செவ்வாய், 2 மே, 2017

Chennai IIT சென்னை ஐ ஐ டியில் 40 வயது பெண் மர்ம மரணம் ...



சென்னை ஐ.ஐ.டி.வளாகத்தில் பெண் சடலம் கண்டெடுப்பு.. போலீசார் தீவிர விசாரணை By: Karthikeyan Published: Tuesday, May 2, 2017, 18:28 [IST] Subscribe to Oneindia Tamil சென்னை: சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள பிரம்மபுத்ரா மாணவர் விடுதியின் பின்புறம் உள்ள முட்புதரில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பெண்ணின் உடலைக்கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: