புதன், 3 மே, 2017

Admk Fails :யானையோடு சண்டையிட்ட நாங்கள் சில எலிகளோடு போராட விரும்பவில்லை

மணிக்கொரு செய்திகளையும் படங்களையும் பதிவு செய்து கொண்டிருந்த நீங்கள். தற்போது ஏன் அமைதியாக இருக்கீர்கள் என்று நம் வாசகர்கள் உள்டப்பியில் கேட்கின்றனர் .
ஜெயலலிதா என்ற யானையை எதிர்த்து ஆரம்பித்த பக்கம் இது எத்தனையோ மிரட்டல்கள் பக்கத்தை முடக்க செய்த சதிகள் என்று அத்தனையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு எழுச்சியோடு விமர்சனங்களை வைத்தோம்
கொள்கை விமர்சனங்கள் மட்டுமே வைத்தோம் தவிர காழ்புணர்ச்சியால் தனிமனித ஆபாச தாக்குதலை எல்லாம் நாங்கள் முன்னெடுக்க வில்லை அதிக்பட்ச தாக்குதல் என்பது கொடநாட்டு சுந்தரி என்று தான் ஜெயலலிதாவை. அழைத்தோம்
அந்த அம்மையார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது பொறுப்புணர்வுடன் தான் நடந்துகொண்டோம். உடல்நலிவு என்பது மனிதர்கள் அனைவரும் எதிர்கொள்ளக்கூடியது தான் அதை கேளிபொருளாக மாற்றி நகைக்க நாங்கள் வரும்பவில்லை ! நாங்கள் இந்த பக்கத்தினை ஆரம்பித்த சமயத்தில் ஆரம்பித்த பக்கங்கள் எங்களுக்கு போட்டியாக ஆரம்பித்த பக்கங்கள் அனைத்தும் தங்களின் பதிவுகளின் லைக்குகளை அதிகரிக்க ஆபாச தாக்குதலை நடத்தினர் . அதை எல்லாம் நாங்கள் கண்டும் காணாமல் சென்றோம் !

நம்முடைய பதிவு அடுத்தவர்களின் மனதில் கேள்வியை எழுப்ப வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் ! தந்தை பெரியாரை தலைவராக அவரை எங்கள் இன தலைவராக ஏற்றுகொண்ட நாங்கள் ஒருபோதும் தனிமனித தாக்குதலை முன்னெடுத்து சென்றால் பெரியார் வழியில் நிற்கிறோம் என்பதற்கு அருகதை இல்லாதவர்களாக மாறிவிடுவோம் என்பதால் தான் கொள்கை விமர்சனங்களை மட்டும் முன்னெடுத்தோம்
ஜெயலலிதா மறைவின் போதும்! இரங்கல் கவிதை வாசித்தோம் !!
தற்போது குழம்பிய குட்டையாக இருக்கின்ற இந்த நேரத்திலும் அமைதியாகவே உள்ளோம் ! நாம் யாரை எதிர்க்க வேண்டும் என்பது முக்கியம் ! அதற்கு நீங்கள் இந்த ஆட்சியை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டுவிடக் கூடாது இந்த ஆட்சி ஒரு நிமிடம் கூட இருக்க தகுதியற்றது ! அதன் தார்மீக உரிமையை முற்றிலும் இழந்துவிட்டது .தற்போது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க சில பாம்புகள் புற்றில் இருந்து வெளியேறி அது வெள்ளாடுகளாக வேடமனிந்து சுத்தி திருகின்றனர் அவர்களின் வேசத்தை கலைத்து அது வெள்ளாடுகள் இல்லை கட்டுவிரியன்கள் என்று எடுத்து கூற வேண்டிய கடமையும் எங்களுக்கு உள்ளது .
யானையோடு சண்டையிட்ட நாங்கள் சில எலிகளோடு போராட விரும்பவில்லை
ஆதலால் நாங்கள் அமைதியாகவும் இருக்கவில்லை அரசியல் நிலவரங்களை ஆல்ந்து கவணித்து வருகிறோம் விரைவிலேயே ஜெயலலிதாவை எதிர்த்த அளவை விட மூர்க்கமாக அந்த பாம்புகளையும் இந்த செத்த எலியான எடப்பாடி அரசையும் எதிர்ப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் ! அதுவரை காத்திருங்கள் AdmkFails

கருத்துகள் இல்லை: