சனி, 6 மே, 2017

குஜராத் பில்கிஸ்பானுவின் வழக்கு திசைதிருப்பவே நிர்பயா வழக்கில் தூக்கு தீர்ப்பு!


kathir.vincentraj/ நீதியும் அரசியலும்: இரண்டு சம்பவங்கள். இரண்டு நீதிகள். இரண்டு சூழ்ச்சிகள். கடந்த 4.5.2017 அன்று மும்பை உயர் நீதிமன்றம் பல்கிஸ்பினு வழக்கில் குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது. அதுமட்டுமின்றி 2 மருத்துவர்கள், 5 போலீசாருக்கும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் - கோத்ரா கலவரத்தின் போது பில்கிஸ்பானு 11 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டார். அவரது மகள் உட்பட பலரையும் அக்கும்பல் படுகொலை செய்த்து. அவரது உறவினர் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு தான் தற்போது தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த செய்தி பல தமிழ் பத்திரிக்கைளில் பதிவு செய்யப்பட்டவில்லை. அப்படியே ஒரு சில பத்திரிகையில் 8 வரி செய்தியாக ஒரு மூலையில் பதிவு செய்யப்பட்டது.
இரண்டாவது கடந்த 2012 டிசம்பரில் ஓடுகிற பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு 5.5.2017 அன்று உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.
இந்த செய்தி பல தமிழ் பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் பெரிய அளவில் பதிவு செய்யப்பட்டது.
பில்கிஸ்பானு வழக்கின் குற்றவாளிகள் தற்போதைய ஆளும் மத்திய அரசின் கட்சியை சேர்ந்தவர்கள். அதனால் நீதிமன்றம் தண்டனை கொடுக்கப்பட்ட செய்தி வெளியே வரவில்லை. ஆனால் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் சாதாரண ஏழைகள். இந்த வழக்கின் செய்தி பரவலாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
குற்றவாளி ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு எனக்கு இல்லை. ஆனால் கொடூரமான குற்றமான பில்கஸ்பானு வழக்கின் தீர்ப்பை இருட்டடிப்பு செய்த்தன் நோக்கம் என்ன?
இதுதான் ஊடக அறமா?
முதல் நாள் பில்கிஸ்பானு வழக்கில் தீர்ப்பு கொடுக்கபடுகிறது. மறுநாள் நிர்பயா வழக்கில் தீர்ப்பு கொடுக்கபடுகிறது. பில்கிஸ்பானுவின் சம்பவம் கவனத்தை ஈர்க்கக் கூடாது என்பதற்காக உடனடியாக நிர்பயா வழக்கில் தீர்ப்பு கொடுக்கப்படுகிறது. இதனை தந்திரமாக தேசிய அளவில் விவாதமாக மாற்றியும் இருக்கின்றனர்.
பில்கிஸ்பானுவின் உறவினர்களின் ஆன்மா மட்டுமல்ல நிர்பயாவின் ஆன்மா கூட உங்களை மன்னிக்காது.
பிணத்தில் கூட மதத்தையும் சாதியையும் பார்க்கும் உங்களது கேவலமான அரசியலை கண்டு அருவருப்படைகிறேன் வெட்கப்படுகிறன்

கருத்துகள் இல்லை: