சனி, 6 மே, 2017

கொடநாடு கொலை கொள்ளை ... எல்லாம் ஊத்தி முடியாச்சு ... மத்திய மாநில பங்கு பிரிக்கிற சண்டை மட்டும்தான் நடக்கிறது

ஜெயலலிதாவின் கொடநாடு
எஸ்டேட் கொலை-கொள்ளை வழக்கில் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் சந்தோஷ், சிபு, சதீசன். இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் கோவை மதுக்கரையைச் சேர்ந்த சயான் ஆகியோருக்கு போலீஸ் வலைவிரித்தபோது, விபத்தின் மூலம் சாவைத் தேடிக்கொண்டார் கனகராஜ். கேரளாவில் நடந்த விபத்தில் மனைவி, குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு, இப்போது கோவை தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சயான்.<போலீசின் காமெடி!>மூவர் சிக்கி, ஒருவர் செத்து, ஒருவர் சிகிச்சையில் இருக்கும் நிலையில் போலீஸ் தரப்பிலிருந்தே ஒரு போட்டோவை பரவவிட்டார்கள். ""கொடநாடு பங்களாவுக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஜெயலலிதாவின் கைக்கடிகாரங்களையும் அழகு சாதனப் பொருட்களையும்தான் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கடிகாரம் தங்கள் வசம் இருந்தால் மாட்டிக் கொள்வோம் எனக்கருதி, கேரளா போகும் வழியில் ஓர் ஆற்றில் வீசிவிட்டுச் சென்றனர்''-’ பத்திரிகையாளர்களிடம் இப்படிச் சொன்னார் நீலகிரி எஸ்.பி.முரளி ரம்பா. ""கேரளாவில் விபத்துக்குள்ளான சயானின் காரில் இந்த வாட்சுகளும் பளிங்குக் கல்லால் ஆன காண்டாமிருகச்சிலையும் இருந்ததாக கேரள போலீஸ் சொல்கிறார்களே?'' என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “""அப்படியா... அதை கேரள போலீஸ்கிட்டதான் கேக்கணும்'' என மழுப்பிவிட்டு எஸ்கேப்பானார் எஸ்.பி. ஆற்றில் வீசப்பட்ட வாட்சுகள், சயானின் காரில் சிக்கியது எப்படி,  கேரள போலீசின் கைகளுக்குப் போனது எப்படி? என்பதற்கு விடைதான் கிடைக்கவில்லை ஜெயலலிதா கைக்கடிகாரமாம்

(>போலீஸ் ஒத்துக்கொண்ட ஜெயலலிதா கைக்கடிகாரத்தில் அவரது உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி வாட்சுகள் சென்னை வடபழனி கோவில் வாசலிலும் அ.தி.மு.க. தலைமைக் கழக வாசலிலும் தாராளமாகக் கிடைக்கக்கூடியவை. இவ்வளவு சீப்பான வாட்சையா நமக்கு சீஃப் மினிஸ்டராக இருந்தவர் கட்டியிருப்பார்? 1996-ல் ஜெயலலிதா வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்திய போது கைப்பற்றப்பட்ட பல நூறு ஜோடி செருப்புகள், சூட்கேஸ்கள், தங்க, வெள்ளி நகைகள் இவற்றுடன் விலை உயர்ந்த கைக்கடிகாரங்களும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன>அப்படி ஒப்படைக்கப்பட்ட வாட்சுகள் ஒவ்வொன்றின் மதிப்பும் குறைந்தது 2 லட்ச ரூபாயிலிருந்து அதிகபட்சம் 15 லட்ச ரூபாய் வரை இருந்தது. அந்த ஜெயலலிதாவின் கடிகாரங்கள்தான் இவை என கதைகட்டுகிறது போலீஸ்.>யார் இந்த மனோஜ் சாமியார்?

;வாகன திருட்டு வழக்கு ஒன்றில் பிஜித் ஜாய், ஜம்ஷீர் ஆகிய இருவரைக் கேரள போலீஸ் கைது செய்த பின்தான், மேற்படி இருவரும் கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தமிழக போலீசுக்குத் தெரியவருகிறது. கேரள நீதிமன்றத்தின் அனுமதியுடன் தமிழகத்திற்கு இவர்கள் இருவரையும் கொண்டுவந்துள்ளனர். அதன்பின் இவன்தான் முக்கியக் குற்றவாளி என மனோஜ் சாமியார் என்பவனைத் தூக்கியது போலீஸ். பேரில்தான் சாமியார், மற்றபடி வாளையாரைச் சேர்ந்த லாரி டிரைவரான இந்த மனோஜ் மீது 5 கார் திருட்டு வழக்குகளும், ஒரு கொலை வழக்கும் உள்ளதாம்.கொலைக் கும்பலுக்கு கார்கள் ஏற்பாடு செய்து கொடுத்தவன் இந்த மனோஜ் என போலீஸ் சொன்னாலும், கொலையில் நேரடித் தொடர்பு உள்ளவன், அதிலும் ஓம்பகதூரைக் கொன்று மரத்தில் தொங்கவிட்டவன் இந்த மனோஜ் சாமியார்தானாம்.

;சஜீவனின் மறுபக்கம்t;">பல கோணங்களில் பலரிடம் விசாரித்தாலும் போலீஸ் இன்னும் நெருங்காமல் இருப்பது சஜீவன் என்பவனைத்தான். மரக்கடை ஓனர், மர ஆலை அதிபர் என பலவாறு முகம் காட்டும் சஜீவன், சசிகலா வகையறாக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றவன். இந்த செல்வாக்கால் தனக்கு வேண்டப்பட்ட ஐ.ஏ.எஸ். ஒருவரை கோவை கலெக்டராக்கியுள்ளான். இப்போது வேறு ஒரு மாவட்டத்தில் கலெக்டராக உள்ளார் அவர். அதே போல் இப்போதைய நீலகிரி கலெக்டர் சங்கரும் சஜீவனும் அவ்வளவு நெருக்கம். கலெக்டர் அலுவலகத்துக்கு சஜீவன் வந்தால், ஒருமணி நேரம் இருவரும் உரையாடிக் கொண்டிருப்பார்களாம். சஜீவன் கிளம்பும் போது வாசல் வரை வந்து, வழியனுப்புவாராம் சங்கர். இதெல்லாமே கொங்கு மண்டலத்தில் செல்வாக்காக உள்ள சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ராவணன் கொடுத்த தைரியம் என்கிறார்கள் ஊட்டி அ.தி.மு.க.வினர். கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான காம்ப்ளெக்ஸில் ‘நீலகிரி ஃபர்னிச்சர் வேல்டு’ என்ற ஷோரூமையும் நடத்தி வருகிறான் சஜீவன்.   துபாயில் பதுங்கியிருக்கும் சஜீவனைத் தூக்கி வந்து விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள் எஸ்டேட் நிலவரம் அறிந்தவர்கள்.&>மேனேஜரிடம் மேம்போக்காக…

"எஸ்டேட் மேனேஜர் நடராஜனுக்குத் தெரியாமல் இந்த கொடநாடு பங்களாவுக்குள் ஒரு இம்மியும் நகராது, அம்மியும் அசையாது. ஆனால் நடராஜனிடம் போலீஸ் நடத்தும் விசாரணை மேம்போக்காகத்தான் இருக்கிறது'' என்கிறார்கள் நமது போலீஸ் சோர்ஸ்கள். மேலும் அவர்கள் நம்மிடம் பேசிய போது,  "இங்கே எதுவும் உங்களுக்குத் தெரியாமல் நடக்காது என எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகிறார்களே' என போலீஸ் கேட்டதற்கு, "நான் கொஞ்சம் கெடுபிடியான ஆளு. தொழிலாளர்களிடம் எப்போதுமே சிடுசிடுன்னுதான் பேசுவேன். அத மனசுல வச்சுக்கிட்டு சமயம் பார்த்து கோர்த்துவிடுகிறார்கள்' எனச் சொல்லியுள்ளார் நடராஜன்.;">கொடநாடு மலையைச் சுற்றி 100 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருப்பதையும் சஜீவனுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தையும் ஒத்துக் கொண்ட நடராஜன், வேலை விஷயமாக சஜீவன் துபாய் சென்றிருப்பதாகச் சொல்லியும் அழுத்தம் கொடுத்து விசாரிக்கவில்லை எங்கள் ஆட்கள்.  இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஏதோ ரகசிய பேச்சுவார்த்தை எங்க உயர் அதிகாரிகள் மூலமா,  பலமா நடந்துக்கிட்டிருக்கு'' என்கிறார்கள்

நகை விற்பனை மர்மம் ">கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சென்னை, கோவை, சேலம் ஏரியாக்களில் இருக்கும் நகைக் கடைகள், அடகு பிடிக்கும் மார்வாடிகள், தனியார் அடகு நிறுவனங்கள் பலவற்றில்  பணக்காரர்கள் பயன்படுத்தும் ஆடம்பர தங்க நகைகளை ஒரு கும்பல் விற்றுள்ளது. அதைத் தங்களுக்கு நெருக்கமான வாடிக்கையாளர்களுக்கு விற்றுள்ளனவாம் மேற்படி கடைகள். அதே போல் சேலம், ஆத்தூரில் உள்ள நகைக் கடைகள், அடகுக் கடைகள் சிலவற்றில் கடந்த மார்ச் மாதம் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளது வருமானவரித்துறை.ஃபைல் குளோஸ்

கோவை சரக டி.ஐ.ஜி. அலுவலக உயர் அதிகாரி ஒருவரிடமிருந்து நமக்கு அவசர அழைப்பு வந்ததன் பேரில், ரகசிய இடம் ஒன்றில் அவரைச் சந்தித்தோம். ""மே-01-ஆம் தேதி சாயங்காலம் 6 மணிக்கு பிரஸ்ஸை மீட் பண்றதாச் சொன்ன நீலகிரி எஸ்.பி.முரளி ரம்பா, நைட் 9 மணிக்கு ஏன் வந்தார் தெரியுமா? பிரஸ் பீப்பிளிடம் அவர் என்ன பேசணும்கிற பிரிண்ட் அவுட், டி.ஜி.பி. ஆபீசிலிருந்து வர்றதுக்கு லேட்டானதுதான் காரணம்.
இரண்டாவது, இந்தக் கேஸின் முக்கிய அக்யூஸ்டான கனகராஜ் செத்துட்டான்,  சுயநினைவு இல்லாமல் இருக்கும் சயானின் நிலைமை எப்படி வேண்டுமானாலும் ஆகலாம். சிக்கிய ஒன்பது பேருமே கூலிப்படையாகச் செயல்பட்டவர்கள். அதனால் மற்ற யாருக்கும் இதில் தொடர்பு இல்லைன்னு கேஸ் ஃபைலைக் குளோஸ் பண்ணச் சொல்லி, மேலிடத்திலிருந்து மலையேறி வந்திருக்கிறது உத்தரவு. அவ்வளவுதான் பிரதர்'' என்ற பகீர் உண்மையைச் சொன்னார் அந்த அதிகாரி. வாட்ச்மேன் என்பதால் அவர் "வாட்ச்'களை மட்டும் பாதுகாத்தார். அந்த வாட்ச்களை மட்டும் கொள்ளையடிக்க வந்தவர்கள் வாட்ச்மேனை கொன்று விட்டார்கள். வாட்ச்கள் மீட்கப்பட்டதால் கேஸ் முடிந்துவிட்டது என்று கூட போலீஸ் சொல்லலாம்.என்னமோ போங்க, என்னென்னமோ நடக்குது கொடநாட்டுல.p;-அ.அருள்குமார்  நக்கீரன்

கருத்துகள் இல்லை: