amil.thehindu.com :
பொன்னேரி அருகே போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற அரசு கல்லூரி
மாணவர் மர்ம மரணம் அடைந்த சம்பவத்தில், ரயில்வே பாதுகாப்பு படை போலீ ஸார்
மீது குற்றச்சாட்டுகள் எழுந் துள்ள நிலையில், அந்த மாணவர் தப்பியோடிய
காட்சி அடங்கிய கண்காணிப்பு கேமரா பதிவை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
பொன்னேரி அடுத்த சின்னகாவ னத்தைச் சேர்ந்த மவுலீஸ்வரன்(20), பொன்னேரி உலகநாத நாராயண சாமி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 24-ம் தேதி இரவு பெரிய காவனம் ரயில்வே கேட் அருகே நின்று
கொண்டிருந்த மவுலீஸ் வரனை, கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படை போலீ
ஸார், ரயில் சிக்னலுக்கு பயன் படுத்தப்படும் கேபிள் திருட்டு தொடர்பாக
விசாரிக்க அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந் நிலையில், கடந்த 25-ம்
தேதி மவுலீஸ்வரன் கும்மிடிப் பூண்டி பகுதியில் ரயில்வே தண்ட வாளத்தில்
மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மவுலீஸ்வரன், ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திலிருந்து, கடந்த 25-ம் தேதி காலை, கழிப்பறைக்கு செல்வதாக கூறி தப்பியோடி, ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டதாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார்தான் மவுலீஸ்வரனை அடித்துக் கொன்றதாகக் கூறி, மவுலீஸ்வரனின் உறவினர்கள், சின்னகாவனம் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆகவே, மவுலீஸ்வரன் உயிரி ழப்பு தொடர்பாக கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் அங்கத்குமார், கான்ஸ்டபிள் வினய்குமார் ஆகிய இருவர் பணியிடை நீக் கம் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத் திலிருந்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, தொடர் விசாரணை நடந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல், மவுலீஸ் வரனின் மர்ம மரணம் தொடர் பாக விசாரணை நடத்தி வரும் பொன்னேரி ஜே.எம்.1 நீதிபதி சதீஷ்குமார், நேற்று முன்தினம் பொன்னேரி அரசு மருத்துவ மனையிலும், நேற்று கும்மிடிப் பூண்டி ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்திலும் விசாரணை மேற்கொண்டார்.
இச்சூழலில், ரயில்வே பாது காப்பு படை காவல் நிலையத் திலிருந்து தப்பிய மவுலீஸ்வரன் உள்ளாடையுடன் அப்பகுதியில் உள்ள தெருவில் ஓடிச்செல்லும் வீடியோ காட்சி, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே கடை மற்றும் வீட்டில் உள்ள கண் காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. அதை , ரயில்வே பாது காப்புப் படையினர் சேகரித்து வெளி யிடப்பட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் உலா வந்து, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தப்பியோடிய மவுலீஸ்வரன், ஒரு வீட்டில், துண்டு ஒன்றை வாங்கி கட்டிக் கொண்டு சென்றுள்ளார். அதன் பிறகு, ரயில் தண்டவாளப் பகுதியில் பணியில் இருந்த ரயில்வே ஊழியர் ஒருவரிடம் செல்போனை வாங்கி, தன் குடும்பத்தாரிடம் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ளார் என ரயில்வே பாதுகாப்பு படை தரப்பில் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக