ஒத்திவைப்பு:
மேலும், பல்வேறு புதிய வழிகளிலும், வாக்காளர் களுக்கு பணம் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, இடைத் தேர்தலை, தேர்தல் கமிஷன் ஒத்திவைத் துள்ளது.இந்த நிலையில், இது போல் ஓட்டுக்கு பணம் தருவதை தடுப்பது குறித்து, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் கமிஷன் சார்பில் கடிதம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது, வாக்காளர் களுக்கு பல்வேறு வழிகளில் பணம் கொடுத்துள்ள னர். சில இடங்களில், 'மொபைல் ரீசார்ஜ்' செய்வது, டோக்கன் வழங்குவது என, ரொக்கமாகவும், பரிசு பொருளாகவும் வழங்கியுள்ளனர்.மக்கள் பிரதி நிதித்துவ சட்டத்தின் கீழ், வன்முறைகள் நடந்தால், குறிப்பிட்ட தொகுதியில் தேர்தலை நிறுத்தும் அதிகாரம், தேர்தல் கமிஷனுக்கு உள்ளது.
அதே நேரத்தில், வாக்காளர்களுக்கு பணம்கொடுக் கப்பட்டால் அங்கு, தேர்தலை நிறுத்த அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளை பயன்படுத்தியே தேர்தலை நிறுத்த முடியும். இந்த சட்டப் பிரிவை அதிகம் பயன்படுத்த தேர்தல் கமிஷன் விரும்பவில்லை.ஓட்டு போட பணம் கொடுக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், உடனே தேர்தலை நிறுத்த, மக்கள் பிரதிநிதித்துவச் ass="topadtxt728"> Advertisement
தற்போது, ஆர்.கே.நகர் தொகுதி அனுபவத்தின் அடிப்படையில், இவ்வாறு பணம் கொடுக்கும் ஒரு சிலரால், மற்ற வேட்பாளர்கள் பாதிக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, பணம் கொடுக்கும் வேட்பாளர் மீது, கோர்ட்டில் வழக்கு பதிவு செய்த உடனேயே, குறைந்தபட்சம், ஐந்து ஆண்டுகள் அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.
இதற்காக சட்டத் திருத்தம் செய்யபட வேண்டு மென வலியுறுத்தி, மத்திய சட்ட அமைச்சகத் துக்கு,தேர்தல் கமிஷன் சார்பில் கடிதம் அனுப்ப உள்ளோம்.என அதிகாரிகள் தெரிவித்தனர். தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக