வெள்ளி, 5 மே, 2017

நடிகை ரேகா சிந்து கார் விபத்தில் உயிரிழந்தார் .. வேலூரில் .. கன்னட தொலைக்காட்சி.. அமிர்தா விளம்பரம் ..

வேலூர்: கன்னட டிவி சீரியல் நடிகை ரேகா சிந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பலியானார். கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் பெங்களூரை சேர்ந்த ரேகா சிந்து(22). சென்னைஸ் அமிர்தா விளம்பர படத்திலும் நடித்துள்ளார். அவர் பெங்களூரில் இருந்து காரில் சென்னைக்கு வந்துள்ளார். வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தத்தில் கார் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரேகா சிந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த சம்பவத்தில் காரில் இருந்த அபிஷேக் குமரன்(22), ஜெயசந்திரன்(23), ரக்ஷன்(20) ஆகியோரும் பலியாகியுள்ளனர்.
அவர்கள் அனைவரின் உடல்களும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காரில் சிந்து உள்பட 6 பேர் இருந்துள்ளனர். காயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விளம்பர படத்தில் நடிக்க சென்ற இடத்தில் ரேகா பலியாகியுள்ளார். ரேகா ருத்ரா என்ற தமிழ் படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. tamiloneindia.com

கருத்துகள் இல்லை: