செவ்வாய், 2 மே, 2017

இன்போசிஸ் 10,000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது! எல்லாம் டொனால்ட் ட்ரம்ப் பயம்தான் !

ஹெச் 1 பி விசா தொடர்பான சர்ச்சை நிலவி வரக் கூடிய சூழ்நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் 4 முக்கிய பிரிவுகளை உருவாக்கி புதிதாக 10,000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர இருப்பதாக இன்போசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிடிஐ நிறுவனத்திற்கு பேசிய இன்போசிஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி விகாஷ் சிக்கா, இந்த திட்டத்தில் முதல் பகுதி வரும் ஆகஸ்ட் மாதம் இண்டியானா மாகாணத்தில் தொடங்கப்பட உள்ளதாகவும் முதல் கட்டத்தில் இரண்டாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அடுத்த அடுத்த கட்டங்களில் 10000 பேர் வரை வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

ஹெச் 1 பி விசா சிக்கலால் அவுட் சோர்ஸிங் முறையில் இந்தியாவிலிருந்து பொறியாளர்களை அனுப்புவதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவிலேயே நிறுவனங்கள் தொடங்கி அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் முன்னுரிமை வழங்கி வருகின்றன. tamilthehindu

கருத்துகள் இல்லை: