற்றிக்குச் சரியாகப் பணி செய்யவில்லை போன்ற காரணங்களால்  முல்லை வேந்தன், பழனிமாணிக்கம், இன்பசேகர் ஆகியோரை தி.மு.க பொதுச்செயலாளர் கே.அன்பழகன் இவரைக் கட்சியிலிருந்து நீக்கினார். மன்னிப்புக் கடிதம் அளித்தால் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படும் என தி.மு.க தலைமை முன்னதாகக் கூறியிருந்தது. இதையடுத்து பழனிமாணிக்கமும் இன்பசேகரனும் விளக்கம் கொடுத்து விட்ட நிலையில் அவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை அதே ஆண்டில் ஜூலை 19-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. எனினும் முல்லைவேந்தன் எவ்வித விளக்கமும் கொடுக்காததால் அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார். பின்னர், 2016-ம் ஆண்டு தே.மு.தி.க.வில் இணைந்து சில பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். அதன் பின் தே.மு.தி.க.விலும் அதிக அளவில் ஆர்வம் காட்டாமல் சற்று விலகியே இருந்தார்.


மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்தபோது இரண்டு முறை வந்து முல்லை வேந்தன் சந்தித்து பார்த்துள்ளார். மேலும் கருணாநிதி மறைவுக்கு கோபாலபுரம் இல்லத்துக்கும் ராஜாஜி ஹாலுக்கும் முல்லை வேந்தன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்தநிலையில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு  மு.க.ஸ்டாலின் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.  அப்போது முல்லை வேந்தனையும் கட்சியில் சேர்க்க வேண்டும் எனப் பல தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. 

இந்தநிலையில், தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் முல்லைவேந்தன் இணைந்தார். அதுபோல்  முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியனும்  திமு.கவில் இணைந்தார். இருவரும் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

பின்னர் இவ்விருவரும் பொருளாளர் துரைமுருகனுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை: