செவ்வாய், 2 மே, 2017

அதிமுக கோஷ்டி மோதல் ஸ்பொன்சர் பாஜக தற்காலிக நிறுத்தம் ... ரொம்பவும் நாறிக்கிடுசாம்?

Special Correspondent
tamil.splco.me :l இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் கமிஷன்க்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் 37 மணி நேரம் சம்மன் விசராணை, 5 நாட்கள் அர்ரெஸ்ட் செய்து போலீஸ் காவலில் அலைக்கழித்து விசாரணை., இதனை தொடந்து நீதிமன்ற காவலில் 15 நாள் திகார் ஜெயில் அடைக்கப்பட்டு உள்ளார் சசிகலாவின் அண்ணன் மகன் தினகரன்.
இந்த நிலையில் இரு அணிகள் இடையே ஆன இணைப்பு முயற்சி தோல்வி அடைந்துள்ளது. சசிகலா ஆதரவு அணியை சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எங்களிடம் ஆட்சியும் கட்சியும் இருக்கிறது ஓபிஎஸ் கோஷ்டி வந்தால் வரட்டும் வராவிட்டால் பாதகம் இல்லை என்று வெளிப்படையாக தெவித்த நிலையில்., வரும் 5ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் ஓ.பி.எஸ். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களை சந்தித்து பேசி இந்த சுற்றுப் பயணம் மூலமாக தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகளை நியமிக்கவும், முடிவு செய்துள்ளார் என்று ஓபிஎஸ் கோஷ்டியினர் தெரிவித்தனர்.


எடப்பாடி பழனிசாமி கோஷ்டியினரும் இணைப்பு முறித்ததால், முயற்சியை கைவிட்டு விட்டு மற்ற நடவடிக்கைகளில் இறங்குகின்றனர்.
முன்னதாக திமுக செயல் தலைவர், தலைமை செயலர் ரெய்டு, அமைச்சர் விஜயபாஸ்கர் ரெய்டு நடத்தியது, ஆனால் இதன் விவரங்கள் வெளியிடவில்லை. ரெய்டின் பின்புலம் என்ன? கண்டுபிடித்தது என்ன? இது போல் ரெய்டு கண் துடைப்பாக இருக்க கூடாது. செயல்பாட்டில் இறங்க வேண்டும். பாஜக., மாநில சுயாட்சி மீறி செயல்படுகிறது. சுயாட்சி கொள்கையில் பாஜக., தலையிடுகிறது.
அதிமுவை பிளவுபடுத்தும் ஆட்சியை ஸ்தம்பிக்க பிஜேபி செலெக்ட்டிவ் ஊழல் ரைட் நடத்துவதாக கூறிய குற்றசாட்டு காரணமாக அதிர்ந்த பிஜேபி தலைமை அதனை மறுத்த நிலையில் அதிமுக கோஷ்டி பிஜேபி ஸ்பொன்சர்ட் இணைப்பு நாடகம் தற்காலிக முடிவுக்கு வந்தது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள் ..

கருத்துகள் இல்லை: