சனி, 6 மே, 2017

ஜெயாவின் சொத்தில் 40 வீதம் ஆட்சியிலும் 40 வீதம்.. பேரம் படியல்லைன்னா திகார் .. அடிமைகளிடம் தமிழகம்.... ஓநாய்களிடம் ....?

ஹார் சிறையில் இருக்கிறார் தினகரன்.
அவர் கைது செய்யப்பட்டதில் பல ரகசிய பேரங்கள் இருக்கின்றன'' என்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்தவர்கள்.டி.டி.வி. தினகரனிடம் விசாரிக்கும் டெல்லி போலீசார், அவர் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவார்கள் என நாம் கடந்த இதழில் எழுதியிருந்தோம். ஆனால் மத்திய அரசு சி.பி.ஐ.யை விட மிக வலுவான பொருளாதாரக் குற்றங்கள் தொடர்புடைய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறைக்கு இந்த வழக்கை மாற்றிவிட்டது. >"ஏன் இந்த கடுமை' என கேட்டதற்கு, ""தினகரன் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு பெரிய ஹவாலா ஆபரேட்டராக இருந்திருக்கிறார். அவரது பாஸ்போர்ட்டை 91-96 காலகட்டத்தில் அமலாக்கத்துறை முடக்கிவிட்டது. ஆனால் உலகம் முழுவதும் அவரது கை நீண்டு நிற்கிறது'' என சொன்னவர்கள் அதை விலாவாரியாக விவரிக்கத் தொடங்கினர்
மொரீஷியஸ் தீவில் ஏதாவது முகவரியை வைத்து நீங்கள் ஒரு கம்பெனியை ஆரம்பித்தால் அதன் வங்கிக் கணக்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யலாம். அந்த வங்கிக் கணக்குகளில் இருந்து முதலீடு செய்த பணத்தை இந்திய வங்கிகளுக்கு மாற்றலாம். இந்தியாவில் கணக்கு காட்டப்படாத ஊழலில் சம்பாதித்த பணத்தை மொரீஷியஸ் தீவுக்கு அனுப்பினால் அங்கிருந்து ஒரு பினாமி பெயரில் நல்ல பணமாக இந்தியாவுக்குள் கொண்டுவரலாம்.


மொரீஷியஸ் மட்டுமல்ல, கேமன் தீவுகள், பிரிட்டீஷ் வெகினே தீவுகள் என நூற்றுக்கணக்கான தீவுகளில் இப்படி முதலீடு செய்யப்படுகிறது;">இந்தப் பணம் பெரும்பாலும் கண்டெய்னர்கள் மூலமாக இந்தியாவிலிருந்து அனுப்பப்படும். சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் பயணம் செய்யும். கண்டெய்னர்களை நிர்வகிக்கும் வேலையை சென்னையிலிருந்து டி.டி.வி. தினகரன் மேற்கொண்டார்.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியும், திரும்பப் பெறும் பணத்தை வைத்துக்கொண்டும் நர்த்தனமாடியிருக்கிறார்கள். இந்த ஆபரேஷன் நெட்வொர்க்கை தினகரனுக்காக நிர்வகித்து வந்தவர்தான் மல்லி என்கிற மல்லிகார்ஜுனா. மல்லியின் உதவியாளராக இருந்தவர்தான் தினகரன் மனைவி அனுராதாவின் உறவினரான மோகன் மற்றும் பாரிமுனையைச் சேர்ந்த நரேந்திரகுமார், பெரம்பலூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஆகியோர்.;">91-96-ல் தினகரனின் இந்த இண்டர்நேஷனல் பணப் பரிமாற்றத்தை அப்போது மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் தூண்டுதலின் பேரில் தினகரன் மீது பல வழக்குகள் பாய்ந்தது. 2001, 2006, 2011-2016 காலகட்டத்தில் தினகரன் அரசியலில் இருந்து ஒதுங்கி பண விவகாரத்தை கச்சிதமாகப் பார்த்து, சசிகலாவின் நம்பிக்கைக்குரிய ஆளாக வலம்வந்தார்.

அந்தக் காலகட்டத்திலும் இரண்டு முறை தினகரன் மேற்கொண்ட ஹவாலா ஆபரேஷன்கள் வெளிச்சத்திற்கு வந்தன. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெ.வுக்கு சாதகமாக தீர்ப்பு வரவேண்டுமென, தனது ஹவாலா ஆபரேஷன்கள் மூலமாக சட்ட உதவிகள் செய்தார் தினகரன்.அந்த சட்ட உதவிகளுக்கு உதவியவர் வழக்கறிஞர் பி.குமார் மற்றும் நாமக்கல் செந்தில் ஆகியோர். பி.குமாரின் ஜூனியர் வழக்கறிஞரான திருவேற்காடு கோபிநாத் உதவியாக இருந்துள்ளார். இந்த வழக்கறிஞர் டீம் கண்டுபிடித்த நபர்தான் சுகேஷ் சந்திரசேகர்.<;">கலைஞரின் உறவினர் என தமிழகத்தில் பிராடு வேலைகளில் ஈடுபட்டாலும், கர்நாடகத்தில் உள்ள நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்த சுகேஷ் சந்திரசேகரின் தரகு வேலை... கர்நாடகாவில் ஜெ.வுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் பெரிதும் உதவியது. அதற்கு தினகரனின் ஹவாலா ஆபரேஷன் முக்கிய காரணமாக அமைந்தது.

;இந்த ஆபரேஷனுக்கு அடுத்தபடியாகத்தான் சட்டமன்றத் தேர்தலில் தோற்கும் வாய்ப்புள்ளது என நினைத்த ஜெ., கொடநாட்டில் இருந்து கண்டெய்னர் மூலம் விசாகப்பட்டின துறைமுகம் வழியாக பணத்தை அனுப்பும் பொறுப்பை தினகரனிடம் அளித்தார். அதில் மூன்றுதான் 570 கோடியோடு தேர்தல் பறக்கும் படையால் கைப்பற்றப்பட்டது. இந்த கண்டெய்னர் விவகாரம் மூலமாகத்தான் நரேந்திரமோடி அரசுக்கு டி.டி.வி. தினகரன் யார்? அவர் என்ன வேலை செய்கிறார்? என தெளிவாகத் தெரிகிறது. அப்போது ஜெ.வின் வேண்டுகோளை ஏற்று 570 கோடியில் நாற்பது சதவிகிதத்தைப் பெற்று தினகரனை தப்பவைத்தது மத்திய அரசு

ஜெ.வின் உடல்நிலை நலிவடைந்தபோதும் ஆக்டிவ்வாக செயல்பட்ட தினகரன், போயஸ் கார்டனிலிருந்து அனுப்பிய கண்டெய்னர்களைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் அமைதி காத்திருந்த மத்திய அரசுக்கு இரட்டை இலையைப் பெற தினகரன் முடிவு செய்து மேற்கொள்ளும் நகர்வுகள் தெரியவர... பொறிவைத்து சுகேஷ் சந்திரசேகரை பிடித்தது. தினகரன், சுகேஷ், மல்லி ஆகியோரை திஹார் சிறைக்கு அனுப்பியதோடு, இந்த மூன்று பேர் மீதும் அமலாக்கத்துறையில் வெயிட்டான இன்னொரு வழக்கையும் போட்டது'' என இதுவரை நடந்ததை விளக்குகிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.;
"அதெல்லாம் சரிதான், தினகரனிடம் மத்திய அரசு ஒரு பேரம் பேசியது தெரியுமா?''எனஅந்த விவகாரத்திற்குள் நம்மை அழைத்துச் சென்றார் தினகரனின் ஆதரவாளர். 

சசிகலா கைப்பற்றி வைத்துள்ள ஜெ.வின் சொத்தில் நாற்பது சதவிகிதம் கொடுக்க வேண்டும். அதேபோல் அதிகாரத்திலும் நாற்பது சதவிகிதம் தரவேண்டும். உள்ளாட்சித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் அனைத்திலும் நாற்பது சதவிகிதம் தரவேண்டும். அதற்குப் பதிலாக உடைந்திருக்கும் அ.தி.மு.க.வை நாங்கள் ஒன்றாக்குவோம். மத்திய மந்திரிசபையிலும் இடம் தருவோம். இதற்கு சம்மதிக்காவிட்டால் இரட்டை இலையைப் பெற  தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு கடுமையாகும். இரட்டை இலையை சசிகலா தரப்புக்கு தேர்தல் கமிஷன் கொடுக்காது. அப்படிக் கொடுத்தால் அது லஞ்சத்தால் பெற்ற இலை என செய்தி பரவும் என தினகரனை மத்திய அரசு மிரட்டியது. 
அதற்குப் பதிலளித்த தினகரன், "இந்த டீல் பற்றி நான் எதுவும் முடிவு எடுக்க முடியாது. இவை அனைத்தும் என் சின்னம்மா சசிகலாவின் கையில் உள்ளது. சசிகலாவை சுப்ரீம் கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கில் மறுசீராய்வு மனு போட்டு விடுதலை செய்யுங்கள். குறைந்தபட்சம் பரோல் கிடைக்கச் செய்யுங்கள். இதைத்தான் சின்னம்மா கேட்கிறார். அவர் கேட்பதை நிறைவேற்றினால், அவர் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார்'' என சிரித்த முகத்துடன் சொல்லியிருக்கிறார். மத்திய அரசின் தேவை இதுதான்'' என்கிறார்கள்.

மத்திய அரசுடன் தம்பிதுரை, கேரள ஆளுநர் சதாசிவம், சுப்ரமணியசுவாமி ஆகியோர் மூலம் எடப்பாடி தொடர்புகொண்டு பேசுகிறார். "சசிகலா இல்லாத அ.தி.மு.க.தான் மத்திய அரசின் இலக்கு' என அவரிடம் வேறு முகத்தைக் காட்டுகிறது மத்திய அரசு. இந்த இரண்டையும் கேள்விப்பட்ட சசிகலா, எந்தக் காரணத்தைக் கொண்டும் அ.தி.மு.க. கட்சி தங்களது கட்டுப்பாட்டிலிருந்து போகக்கூடாது என மகாதேவன் மரண வீட்டிற்கு படத் திறப்பிற்குச் சென்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மூலம் திவாகரனிடம் பேசச் சொன்னார் சசிகலா. அதன்படி  திவாகரன், சசிகலாவின் எண்ண ஓட்டத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அத்தோடு சிறைக்குப் போன தினகரன் செய்த தவறுகளை சசிகலா மன்னித்துவிட்டார். இனி நடராஜன், திவாகரன், தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகிய அனைவரிடமும் "நமக்குள் இனி சண்டையில்லை' என குடும்பத்திற்குள் ஒரு சமாதான உடன்படிக்கையையும் ஏற்படுத்திவிட்டார்.

தற்பொழுது டி.டி.வி. தினகரன் கைது மட்டுமே மத்திய அரசின் தாக்குதலாக அமைந்துள்ள நிலையில்... அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும், "இனி மத்திய அரசை எதிர்த்து யாரும் பேசாதீர்கள்' என சமாதானப் புறாவை  பறக்கவிட்டுள்ளார் எடப்பாடி.ஜூலை மாதம் உள்ளாட்சித் தேர்தல். தேர்தல் கமிஷன் "இரட்டை இலை யாருக்கு' என தீர்ப்பு சொல்ல வேண்டும். அந்தத் தீர்ப்பு இரட்டை இலை முடக்கம் என்கிறபடி வருவதற்கு மத்திய அரசு அனைத்து வேலைகளையும் செய்துவருகிறது.

மத்திய அரசின் திட்டமான ஜெ. பணத்தில் நாற்பது சதவிகிதம், அ.தி.மு.க. அரசின் அதிகாரத்தில்  நாற்பது சதவிகிதம் வரவேண்டும் அல்லது சசிகலா அ.தி.மு.க.வை விட்டு ஒதுங்க வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்று நடக்கவில்லையென்றால் ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் வருமானவரித்துறை மற்றும் டெல்லி போலீசில் சிக்கிய அமைச்சர்களின் மேல் மத்திய அரசு ரெய்டு நடத்தும். அதைத் தொடர்ந்து தமிழக சட்டசபையை சஸ்பெண்ட் செய்யும். அதற்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலை பா.ஜ.க. அ.தி.மு.க. பன்னீர் -த.மா.கா. -பா.ம.க. என்ற கூட்டணியுடன் சந்திக்கும். இப்படித் திட்டங்கள் பல உள்ளன'' என்கிறார்கள் டெல்லி பா.ஜ.க.வினர்">இந்நிலையில் சசிகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.<>-தாமோதரன் பிரகாôஷ்<  நக்கீரன்

கருத்துகள் இல்லை: