சனி, 14 பிப்ரவரி, 2026

தமிழக அரசு தர சான்றிதழும் - இந்திய ஒன்றிய தர சான்றிதழும்

ராதா மனோகர்  :  இந்திய அரசு  தர சான்றிதழும்  - தமிழக அரசு தர சான்றிதழும் 
வட இந்திய சங்கிகளின் கலப்பட கலாச்சாரத்தால் இந்திய மளிகை  பொருட்களை வாங்குவதற்கு மக்கள் பயப்படுகிறார்கள் 
அந்த அளவுக்கு எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்.
உடலுக்கு மிக மோசமான விளைவுகளை உண்டாக்க கூடிய பல வேதிப்பொருட்களை கொஞ்சம் கூட குற்ற உணர்வோ சட்டத்தை பற்றிய பயமோ இன்றி கலக்கிறார்கள்.
என்னென்னெ பொருட்களில் எதை எதையெல்லாம் கலக்கிறார்கள் என்பதை விபரமாக எழுதினால் மக்கள் மேலும் பயந்து விடுவார்கள். 
இந்திய மக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இந்திய மளிகை பொருட்களை வாங்குவதை தவிர்க்கிறார்கள் 
இதில் உண்மையிலேய  மிக மோசமாக பாதிக்க படுபவர்கள் நேர்மையான முறையில் மளிகை பொருட்களை உற்பத்தி செய்யும்  உற்பத்தியாளர்கள்தான்.
இவர்கள் பெரும்பாலும் தமிழக உற்பத்தியாளர்கள்தான்.  

மேலும்  தமிழ்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு மிக பெரிய சந்தை உலகம் முழுவதும் உயிர்துடிப்போடு இருக்கிறது 
இந்த தமிழக உற்பத்தி பொருட்களுக்குதான் ஆபத்து மெதுவாக நிச்சயமாக  வந்து கொண்டிருக்கிறது.
தமிழக பொருட்களிலும் கூட கலப்படம் இருக்க வாய்ப்புள்ளது 

ஆனால் தற்போது வடஇந்திய மளிகை உற்பத்தியாளர்களால் ஏற்படும் பாதிப்பு பாரதூரமானது.
இதை திருத்தி அமைக்க பல ஆண்டுகள் தேவைப்படும் 
வருமுன் காப்பதற்கு தமிழக அரசு முன்வரவேண்டும்.
தமிழ்நாட்டுக்கு என்று ஒரு பதிவு செய்யப்பட தர சான்றிதழ் சின்னம் ஒவ்வொரு தமிழ்நாட்டு உற்பத்தி பொருட்கள் மீதும் பொறிக்க படவேண்டும் 
இதை உரிய முறையில் கண்காணிக்க வேண்டும் 
இந்த தமிழக தர சான்றிதழ் அடையாளத்தை உலகம் முழுவதும்  கொண்டு செல்லவேண்டும் 
விளம்பரம் செய்ய வேண்டும்!  


(மாதிரி சின்னம்) 

கருத்துகள் இல்லை: