சனி, 6 மே, 2017

நிர்பயாவின் இறுதி வாக்குமூலம் : குற்றவாளிகளை உயிரோடு கொளுத்தவேண்டும் !

குற்றவாளிகளை உயிரோடு எரிக்க வேண்டும் என பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா இறக்கும் தருவாயில் டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
By: Lakshmi Priya
டெல்லி:
உயிரோடு எரிக்க வேண்டும்
என்னை நாசப்படுத்திய அத்தனை குற்றவாளிகளையும் உயிரோடு கொளுத்த வேண்டும் என பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா இறக்கும் தருவாயில் டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் தன் நண்பருடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது யாரும் இல்லாத இடத்தில் அந்த நண்பரை தாக்கிவிட்டு அந்த மாணவியை பஸ் கண்டக்டர் உள்பட 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற அவர் 12 நாள்களுக்கு பின்னர் உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக 18 வயது சிறுவன் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

நினைத்துக்கூட பார்க்க முடியாத மிருகத்தனமான ஒரு குற்றமாகும்.. நிர்பயா வழக்கில் நீதிபதிகள்!
இளம்குற்றவாளி கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார். எஞ்சிய 4 பேருக்கும் கீழ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 4 பேரும் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இது காட்டுமிராண்டித்தனமான படுகொலை என கூறி 4 பேருக்குமான தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
நடந்தது என்ன முன்னதாக மருத்துவமனையில் இருந்த நிர்பயா இறப்பதற்கு முன்னர் டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில் பேருந்தில் நடந்தது என்ன என்ற கேள்விக்கு அவர், பேருந்து மலைக் கோயில் அருகே சென்றவுடன் என் நண்பரை அடித்து பேருந்தில் இருந்து வெளியே தள்ளினார் கண்டக்டர். அழுகுரல் கேட்கவில்லை பின்னர் என்னை பேருந்தில் பின் சீட்டுக்கு தூக்கி சென்று 6 பேர் பலாத்காரம் செய்தனர்.
என் செல்போன்களை அவர்கள் பறித்துக் கொண்டதால் என்னால் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை. எனது அழுகுரலும் யாருக்கும் கேட்கவில்லை என்றார் அவர்.
அந்தக் குற்றவாளிகளின் பெயர்களை கூறினார் நிர்பயா. உயிரோடு எரிக்க வேண்டும் பின்னர் என்ன நடந்தது என்று டெல்லி மாஜிஸ்திரேட் கேட்டதற்கு, ஒரு மணி நேரத்துக்கு பின்னர் என்னை கடுமையாக தாக்கி என்னை பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.
அதன்பிறகு நான் மயக்க நிலைக்கு சென்றேன் என்றார்.
குற்றவாளிகளை என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு அவர்களை உயிரோடு எரிக்க வேண்டும் அல்லது தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: