வியாழன், 4 மே, 2017

சிந்துவெளி தமிழர்கள் நாட்டார் தெய்வங்களையே போற்றி வந்துள்ளனர்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் வந்தேறி மதங்கள் ஆட்சி செய்கின்றன. தமிழர்களும் வந்தேறி மதங்களை ஆதரித்தும் போற்றியும் வந்திருக்கிறார்கள். ஆனால் சிந்து சமவெளி மக்களாகிய தமிழர்கள் நாட்டார் தெய்வங்களையே மதித்துப் போற்றி வழிபட்டு வந்துள்ளனர்.
சைவம், வைணவம், வைதீகம், சமணம், பௌத்தம், தோன்றுவதற்கு முன்பு தமிழர்களுக்கு சமயங்கள் இல்லை. ஆனால் கொற்றவை, அணங்கு, முருகு, போன்ற நாட்டார் தெய்வ வழிபாடு சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன.
தமிழர்களின் நாட்டார் தெய்வங்கள் என்பவை அவர்கள் வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள். தமிழ்நாட்டிலும் வடக்கிழங்கையிலும் வாழ்ந்து மடிந்த சக மனித உயிர்கள். நம் மண்ணின் கருணைக்கு, வீரத்திற்கு, அவலத்திற்கு, அறத்திருக்குமான சிறந்த சாட்சிகள் அவர்களே. எனவே நம் மண்ணில் சிலைகளாக, நடுகல்லாக இருக்கிற சாமிகளின் வரலாறை அறிந்து கொள்ளுதல் பாரம்பரிய தேடலில் மிக மிக அவசியமாகிறது.
மதக் கடவுள் வழிப்பாட்டில் பகவத் கீதை, சைவத் திருமறைகள், பைபிள், குர்ஆன் போன்ற வேத நூல்கள் உள்ளன. ஆனால் நட்டார் தெய்வங்களுக்கு எந்த வேத நூலும் வேத மந்திரமும் கிடையாது.

ஊர் பாதுகாப்பிற்காக உயர்நீத்தவர்கள் அல்லது அநியாமாக கொலை செய்யப்பட்டவர்கள், தற்கொலை செய்து கொண்ட எளிய மனிதர்கள் அப்படியே சாமி ஆனார்கள். அவர்கள் தமிழர்களின் மண்ணில் வாழ்ந்தவர்கள்.
மதக் கடவுள்களுக்கு மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட வகை வகையான தீட்டில்லாத சாப்பாடுகள் படைக்க வேண்டும். நாட்டார் தெய்வங்களுக்கு கத்தரிக்காய் முதல் கறிச்சாப்பாடு வரை எளிய மக்கள் என்ன உண்பார்களோ அதையே படைப்பார்கள். பீடி, சுருட்டு சாராயமென எளிய மக்களிடம் என்ன இருக்கிறதோ அதையே ஏற்றுக் கொள்கிறது நாட்டார் சாமி. அதற்கு தீட்டு என்று எதுவும் கிடையாது.
நாட்டார் தெய்வங்களுக்கு மக்கள் அனைவரும் சமம். மதக் கடவுள்களுக்கான வழிபாடுகளை மக்கள் நேரடியாக செய்ய முடியாது. வேத மந்திரங்கள், வேத வசனம் பயிற்சிக்கபட்ட ஒரு புரோகிதர் அல்லது பாதிரியார் நடுவில் இருந்து தலைமை ஏற்று வழி நடத்துவார். பெண்கள் உட்பட விவசாயம், மேய்ச்சல் போன்ற வேலை செய்யும் எளிய மக்கள்தான் நாட்டார் தெய்வங்களின் பூசாரிகள்.
மதக் கடவுள்களின் கோவில்கள் கட்டுவதற்கும் சிலைகள் வடிப்பதற்கும் ஆகம விதிகள் போன்ற கட்டுமான விதிகள் உண்டு. ஆனால் நாட்டார் தெய்வங்களுக்கு வெறும் மண்ணை குழைத்து பீடமாக கட்டுவார்கள் அவ்வவளவுதான். நம் நாட்டார் தெய்வங்களோ நடுகல்லாக, சிலையாக எளிய மக்களை போல வெயிலிலும் மழையிலும் கம்பீரமாக நிற்கும்.
அக்காலத்தில் போரில் வீரமரணம் அடைந்தவர்களை புதைத்து நடுகல் நட்டு தெய்வமாக வழிப்படும் வழக்கம் தமிழ் சமூகத்தில் இருந்தது. ஊரை காலி செய்து வெளியூர் போகும் குடும்பத்தார்கள் தங்கள் குலத் தவத்தின் பிடி மண்ணை எடுத்து குழைத்து புதிதாக குடியேறும் ஊரில் சிலை வடித்தோ, கோவில் கட்டியோ வழிபடுவார்கள்.
மதக் கடவுள்கள் போல் அல்லாமல் அவர்களுக்கு இரண்டு கால்கள், இரண்டு கைகள் என நம்மை போன்றே உருவம் இருக்கும். நம் நாட்டார் தெய்வங்களில் பெண் தெய்வங்கள் அதிகம். எல்லோரம் ரத்தமும் சதையுமாக நம்முடன் வாழ்ந்தவர்கள்.
அருள்குமர் சோமசுந்தரம்  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: