சனி, 6 மே, 2017

தமிழ்நாடு ஜாதிய அமைப்பால் நாசமாகி அழிய போவது உறுதி? அதுதான் பாஜகவின்... ?

Meena Somu  : அமித் ஷா தமிழகத்திற்கு வந்த போதே தேவேந்திர குலம், தேவர் ஆகிய ஜாதிகள் பிஜேபியின் பார்ப்பனிய அரசியலுக்குள் சென்றுவிட்டார்கள். ஏற்கனவே கவுண்டர், நாயக்கர், நாயுடு என கொங்கு பகுதியை ஜாதிவெறியை தூண்டி இணைத்தாகி விட்டது. நாடாரும், யாதவாக்களும் பிஜேபியின் அரவணைப்புக்குள் சென்றுவிட்டார்கள். இது தான் ஜாதியத்தை தூண்டி செய்யும் அரசியல். இதனால் அந்த ஜாதி மக்களின் வாழ்வாதாரம் முன்னேற போகிறதா என்ன ? இப்ப பிஜேபி பேசும் தேசிய வாதத்தாலோ ராமர் கோயிலாலோ பசு பாதுகாப்பினாலோ நம் வாழ்வாதாரம் முன்னேற்றம் கிடைக்குமா என்ன ?
பிஜேபியின் மதவாதம் வேறு, ஜாதியம் வேறல்ல. தமிழகம் இனியும் இதற்கான எதிர் நிலைப்பாடு எடுக்கவில்லை எனில் நாசமாக போவது உறுதி.
ஜாதி தான் தமிழகத்தின் அரசியலாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஜாதி எதிர்ப்பு நிலையான தலித்திய அரசியலை அடையாள அரசியல் என அபாண்டமாக பேசும் வாய்களுக்கு இந்த ஜாதி அரசியல் என்னவென்று புரியப்போவதில்லை.
யார் எதிரி என்ற அரசியல் அறிவற்றவர்கள் தங்களை கம்யூனிஸ்ட்டுகள் என சொல்லிக் கொள்வதும் தொழிலாளர் தினத்தில் கூட இந்த விஷமத்துடன் பதிவுகள் போட்ட புரட்சியாளர்களுக்கும் இந்த ஜாதி அரசியலோ பிஜேபியின் அஜெண்டாவோ புரியாத மாதிரியே நடிப்பார்கள். இவர்கள் எல்லாம் ஜாதிய அமைப்பிற்கு எதிரானவர்களாம். எனக்கு இவர்களின் நோக்கத்தில் சந்தேகம் வருகிறது. தொழிலாளர் தினத்தில் கூட இவர்களால் தொழிலாளர் உரிமைகள் குறித்தோ நசிந்து கொண்டிருக்கும் தொழிலாளர் யூனியன்களை குறித்தோ கொஞ்சமும் பேசவில்லை. அக்கறையற்ற இவர்களின் இந்த நிலைப்பாடு தொழிலாளர் விரோதமாகவே தோன்றுகிறது.

எந்த ஆக்கபூர்வமான அரசியல் நிலைப்பாடும் இல்லாமல் தலித்திய அரசியலை தங்களின் எதிரியாக முன்னிறுத்தும் இவர்கள்... பிஜேபியின் ஜாதி அரசியலுக்கு உதவி புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பக்கம் ஜாதியை ஆய்தமாக்கி வீழ்த்தும் பிஜேபி, இன்னொரு பக்கம் அடையாள அரசியல் என தலித்தியத்தை முன்னிறுத்தும் சில கம்யூனிச கோஷ்ட்டிகள். இன்னொரு பக்கம் தலித் மக்களை எதிரியாக காட்டும் திமுகவின் சமீபத்திய நிலைப்பாடு( ஸ்டாலின், மனுஷ் இவர்கள் கிளப்பிய சர்ச்சைகள்). எல்லோரும் ஜாதி உணர்வை அரசியலாக்கி தேர்தலில் ஜெயிக்கும் இலக்கை நோக்கி பயணிக்கிறார்கள்.
தமிழ்நாடு ஜாதிய அமைப்பால் நாசமாகி அழிய போவது உறுதி  முகநூல் பதிவு மீனா சோமு


tamioineindia .com : பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக பயணம் திடீரென ரத்தானதற்கு காரணமே அக்கட்சியின் தமிழக தலைவர்கள்தான் என கூறப்படுகிறது.
By: Prabha சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணமே தமிழக பாஜக தலைவர்கள் மீதான அதிருப்திதான் என கூறப்படுகிறது. தமிழகத்தில் பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். தமிழிசையின் நியமனம் மூலம் நாடார் சமூக வாக்குகளை தம் பக்கம் கொண்டுவர முடியும் என கருதியது டெல்லி பாஜக மேலிடம். ஆனால் வெறும் பேச்சுமட்டும்தான் என்கிற நிலையில் இருக்கிறார் தமிழிசை. இதனால் அவரை மாற்றுவதில் நீண்டகாலமாக முனைப்புடன் இருக்கிறது டெல்லி மேலிடம். தமிழக பயணம் தற்போது தமிழகத்தில் அதிமுக உடைந்து சிதறியுள்ள நிலையில் இதை சாதகமாக பயன்படுத்த நினைக்கிறது டெல்லி பாஜக மேலிடம்.

இதற்காகவே வரும் 10-ந் தேதியன்று தமிழகத்துக்கு அமித்ஷா பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் தமிழக பாஜக தலைவர்களோ, அமித்ஷாவின் வருகையை பயன்படுத்தி 'ஆதாயம்' தேட தொடங்கினர். பசையுள்ள ஜாதி கட்சி தலைவர்கள், தொழிலதிபர்களை அமித்ஷாவுடன் சந்திக்க வைக்கும் பேரங்கள் படு மும்முரமாக நடந்து வந்தது. அத்துடன் அமித்ஷாவே நாங்க சொல்லித்தான் எல்லாவற்றையும் செய்கிறார் என்கிற தோரணையிலும் தமிழக பாஜக தலைவர்கள் செயல்பட்டு வந்தனர்.

இந்த தகவல்களை கேள்விபட்ட அமித்ஷா படு அப்செட்டாயிருக்கிறார். உடனடியாக தமிழிசை சவுந்தரராஜனை போனில் அழைத்து, மைக் கிடைக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் உளறி கொட்டுவீங்களா? என்னுடைய பயணத்திலும் கூட இப்படி ஆதாயம் தேட முயற்சிப்பீங்களா? என செம டோஸ் விட்டிருக்கிறார். அத்துடன் தமது தமிழக பயணத்தையும் ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார் அமித்ஷா என்கின்றன பாஜக வட்டாரங்கள். tamiloneindia

கருத்துகள் இல்லை: