ஜெயலலிதாவின் அறை கதவை உடைத்து அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் 200 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அறையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த 3 சூட்கேஸ்கள் இதில் திருடப்பட்டதாகவும், அதில் சொத்து ஆவணங்களும், ஜெயலலிதாவின் உயில் பத்திரங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் சொத்து ஆவணங்கள், பத்திரங்கள், உயில் போன்றவற்றை கைப்பற்ற அரசியல் பிரமுகர் யாராவது இதன் பின்னணியில் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த நகைகள் ஆத்தூரில் உள்ள சில நகைக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், சில நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள நகைக்கடைகளின் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் சில கடைகளில் இருப்புக்கு அதிகமான நகைகள் இருந்தது தெரிய வந்தது. எனவே, அதுகுறித்து விளக்கம் அளிக்கும் படி அதிகரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வைத்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என அரசியல் கட்சியினர் கூறுகின்றனர். வெப்துனியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக