வெள்ளி, 5 மே, 2017

சிஏஜியின் அறிக்கை: பிரதமரே மக்களிடம் பொய்யான தகவலை பரப்பி உள்ளார்

trollmafia2  :   மோடி புளுகு : மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து சாதாரண மக்களுக்கு வழங்கப்படும்
மானியங்களே வளர்ச்சிக்கு தடைக்கல்லாக உள்ளது என கூறி வந்தனர். இதைத்தொடர்ந்தே பல மக்கள் நலத்திட்டங்களுக்கான மானியம் வெட்டிச்சுருக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக வசதி படைத்தவர்கள் எரிவாயுக்கான மானியத்தை விட்டுக் கொடுக்க கோரி கிவ் இட் அப் என்ற திட்டத்தை விளம்பரப்படுத்தப்பட்டது.
இந்த விளம்பரம் எரிவாயுவிற்கான மானியம் பெறுபவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்பது போன்று சித்தரித்து பல கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்யப்பட்டது.
பின்னர் இந்த விளம்பரத்தின் மூலம் நாட்டில் எரிவாயு மானியத்தை தானாக முன்வந்து மானியத்தை வேண்டாம் என்றதன் பலனாக ரூ 22000 கோடி அரசுக்கு மிச்சமானது என்று மோடி அரசு மார்தட்டி வந்தது. இதன் மூலம் நாட்டில் எரிபொருளுக்கு மானியம் பெறுபவர்களை குற்றவாளிகள் என்ற எண்ணத்திற்கு கொண்டு செல்ல அவ்வப்போது மோடியும் அவரது அமைச்சரவை வட்டாரங்களும் முயன்று வந்தனர்.


இந்நிலையில் மோடி அரசின் நடவடிக்கையால் ரூ 22 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தியதாக பிரதமர் பேசி வந்தது சுத்த பொய் என்பது சிஏஜி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது. அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெறும் 2000 கோடி ரூபாய் மட்டுமே மானியத்தை விட்டுக்கொடுத்தவர்களால் அரசுக்கு மிஞ்சியுள்ளது. மீதம் உள்ள 20000 கோடி என்பது இந்தியா இறக்குமதி செய்யும் எல்பிஜியின் விலை உலகச்சந்தையில் கடுமையாக குறைந்ததே காரணம் என்று சிஏஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவினர் நடத்திய ஆய்வில் 2014 -15ல் 36,571 கோடி ரூபாய்க்கு எல்பிஜி இறக்குமதி செய்யப்பட்டது. அதேபோல் 2015-16ம் ஆண்டில் மட்டும் 25,626 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 10945 கோடி மட்டுமே ஒராண்டில் சேமிக்க முடியும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் மோடி அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை என்பது உறுதிபடுத்தப்படுகிறது.
மோடியின் பொய் பேச்சு
பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு செங்கோட்டையில் உரையாற்றுகையில் எரிவாயு இணைப்புகளின் மூலம் முந்தைய அரசு 15000 கோடி வரை திருடியதாக குற்றம் சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஆதார் அடையாள அட்டை, வங்கிக் கணக்கில் மானியம் அவற்றை நெறிப்படுத்தி உள்ளதாக மார்தட்டினார். ஆனால் தற்போது தயாராகி உள்ள சிஏஜியின் அறிக்கை நாட்டின் பிரதமரே மக்களிடம் பொய்யான தகவலை பரப்பி உள்ளார் என்பதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.முகநூல் பதிவு 

கருத்துகள் இல்லை: