வியாழன், 4 மே, 2017

பாமகவின் சாதி வெறி வெறியாட்டம் ... இந்துத்வா , இஸ்லாமிய வெறியை போலவே வன்னிய வெறியை ..


vini.sharpana:   இரு வருடங்களுக்குமுன் விருதாச்சலம் அருகே... டாஸ்மாக் குடியால் கணவனை இழந்து விதவைகள் அதிகமான ஒரு கிராமத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்தேன். வன்னிய சமூகத்தைச் சேர்ந்த, இளம் வயதிலேயே கணவரை இழந்து...தன் மகனுக்காகவே வாழ்ந்துவரும் 34 வயது இளம்பெண் ஒருவர் தனது வேதனைகளை பகிர்ந்துக்கொண்டதோடு முற்போக்காகவும் பேசினார். அவரது, மகன் அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். செய்தி சேகரித்துவிட்டு நான் சென்னை வந்து பல மாதங்களானபிறகும் அப்பெண் என்னுடன் நல்ல தொடர்பில் இருந்தார். மகனது கல்வி சம்மந்தமாக அடிக்கடி போன் செய்து ஆலோசனைகள் கேட்பார். ஒருநாள் இரவில் திடீரென போன் செய்து அழ ஆரம்பித்துவிட்டார். "என் பையன் நான் சொல்ற பேச்சை கேக்குறதே இல்ல. பா.ம.கவுல சேர்ந்து என்கிட்ட பொய் சொல்லி பணம் வாங்கிட்டுப்போய் பசங்கக்கூட சேர்ந்துக்கிட்டு கட்-அவுட் பேனர் வைக்கிறது... கட்சி டி- ஷர்ட்டை மாட்டிக்கிட்டு கொடியோடு ஊர் சுத்துறது மட்டுமில்லாம பயங்கரமா குடிக்கவும் ஆரம்பிச்சிட்டான். இதெல்லாம், வேணாம்டானு எவ்வளவோ சொல்லிப்பார்த்துட்டேன். என் பேச்சை கேக்கவே மாட்றான். சரியா படிக்கவும் மாட்றான். அவனுக்காகத்தான் நான் வாழ்ந்துட்டிருக்கேன். என்னப் பண்றதுன்னே தெரியல.
நீங்களாவது அவனுக்கு புத்திமதி சொல்லுங்க மேடம். அவன்கிட்ட போனை கொடுக்கிறேன்" என்றார் அழுதபடி. இளம் வயதிலேயே கணவனை இழந்து மறுமணம் செய்துக்கொள்ளாமல் அவனது எதிர்கால படிப்புக்காக கூலிவேலைக்குச் சென்று பணம் சேர்த்துவரும் அப்பெண்ணின் தியாகத்தை சொல்லியதோடு சாதியின் அபாயத்தையும் அவனிடம் எடுத்துச்சொன்னேன்.
பா.ஜ.க. எப்படி பெரும்பான்மையாக இருக்கும் இந்து மக்களின் ஓட்டுக்களைப்பெற இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும், பாகிஸ்தானை நம் பொது எதிரியாகவும் உருவாக்கி வைத்துள்ளதோ, அதே பாணியைத்தான் பா.ம.கவும் வன்னிய மக்களின் ஓட்டுகளைப்பெற தலித் மக்களை பொது எதிரியாக்கி ஓட்டுவாங்கி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறது. கிராமங்களில் ஆண்டப் பரம்பரை பெருமை பேசி சாதீய வெறியை ஊட்டி...வன்னிய இளைஞர்களின் இதயத்தில் சாதீத்தீயை பற்றவைத்துவிடுகிறார்கள். அந்த, நெருப்புத்தான் தலித்துகளை தீவைக்கத்தூண்டிக்கொண்டே இருக்கிறது. பண்ருட்டி அருகே ஏரிபாளையத்தில் நேற்று குடிநீர் எடுக்கச்சென்றதற்காக 20 தலித் வீடுகளை கொளுத்தி வாழ்வாதரத்தையே சிதைத்துவிட்டார்கள். நாயக்கன் கொட்டாயில் ஆரம்பித்து வைத்தது தமிழக கிராமமெங்கும் வீடுகொளுத்தும் பா.ம.க. பாணி பரவிக்கொண்டிருக்கிறது. மகனின் பதவி ஆசைக்காக சாதிவெறியை தூண்டிவிடும் ராமதாஸ் அண்ட்கோக்களின் வெறியை பாமகவில் இருக்கும் வன்னிய மக்கள் புரிந்துக்கொள்ளவில்லை என்றால் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதத்திற்கு பா.ம.க. தீவிரவாதம் துளியும் சளைத்ததல்ல என்றே சொல்லத்தூண்டுகிறது மனம்..! பிறப்பால் அனைவரும் மனித இனம் மட்டுமே...!  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: