சனி, 6 மே, 2017

குமுதம் இதழை முழுங்கும் வரதராஜன் (பி.வி.பார்த்தசாரதி மகன்).. ஜவகர் பழனியப்பன் ( எஸ்.ஏ.பி.அண்ணாமலை மகன்) போராட்டம்!

tamil.splco.me : Special Correspondentஜவஹர் பழனியப்பனின் தந்தை எஸ்.ஏ.பி. அண்ணாமலையால் 1947 ஆம்
ஆண்டு குமுதம் பத்திரிகை தொடங்கப்பட்ட போது பி.வி.பார்த்தசாரதி(வரதராஜனின் தந்தை) மாத சம்பளம் பெற்று மேலாளராக பணிபுரிந்தார். எஸ்.ஏ.பி. அண்ணாமலை கடுமையாக உழைத்து குமுதத்தை தமிழகத்தின் / இந்தியாவின் மிக அதிக பிரதிகள் விற்கும் பத்திரிக்கையாக மாற்றினார். இவரின் மகன் ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் மிகப்பெரிய ஹார்ட் சர்ஜன்ட்டாக முழு நேரமும் இருப்பதால், பெரியவர்கள் இருவரின் மறைவுக்கு பின் பத்திரிக்கை நிர்வாகம் முழுதும் பார்த்தசாரதி மகன் வரதராஜன் கையில் நம்பி ஒப்படைத்தார், மேலும் வரதராஜனுக்கு குமுதத்தில் குறிப்பிட்ட அளவு பங்கும் வழங்கப்பட்டது, ஆனால் அதற்கான பணத்தை வரதராஜன் இதுவரை செலுத்தவில்லை.



Special Correspondent நிர்வாகம் முழுக்க வரதராஜன் கட்டுப்பாட்டில் இருந்ததால் குமுதத்தை மொத்தமாக வரதராஜன் கைபிடியில் கொண்டு வருவதை அறிந்த டாக்டர் ஜவஹர் பழனியப்பன், அமெரிக்காவில் வசிப்பதால் தனது தாய் கோதை ஆச்சியை குமுதம் அலுவலகத்துக்கு அனுப்பினார், ஆனால் வயதான கோதை ஆச்சிக்கு அலுவலகத்தில் தண்ணீர் கொடுக்க கூட இல்லாமல் அவமானப்படுத்தப்பட்டார்.
ஜவஹர் பழனியப்பன் 2010-ஆம் ஆண்டு போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் வரதராஜன் 25 கோடி ரூபாய் பணத்தை குமுதம் நிர்வாகத்தில் இருந்து சுருட்டிவிட்டார் என்று கூறியிருந்தார். இந்த மோதலில் உச்ச கட்டமாக பஞ்சாயத்து அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் சென்றது. அதில் வரதராஜன் மீது சில வழக்குகள் போடப்பட்டன. இதனால் கடுப்பான வரதராஜன் தன் முழு பத்திரிக்கை பலத்தையும் கருணாநிதிக்கு எதிராக தேர்தல் சமயத்தில் பயன்படுத்தினார். திமுக எதிர்ப்பு நிலையை குமுதம் வாயிலாக வரதராஜன் தேர்தல் நேரத்தில் எடுத்து, இன்று வரை அது ஆளும் கட்சியின் குரலாகவே இருந்து வருவதை வரதராஜன் உறுதி செய்து கொண்டார்.
எதற்காக? தனது ஊழல் மறைக்கப்பட்டு அபகரித்த குமுதத்தின் ஷேர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமே. ஆட்சி மாற்றம் நடந்த பிறகு வரதராஜன் சாதகமாக போலீஸ் நடந்து கொண்டதால் சென்னை பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்.மோகன் பிறப்பித்த உத்தரவில், ‘’நிறுவனத்தின் பணம் ரூ. 25 கோடியை தவறாக பயன்படுத்தியதாகவும், ஏமாற்றியதாகவும் வரதராஜனுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

அசரவில்லை டாக்டர் ஜவகர் உயர்நீதிமன்ற கதவை தட்டினார். மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி பிறப்பித்த உத்தரவில்,
1) "வரதராஜன் மீதான, முறைகேடு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா என்பதையும், எந்த அளவுக்கு முறைகேடு நடந்தது என்பதையும் கண்டுபிடிக்க, மேற்கொண்டு விசாரணை தேவை.
2) புலனாய்வு அமைப்பு முறையாக பரிசீலிக்காமல், வரதராஜன் அளித்த பதிலின் அடிப்படையில், இயந்திரத்தனமாக புகாரை முடித்துள்ளனர்.
3) அதுவும் வரதராஜன் அளித்த பதில் சரியானது தானா என்பதை கண்டறிய, புகார் கொடுத்த, ஜவகர் பழனியப்பனுக்கு சந்தர்ப்பம் வழங்காமல், முடிக்கப்பட்டு உள்ளது.
4) மனுதாரரின் மனுவில் உள்ள அனைத்து அம்சங்களையும், மாஜிஸ்திரேட் பரிசீலிக்க தவறி விட்டார். எனவே, மாஜிஸ்திரேட்டின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை, புதிய குழு நியமித்து விசாரிக்க, மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்ப வேண்டும். ஆறு மாதங்களுக்குள், இறுதி அறிக்கையை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்.‘’
மேலும் தனியார் நிறுவனம் மூலம் நடத்திய சர்வே முடிவில்:
இந்த வழக்கில் டாக்டர் ஜவகர் & கோதை ஆச்சி வெற்றி பெற்று குமுதத்தை கைப்பற்றி மீண்டும் அதனை நடுநிலை பத்திரிகை ஆக செயல்படுத்த வேண்டும் என்று 71.3 % குமுதம் வாசகர்கள் தங்கள் விருப்பம் என தெரிவிக்கிறார்கள்.
மேலும் 25 கோடி ஊழல் செய்து, முறைகேடாக குமுதத்தை கைப்பற்றிய திரு வரதராஜன் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பதே 62.3% குமுதம் ஊழியர்கள் கருத்து ஆகும்.
மேலும் சக பத்திரிகை இந்த அநியாயத்தை எப்படி வாய்மூடி மௌனித்து செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள் என்று ஒரு மூத்த பத்திரிகை ஆசிரியர் கவலையுடன் தெரிவித்தார்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு

கருத்துகள் இல்லை: