புதன், 3 மே, 2017

சின்னத்திரை நடிகர் பிரதீப் மரணம் .. சன்டீவியில் சுமங்கலி தொடரின் கதாநாயகன்

சின்னத்திரை கலைஞர்களின் தற்கொலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. காதல், உறவுச் சிக்கல், பணப் பிரச்சனை என பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். சாய் பிரசாந்த், ஷாலினி, சபர்ணா மற்றும் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட ‘மைனா நந்தினியின்’ கணவர் கார்த்திகேயன் என இந்த பட்டியல் நீள்கிறது. ஒரு காலகட்டத்தில் திரைப்பட நடிகர்கள் வரிசையாக தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் இங்கே உண்டு. ஆனால் தற்போது சின்னத்திரை கலைஞர்களை இந்த துயரம் தொடர்கிறது. சன் டிவி-யின் ‘சுமங்கலி’ என்னும் புதிய தொடரில் நாயகனாக நடித்துக்கொண்டிருந்தவர் பிரதீப். ஆந்திராவை பூர்வீகமாகக்கொண்ட பிரதீப் குமார், தெலுங்கு சீரியல்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர். இவர், தன்னுடன் ‘பாசமலர்’ தொடரில் இணைந்து நடித்த நடிகை பாவனியை சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டார்.
இவர், இன்று அதிகாலை 4 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தின் புப்பலகுடா பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் அதுபற்றிய விபரங்களை அறிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப்பின் பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பரகள் என அனைவரிடமும் விசாரித்து வருகின்றன மாலைமலர்


கருத்துகள் இல்லை: